சென்னை: ஜுலை 23, 2025: ஜேஎஸ்டபுள்யூ எம்ஜி மோட்டார் இந்தியா நிறுவனம், எம்ஜி செலக்ட் என்பதன் வழியாக ஆட்டோமோட்டிவ் துறையில் புதுயுக ஆடம்பர சொகுசு வசதியை அறிமுகம் செய்கிறது. அதன் அடிப்படையில், சென்னை மாநகரில் அதன் முதல் எக்ஸ்பீரியன்ஸ் சென்டரை திறந்திருக்கிறது. ‘ரீஇமேஜினிங் லக்ஸரி’ கோட்பாட்டை செயல்படுத்தும் விதமாக, எம்ஜி செலக்ட் எக்ஸ்பீரியன்ஸ் சென்டர்கள் புலன் சார்ந்த அனுபவங்களையும், தனிப்பயனாக்கப்பட்ட சேவைகளையும் புகழ்பெற்ற புராடக்ட்களின் தொகுப்பையும் வழங்கும். இந்தியாவில் கார் வாங்குபவர்களுக்காக இவைகளோடு சேர்த்து, புதுயுக சொகுசு வசதி, புத்தாக்க முயற்சிகள் மற்றும் நிலைப்புத்தன்மை ஆகியவற்றையும் கலந்து இம்மையம் வழங்குவது குறிப்பிடத்தக்கது.
ஜேஎஸ்டபுள்யூ எம்ஜி மோட்டார் இந்தியா – ன் நிர்வாக இயக்குனர் திரு. அனுராக் மெஹ்ரோத்ரா பேசுகையில், “இந்தியாவில் சமீப ஆண்டுகளில் லக்ஸரி (சொகுசு) கார்களை வாங்கும் போக்கு பிரமாண்டமான வளர்ச்சியைப் பெற்றிருக்கிறது. இத்தகைய சூழலில் கார்களை சொந்தமாக வாங்கும் வாடிக்கையாளர்களது பயணத்தில் அதனை மறுவரையறை செய்வது மற்றும் மேம்படுத்துவதன் வழியாக சொகுசு கார் வாங்குபவர்களுக்கு ஒரு தனிச்சிறப்பான சூழலையும் எம்ஜி செலக்ட் வழியாக உருவாக்குவதே எமது நோக்கமாகும். இந்திய சொகுசு கார்கள் பிரிவையும், சூழலையும் மறுவரையறை செய்வது என்ற எமது தொலைநோக்கு திட்டமானது, எமது டீலர் பார்ட்னர்கள் எண்ணங்களுக்கு இணக்கமானதாக இருக்கிறது. எனவே, நாங்கள் ஒருங்கிணைந்து, இத்தளத்தில் புதிய அளவுகோல்களை நிறுவுவோம்; தொழில்நுட்ப ரீதியில் மேம்பட்ட தயாரிப்புகளையும் மற்றும் பிரத்யேக அனுபவங்களையும் வழங்குவதன் மூலம் இந்த இலக்கு எட்டப்படும்.” என்று கூறினார்.
ஒவிய – கலைக்கூடங்களில் புறவெளி அம்சத்திலிருந்து உந்துதல் பெற்றிருக்கும் எம்ஜி செலக்ட் எக்ஸ்பீரியன்ஸ் சென்டர்கள், உன்னதமான, மண் சார்ந்த மற்றும் முடிவில்லாத வெண்ணிறப் பரப்புகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு ஷோரூமும் தெளிவையும், தடையற்ற போக்கு உணர்வையும் வழங்கும் ஒரு வியத்தகு கனவுலகமாகத் திகழ்கிறது. “குறைவானதே அதிகமான” என்ற தனித்துவமான கொள்கையைக் கொண்டிருக்கும் இந்த எக்ஸ்பீரியன்ஸ் சென்டரில், ஒரு அழகான சிற்பக் கலைப் படைப்பாக மைய இடத்தில் கார் காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது. இது, கார் வாங்குவோரை பரவசப்படுத்தி, மெய்மறக்கச் செய்கிறது.
எம்ஜி செலக்ட் சென்னை – ன் டீலர் பிரின்சிபல் திரு, வினய் மோகன் கூறியதாவது: “சென்னையிலுள்ள எமது அறிவார்ந்த வாடிக்கையாளர்களுக்கு ஆட்டோமோட்டிவ் துறையின் ஆடம்பரம் மற்றும் சொகுசு வசதி என்ன என்பதை மறுவரையறை செய்வதற்கு வழக்கமான ஷோரூம் அனுபவத்திலிருந்து இந்த மையம் மாறுபட்டு தனிச்சிறப்பானதாக திகழ்கிறது. ஒவ்வொரு வாடிக்கையாளரின் விருப்பங்களும், கனவுகளும் பூர்த்தியாகின்ற மற்றும் அவர்களது பற்றுறுதியும், ஆதரவும் உண்மையிலேயே போற்றி கொண்டாடப்படுகின்ற ஒரு சமூகத்தையும் இம்மையம் உருவாக்கும்.”
சென்னை மாநகரின் மையப் பகுதியான நந்தனம், அண்ணா சாலையில், எம்ஜி செலக்ட் சென்னை இன்று கோலாகலமாக தொடங்கப்படுகிறது. இதன்மூலம் 2025 காலண்டர் ஆண்டில் 3வது காலாண்டின் இறுதிக்குள், சென்னை உட்பட 13 முக்கியமான நகரங்களில் இந்த சொகுசு கார்களுக்கான பிராண்டு 14 எக்ஸ்பீரியன்ஸ் மையங்களை தொடங்கவிருக்கிறது. உலகின் மிக வேகமான எம்ஜி என புகழ்பெற்றிருக்கும் எம்ஜி சைபர்ஸ்டெர் மற்றும் பிரசிடென்ஷியல் லிமோசின் என அழைக்கப்படும் MG M9ஆகிய கார்கள் இம்மையத்தில் காட்சிப்படுத்தப்பட்டிருக்கின்றன. கார் ஆர்வலர்களும், வாடிக்கையாளர்களும் இவற்றை மிக நெருக்கமாக பார்வையிடவும், நிகரற்ற இனிய அனுபவத்தைப் பெறவும் வேண்டுமென்பதே இந்த எக்ஸ்பீரியன்ஸ் சென்டரின் நோக்கமாகவும், செயல்திட்டமாகவும் இருக்கிறது.