விருஷபா – நவம்பர் 6 முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது!

இந்தியாவெங்கும் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள “விருஷபா” திரைப்படம் வரும் நவம்பர் 6, 2025 அன்று உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியிடப்படவிருப்பதாக தயாரிப்பாளர்கள் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். காதல், விதி, பழி ஆகியவை ஒன்றாக கலந்த ஒரு காவியமாக உருவாகியுள்ள இந்தப் படம், தந்தை–மகன் பந்தத்தின் ஆழத்தையும் உணர்வையும் வலியுறுத்துகிறது.

இப்படத்தின் தயாரிப்பாளரான ஏக்தா R கபூர் கூறியதாவது:

“எங்களின் மிக பிரம்மாண்ட படைப்பான ‘விருஷபா’ நவம்பர் 6 அன்று வெளியாக இருப்பதை அறிவிப்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம். இது என் மனதுக்கு நெருக்கமான கதை – அழுத்தமான எமோஷன், டிராமா, காதல் ஆகிய அம்சங்களுடன் இந்திய சினிமாவின் மாபெரும் காவியமாக உருவாகியுள்ளது. இப்படத்தை உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்களுக்கு  கொண்டு வர  வெகு ஆவலாக உள்ளோம்.”

இயக்குநர் நந்த கிஷோர் கூறியதாவது..,

“விருஷபா மூலம் எமோஷன் நிறைந்த பிரம்மாண்ட காவியத்தை  உருவாக்க விரும்பினோம். இது உறவுகள், தியாகம், விதி ஆகியவை மோதிக்கொள்ளும் ஒரு உணர்ச்சி மிகுந்த கதை. இப்படம் உருவாக படக்குழு முழுவதும்   மிகக் கடுமையாக உழைத்துள்ளனர். நவம்பர் 6, 2025 அன்று உலகம் முழுவதும் இதை பார்வையாளர்கள் காணப்போகிறார்கள் என்பது  எனக்கு பெரு மகிழ்ச்சி தருகிறது.

சமீபத்தில் வெளியிடப்பட்ட டீசர், போர்வீர அரசராக மோகன்லால் அவர்களை வலிமையான தோற்றத்தில் காட்டியது. “When Destiny Calls, Blood Must Answer” என்ற வாக்கியமும், “Reborn Love – A Love So Strong, It Defies Death” என்ற உணர்ச்சி பூர்வமான டேக்லைனும் ரசிகர்களை கவர்ந்தன. டீசரின் இறுதியில் கடந்தகாலம் மற்றும் நிகழ்காலம் ஒன்றிணையும் காட்சிகள் கதையின் இரு உலகங்களையும் சுவாரஸ்யமாக வெளிப்படுத்தியுள்ளது.

இப்படத்தில் மோகன்லாலுடன் சமர்ஜித் லங்கேஷ், ராகினி திவேதி, நயன் சரிகா ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர். மேலும் பல முக்கிய நடிகர்களும் இணைந்துள்ளனர். இசை – சாம் C.S., ஒலி வடிவமைப்பு – ரசூல் பூக்குட்டி, வசனம் – SRK, ஜனார்த்தன் மகரிஷி, கார்த்திக், ஸ்டண்ட் இயக்கம் – பீட்டர் ஹெய்ன், ஸ்டண்ட் சில்வா, நிகில்.

கனெக்ட் மீடியா ( Connekkt Media )மற்றும் பாலாஜி டெலிபிலிம்ஸ் (Balaji Telefilms Ltd), அபிஷேக் S வியாஸ் ஸ்டுடியோஸ் (Abishek S Vyas Studios)  நிறுவனங்கள் இணைந்து வழங்கும் இப்படத்தை, ஷோபா கபூர், ஏக்தா R கபூர், CK பத்மகுமார், வருண் மாதுர், சௌரப் மிஸ்ரா, அபிஷேக் S. வியாஸ், ப்ரவீர் சிங், விஷால் குர்னானி, ஜூஹி பாரேக் மேத்தா ஆகியோர் தயாரிக்கின்றனர்.

“விருஷபா” ஒரு தந்தை–மகன் பந்தத்தை மையமாகக் கொண்ட உணர்ச்சி பூர்வமான ஆக்ஷன் அதிரடி திரைப்படம். கதை சொல்லல், டிராமா, எமோஷன், காட்சியமைப்பு ஆகிய அனைத்திலும் இது மறக்க முடியாத சினிமா அனுபவமாக உருவாகியுள்ளது.

இப்படம் மலையாளம்  மற்றும் தெலுங்கில் ஒரே நேரத்தில் படமாக்கப்பட்டு, தமிழ், இந்தி மற்றும் கன்னடம் மொழிகளில் வெளியிடப்படுகிறது. இப்படம் உலகம் முழுக்க வரும் நவம்பர் 6, 2025 வெளியாகிறது.

Comments (0)
Add Comment