ஆதரவற்ற நிலையில் நடிகர் அபிநய்… ஓடி உதவிய நடிகர் தக்‌ஷன் விஜய்!

கல்லீரல் பாதிப்பால் அவதிப்பட்டு வரும் ‘துள்ளுவதோ இளமை’ நடிகர் அபிநய் மருத்துவச் செலவிற்கு நடிகர் தக்‌ஷன் விஜய் உதவினார்!

துள்ளுவதோ இளமை, ஜங்ஷன், தாஸ் ஆகிய படங்களில் நடித்த அபிநய், கல்லீரல் முற்றிலும் பாதிக்கப்பட்டு, மாற்று கல்லீரல் அறுவை சிகிச்சைக்காக காத்திருக்கிறார். இதை அறிந்த ‘கபளிஹரம்’ படத்தின் கதாநாயகன் தக்‌ஷன் விஜய் நேரில் சென்று, நலம் விசாரித்துவிட்டு, மருத்துவச் செலவிற்கு கணிசமான பணம் மற்றும் அவருக்கு தேவையான சில பொருட்கள் கொடுத்து ஆறுதல் கூறினார்!

20 கிலோ எடை குறைந்து பரிதாபமான நிலையில் இருக்கும் அபிநய்க்கு கல்லீரல் மாற்று ஆப்ரேஷன் நடக்கும் போது, மேலும் பொருளாதார உதவிகள் செய்கிறேன். தைரியமாக இருங்கள். நலமாகி மீண்டும் நடிப்பீர்கள் என தன்னம்பிக்கை கொடுத்தார்!

தக்‌ஷன் விஜயிடம் இருந்து பணத்தைப் பெற்றுக் கொள்ளும் போது, அபிநய் கண்ணீர் விட்டு அழுதார்! ‘எனக்கு இந்த நிலைமை வரும் என்று எதிர்பார்க்கவில்லை. அம்மா, அப்பா, பொண்டாட்டி, பிள்ளை, உறவினர்கள் யாரும் இல்லை. நான் அனாதையாக இருக்கிறேன்’ என மனம் கலங்கினார்! அதற்கு, தக்‌ஷன் விஜய் எதற்கும் கவலைப்படாதீர்கள். ‘நலமாகி மீண்டும் நடிக்க வருவீர்கள்’ என்று ஆறுதல் கூறினார்!

@GovindarajPro

#Abhinay
#Actor_Abhinay
#Dhakshan_Vijay
#Actor_DhakshanVijay
#PRO_Govindaraj

Comments (0)
Add Comment