எஸ்.பி.எம் 1 தி பாஸ்ட் (SBM 1 THE PAST) ——————————————- (க்ரைம் திரில்லர் ஆக்ஷனில் ரஞ்சித்)

86

ஒரு கிராமத்தில் ஒரு கொலை நடைபெறுகிறது. அக்கொலையை கண்டுபிடிக்க செல்லும் பொழுது தோண்ட தோண்ட சுரங்கம் போல் அடுத்தடுத்து கொலை குற்றம் என்று நீண்டு கொண்டே செல்கிறது. இதை எவ்வாறு கண்டுபிடித்து கண் முன்னே நிறுத்துகிறார்கள் என்பதை மூன்று விதமான காலகட்டங்களில் நிகழும் குற்ற
சம்பவங்களாக திரைக்கதை பின்னப்பட்ட உருவாக்கப்பட்ட கதைகளம் என்கிறார் இயக்குனர் சி.தேவநந்தன்.

ட்ரீம் வேர்ட்ஸ் தயாரிப்பில் பிரபல முன்னணி நடிகர் ரஞ்சித் கதாநாயகனாக நடிக்க சி.தேவந்தன் இயக்கியிருக்கிறார்

கதாநாயகன் ரஞ்சித்துடன் காயத்ரி ரெமோ நாயகியாக நடித்திருக்கிறார்.
மீசை ராஜேந்திரன் யாமினி,பிரேம்குமார் விஜயகுமார்,ராஜ்குமார் ஆகியோருடன் படத்தின் இயக்குனர் தேவநந்தன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

ஒளிப்பதிவு-
விஜயன், அண்ணாதுரை, டைட்டன் முருகேஷ்

இசை–திவாகர்
பின்னணி இசை – ஆரோன்

பாடல்கள்-
சோமன் சந்திரமதி

எடிட்டிங் -துரைராஜ்
நடனம்– என்.சி.கே ராஜ்
சண்டை பயிற்சி- பேராச்சி பாண்டியன்
மக்கள் தொடர்பு – வெங்கட்

தயாரிப்பு –
ட்ரீம் வேர்ட்ஸ்

கதை திரைக்கதை வசனம் இயக்கம்
சி.தேவநந்தன்

படத்தில் ஐந்து பாடல்களும், மயிர் கூர்ச்செரியும் நான்கு
சண்டைக் காட்சிகளும்இடம் பெற்றுள்ளன.

ஓரப்பார்வை பாத்துபுட்டாலே …

என் முத்த சத்தத்தில் …என்ற இரண்டு இனிமையான பாடல்களும்,

சிங்காரியா சிருங்காரியா…என்ற துள்ளல் இசை பாடலும் படத்திற்கு பக்க பலமாக இருக்கும் என்கின்றனர் படக் குழுவினர்.

இப்படத்தின் ட்ரெய்லர் வலைதளத்தில் வெளிவந்து அதிக ரசிகர்களின் பார்வையை கவர்ந்துள்ளது

இப்படம் டிசம்பரில் வெளியிடத் திட்டமிடப்பட்டுள்ளது