50 வருடங்களாக நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாகி உள்ள திரைப்படம் ” தடை அதை உடை “

1990களுக்கு முன்பு நடந்த உண்மைச் சம்பவத்தை கொண்டு உருவாக்கப்பட்டுள்ள திரைப்படம் ” தடை அதை உடை “
 
காந்திமதி பிக்சர்ஸ் என்ற  நிறுவனம் சார்பில் அறிவழகன் முருகேசன் தயாரித்துள்ள திரைப்படம் ” தடை அதை உடை “
 
 அங்காடித்தெரு திரைப்படத்தின் மூலம் நடிகரான பிரபலமான அங்காடித் தெரு மகேஷ், சமீபத்தில் வெளியான திருக்குறள் திரைப்படத்தில் இரண்டாவது கதாநாயகனாக நடித்த நடிகர் குணா பாபு, K.M.பாரிவள்ளல், திருவாரூர் கணேஷ், மஹாதீர் முகமது ஆகியோர் கதையின் நாயகர்களாக நடித்துள்ளனர்.
 
 மற்றும் இவர்களுடன் நாகராஜ், டெல்டா சரவணன், ஆம்பல் சதீஷ், M.K.ராதாகிருஷ்ணன், வேல்முருகன், காத்து கருப்பு கலை, பாக்கியம் கௌதமி, சுபா, சூரியப்ரதாபன் ஆகியோரும் நடித்திருக்கின்றனர்.
 
 தங்கப்பாண்டியன், சோட்டா மணிகண்டன் இருவரும் ஒளிப்பதிவு செய்துள்ளனர். அறிவழகன் பாடல் வரிகள் எழுத சாய் சுந்தர் இசையமைத்துள்ளார்.
 
 படத்தொகுப்பு  – டாய்சி 
 
கலை இயக்கம் – சிவகுமார்,மணி 
 
சண்டை பயிற்சி – அசோக் குமார் 
 
தயாரிப்பு மேற்பார்வை -வேல்முருகன்
 
நிர்வாக தயாரிப்பு – சாமிநாதன் நாகராஜன், காமராஜ் மற்றும் தமிழ்வாணன்
 
மக்கள் தொடர்பு – புவன் செல்வராஜ்
 
கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கி இருக்கிறார் பட்டுக்கோட்டையை சேர்ந்த அறிமுக இயக்குனர் அறிவழகன் முருகேசன்.  
 
 படம் பற்றி இயக்குனர் அறிவழகன் முருகேசன் பகிர்ந்தவை…
1990-களுக்கு முன் தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை தாலுகாவில் 50 வருட காலமாக கொத்தடிமையாக இருந்த ஒருவன் தன்னந்தனியாக போராடி தன் வம்சத்தை கல்விக்கு திருப்பிய உண்மைக்கதையையும், சமகாலத்தில் சோசியல் மீடியா, கல்வி மற்றும் அரசியலில் நேரடியாகவும் மறைமுகமாகவும் செய்யும் மாற்றங்கள் மக்களை எப்படி பாதிக்கிறது என்பதையும் மிக சுவாரஸ்யமாக சொல்லும் திரைப்படம் இது. அத்துடன் சேர்ந்து தஞ்சையின் பண்பாடு, மக்கள் மற்றும் கலாச்சாரம் ஆகியவற்றை யாரும் சொல்லாத வகையிலும், நெற்களஞ்சிய மக்கள் பெருமிதம் கொள்ளும் வகையிலும் சொல்லியிருப்பதாகவும் கூறுகிறார்.
 
இத்திரைப்படம் அனைத்து வயதினருக்கும் பிடிக்கும் வகையில் விறுவிறுப்பாக திரைக்கதை செய்யப்பட்டு படமாக்கப்பட்டிருக்கிறது என படக்குழுவினர் தெரிவிக்கின்றனர்.
 
மேலும் இத்திரைப்படம் இரண்டு நேர்-எதிர் காலங்களில் நடப்பதாலும், நிறைய நடிகர்கள் உருவமாற்றம் செய்ய வேண்டி இருந்ததாலும் இரண்டரை வருடங்கள் படப்பிடிப்பு செய்யப்பட்டிருப்பதாகவும் படக்குழுவினர் தெரிவிக்கின்றனர். இத்திரைப்படம் 2025 அக்டோபர் மாதம் தமிழ்நாடு முழுவதும் திரையரங்குகளில் வெளியிடப்பட இருப்பதை படக்குழு உறுதி செய்துள்ளது.
Comments (0)
Add Comment