அடையார், சென்னை – பாட்ரிசியன் கலைமற்றும் அறிவியல் கல்லூரியின் வெள்ளி விழா விழாக்கள் விமர்சையாக தொடக்கம்
பாட்ரிசியன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் வெள்ளி விழா தொடக்க விழா ஆகஸ்ட் 1, 2025 வெள்ளிக்கிழமை காலை 9:00 மணிக்கு செயிண்ட் பேட்ரிக் அரங்கத்தில் நடைபெற்றது. தமிழ் தாய் வாழ்த்து மற்றும் பிரார்த்தனையுடன் நிகழ்வு தொடங்கியது, அதைத் தொடர்ந்து மாணவர்கள் வரவேற்பு நடனம் நடத்தினர்.
செயிண்ட் பேட்ரிக் சகோதர்கள் சபை ,இந்தியா மற்றும் கானாவின் துணை மாகாணத் தலைவர் அருட்சகோதரர். டாக்டர் எஸ். அரோக்கியராஜ் அவர்கள் அனைவரையும் வரவேற்றார்.இவர் உரையாற்றும் போது உயர்கல்வித் துறையில் கல்லூரியின் 25 ஆண்டுகால வளர்ச்சி மற்றும் சேவைப் பயணத்தை நினைவுகூர்ந்தார்.
இந்த நிகழ்வில் பல சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொண்டு வாழ்த்துறை வழங்கினார்கள்.கல்லூரி பாடகர் குழு வெள்ளி விழாவுக்கென்று தனியாக ஒரு வாழ்த்துப்பாடல் உருவாக்கியது.அப்பாடலை தமிழ்நாடு அரசின் தொழில்நுட்பக் கல்வி ஆணையர் திருமதி ஜே. இன்னசென்ட் திவ்யா, ஐ.ஏ.எஸ் அவர்கள் வெளியிட்டு உரையாற்றினார். அவர் உரையாற்றும் போது நான் முதல்வன் திட்டத்தின் முக்கியத்துவத்தையும், இன்றைய போட்டி உலகில் வெற்றிபெறத் தேவையான திறன்களை மாணவர்கள் வளர்க்க இது எவ்வாறு உதவுகிறது என்பதையும் அவர் எடுத்துரைத்தார். இதைத் தொடர்ந்து தமிழ்நாடு அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் டாக்டர் ஜே. ராதாகிருஷ்ணன் , ஐ.ஏ.எஸ். வெள்ளி விழாக் கொடி மற்றும் பேட்ஜை வெளியிட்டார்.
கல்வி மற்றும் மாணவர் வளர்ச்சியில் கல்லூரியின் முயற்சிகளை அவர் பாராட்டினார். மேலும் மாணவர்கள் பெரியவர்களை மதித்து, கருணை மற்றும் புரிதலுடன் வாழ வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.
வெள்ளிவிழா சிறப்பு அஞ்சல் தலையை மேஜர் மனோஜ் எம் வெளியிட்டு உரையாற்றும் போது பாரம்பரியத்தை புதுமையுடன் இணைப்பதில் கல்லூரியின் முயற்சிகளுக்கு தனது பாராட்டுகளைத் தெரிவித்தார்.
வெள்ளி விழா காபி டேபிள் புத்தகத்தை கொரியா குடியரசின் தூதர் திரு. சாங் நியுன் கிம் வெளியிட்டார் , அவர் உலகளாவிய கல்வி மற்றும் கலாச்சார பரிமாற்றத்தின் முக்கியத்துவம் குறித்து பேசினார். பல ஆண்டுகளாக கல்லூரியின் வளர்ச்சி மற்றும் வரலாற்றைப் படம்பிடித்து சிறப்பாக தயாரிக்கப்பட்ட ஆவணப்படத்தை பிரபல திரைப்பட இயக்குனர் திரு. ராஜ்குமார் பெரியசாமி வெளியிட்டார் . படைப்பாற்றல் மற்றும் ஒழுக்கம் இரண்டையும் வளர்க்கும் கல்வி நிறுவனமாக இக்கல்லூரி உள்ளது என்றார்.
இந்நிகழ்ச்சியில் சென்னைப் பல்கலைக்கழகப் பதிவாளர் பேராசிரியர் ரீட்டா ஜான் கலந்து கொண்டு, கல்லூரியின் சாதனைகள் மேலும் இக்கல்லூரி பல்கலைக்கழக அமைப்பிற்கு ஆற்றிய பங்களிப்பை எடுத்துரைத்து உரையாற்றினார்.
விழாவின் சிறப்பம்சமாக வெள்ளி விழா கல்வெட்டு திறப்பு விழா நடைபெற்றது, அதைத் தொடர்ந்து தமிழ்நாடு அரசின் உயர்கல்வி அமைச்சர் டாக்டர் கோவி செழியன் அவர்கள் தலைமை விருந்தினர் உரை நிகழ்த்தினார். தனது சிறப்புரையில் உயர்கல்வியில் சமத்துவத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய அவர், தமிழக அரசின் தொலைநோக்குப் பார்வைக்கு ஏற்ப சிறுபான்மை நிறுவனங்கள் திராவிட மாடலின் கொள்கைக்கேற்ப இணைந்து செயலாற்றுகின்றனர். மாணவர்களின் வேலைவாய்ப்புத் திறனை மேம்படுத்தவும், திறன் இடைவெளிகளைக் குறைக்கவும் தொடங்கப்பட்ட நான் முதல்வன் திட்டத்தின் சிறப்பினை எடுத்துரைத்தார்.
பாட்ரிசியன் கல்லூரியின் இயக்குநர் மற்றும் செயலாளரான சகோதரர் ரமேஷ் அமலநாதன் அவர்கள் உயர்கல்வித்துறை அமைச்சர் உள்ளிட்ட சிறப்பு விருந்தினர்கள் மற்றும் ஊழியர்கள், மாணவர்கள், முன்னாள் மாணவர்கள் மற்றும் நலம் விரும்பிகள் என வருகைத்தந்த அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.
இந்நிகழ்வைத்தொடர்ந்து பாரம்பரிய நடைப்பயணத்துடன் கொண்டாட்டங்கள் தொடர்ந்தன , இதை சென்னை பல்கலைக்கழக பதிவாளர் பேராசிரியர் ரீட்டா ஜான் கொடியசைத்து தொடங்கி வைத்தார் .
இந்த நடைப்பயணம் நிறுவனத்தின் வேர்களைக் குறிக்கும் A Block – The Foundation Block இல் தொடங்கியது. இரண்டாவதாக செயிண்ட் பேட்ரிக்கின் சகோதரர்கள் சபையின் முன்னால் மாகாணத் தலைவர் சகோதரர் கிறிஸ்டோபர் டாவ்ஸ் அவர்கள் The Patrician Tunnel – Gallery of Visionaries திறந்துவைத்து பார்வையிட்டார்.
மூன்றாவதாக செயிண்ட் மைக்கேல்ஸ் அகாடமியின் முதல்வர், சகோதரர் நவீன் F அவர்கள் C Block – The Legacy Corner யை திறந்து வைத்தார்.இது கல்லூரியின் கடந்த கால மைல்கற்களைக் காட்சிப்படுத்தியது.தி க்ரோட்டோ – ஜூபிலி இடத்தை திறந்த வைத்த ஊடக பிரபலம் திருமதி. நசிஹா அகமது நிறுவனத்தின் வளர்ச்சி குறித்த தனது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார்.
கல்லூரியின் 24 ஆண்டுகளின் வளர்ச்சிப் பயணத்தை புகைப்படங்களாக காட்சிப்படுத்தியிருந்தனர்.இப்புகைப்பட கண்காட்சியை சகோதரர் டாக்டர் எஸ். ஆரோக்கியராஜ் அவர்கள திறந்துவைத்தார். மேலும் இந்திய நடிகையும் தொழில்முனைவோருமான திருமதி. ஷைலஜா செட்லூர் வாழ்த்துரை வழங்கினார்.
வெள்ளி விழாஆண்டின் தொடக்க விழா நிகழ்வு பாட்ரிசியன் கல்லூரியின் 24 ஆண்டுகளின் பயணத்தையும் அதன் எதிர்காலத்திற்கான தொலைநோக்குப் பார்வையையும் கொண்டாடும் விதத்தில் அமைந்தது.