2வது மூத்தோர் உலகக் கோப்பை கிரிக்கெட் ஆஸ்திரேலியா அணி சாம்பியன்

சென்னையில் நடைபெற்ற 60 வயதிற்கு மேற்பட்டோருக்கான மூத்தோர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இறுதி ஆட்டத்தில் இங்கிலாந்து அணியும் ஆஸ்திரேலியா அணியும் மோதின.

ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற இதில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 45 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 214 ரன்கள் எடுத்தது.
இங்கிலாந்து அணிக்கு மாண்டி டக்ளஸ் 56 ரன்கள் பெற்றுத்தந்தார். ஆஸ்திரேலியா அணியில் இருந்து பந்து வீசிய டோனி பனாசியோ 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இதனைத் தொடர்ந்து 215 ரன்கள் இலக்குடன் விளையாடிய ஆஸ்திரேலிய அணி 41. 5 ஓவர்களில் இரண்டு விக்கட்டுகளை மட்டுமே இழந்து 215 ரன்கள் குவித்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி கண்டு 2வது உலகக் கோப்பையை கைப்பற்றியது.

ஆஸ்திரேலிய அணிக்கு டேரன்ஸ்மித் 88 ரன்களும், கிரீம் பாவே 55 ரன்களும் பெற்றுத் தந்தனர்.

இங்கிலாந்து அணி ரன்னர் அப் கோப்பை பெற்றது.

இரண்டாவது உலகக்கோப்பை தொடர் நாயகன் விருதை நியூசிலாந்து வீரர் கிரேக் கிப், சிறந்த பேட்ஸ்மேன் விருதை வெஸ்ட் இண்டீஸ் வீரர் தியோ நரேன் தயால், சிறந்த பந்துவீச்சாளர் விருதை ஆஸ்திரேலிய வீரர் டோனி ஃபனாசியோ சிறந்த விக்கெட் கீப்பர் விருதை இங்கிலாந்து வீரர் ஸ்ரீ ஆஷ்டன் சிறந்த பீல்டருக்கான விருதை இதர உலக அணி வீரர் கிரீமா ஆகியோரும் வென்றனர்.

பரிசு கோப்பைகளை போட்டி குழு தலைவர் ரவி ராமனும், சிறந்த வீரர்களுக்கான விருதுகளை போட்டிக்குழு இயக்குனர் நீலகண்டனும் வழங்கினர்.
………

Comments (0)
Add Comment