சமூக சிந்தையுள்ள படம் ” நெஞ்சு பொறுக்குதில்லையே “

9
நவரச கலைக்கூடம்” என்ற புதிய பட நிறுவனம் சார்பில் கிருஸ்துதாஸ், யோபு சரவணன், பியூலாகிருஸ்துதாஸ் மூவரும் இணைந்து தயாரித்துள்ள படத்திற்கு
மகாகவி பாரதியாரின் கவிதை மொழியில் இடம்பெறும் “நெஞ்சு பொறுக்குதில்லையே” என்ற வசனத்தை தலைப்பாக வைத்துள்ளனர்.
 
அன்பே வா, பாவம் கணேசன் சில்லுனு ஒரு காதல் போன்ற சின்னத்திரை  தொடர்களில் நடித்த
அரவிந்த் ரியோ மற்றும் காளிதாஸ்  இருவரும் கதாநாயகர்களாக அறிமுகமாகிறார்கள்.
 
கதாநாயகிகளாக கனா காணும் காலங்கள் தொடரில் நடித்த புவனேஸ்வரி ரமேஷ் பாபு மற்றும் சூரியவம்சம், என்றென்றும் புன்னகை, எங்க வீட்டு மீனாட்சி போன்ற சின்னத்திரை தொடர்களில் நடித்த நித்யாராஜ் இருவரும் கதாநாயகிகளாக அறிமுகமாகிறார்கள். மற்றும் ஜேஷன் கௌசி, சசிகுமார் உட்பட  பலர் நடித்துள்ளார்கள்.
 
இத்திரைப்படத்தின் தயாரிப்பாளர்  கிறிஸ்துதாஸ் இந்த படத்தில் வில்லனாகவும் நடிப்பு அவதாரம் எடுத்திருக்கிறார்.
 
இசை –  எம்.எல்.சுதர்சன்,
பின்னணி இசை ஜெயக்குமார்.
ஒளிப்பதிவு –  அப்துல் கே. ரகுமான்
படத்தொகுப்பு – முத்துமுனியசாமி
பாடல்கள் – மௌனிகா.M , ரஜ்னிவேல்.P
ஸ்டண்ட் – லீ முருகன்
நடனம் – நித்தின்
மக்கள் தொடர்பு – புவன் செல்வராஜ்
இணை தயாரிப்பு – யோபு சரவணன், பியூலாகிருஸ்துதாஸ்
தயாரிப்பு – கிங்மேக்கர் கிருஸ்துதாஸ்.
கதை, திரைக்கதை, வசனம் எழுதி இருவர் என்ற புனைப் பெயரில் 
பிளஸ்ஸோ ராய்ஸ்டன்,
கவிதினேஷ்குமார்  இருவரும் இணைந்து இயக்கியுள்ளார்கள்.
 
படம் பற்றி இயக்குனர்கள் இருவர் பகிர்ந்த்வை ….
 
வீட்டை விட்டு வெளியேறும் காதலர்கள் சந்திக்கும் பிரச்சனையை மையமாக வைத்து சமுகத்தில் நடக்கும் அவலங்களையும், இன்று இளைஞர்களின் மனநிலையையும் வெளிப்படுத்தும் ஒரு சமுக சிந்தனை உள்ள திரைப்படம் இது.
 
படப்பிடிப்பு முழுவதும் கேரளா மாநிலத்தின் புனலூர், உப்புகுளி உள்ளிட்ட  இயற்கை எழில் நிறைந்த மலைப் பகுதிகளில் படமாக்கப்பட்டுள்ளது. படம் டிசம்பர் மாதம் திரையரங்குகளில் வெளியாகிறது
என்றனர் இயக்குனர்கள் இருவர்.