நடிகர் ஜனகராஜ் குரலில் Coins “செல்லுமா செல்லும்” பாடல்

77

பத்து ரூபாய் நாணயத்திற்கு பின்னால் இருக்கும் பொருளாதார அரசியலை வெளிக்கொண்டு வரும் விதமாக “COINS” திரைப்படத்தை இயக்கவிருக்கிறார் இயக்குனர் சக்திவேல் தங்கமணி.

“காற்றில் கலைந்த கனவு” என்னும் ஆவணப்படம், “பசி என்கிற தேசிய நோய்” என்னும் Documentary Drama Movie மூலம் தனது இயக்குனர் திரை பயணத்தை துவங்கிய சக்திவேல் தங்கமணி, தற்போது அவரது இயக்கத்தில் “செல்லுமா? செல்லும்” என்று தொடங்கும் ப்ரோமோ பாடலை அவரே எழுதி, hamara cv இசையில் நடிகர் ஜனகராஜ் மற்றும் அவரது மகன் நவீன் ஜனகராஜ் இருவரையும் பாட வைத்து CV RECORDS Music Label மூலம் Coins Promo பாடலை வெளியிட்டுள்ளார்.

Coins Promo பாடல் வீடியோவில் “ஐயா பத்து ரூபா காய்ன்ஸ் பத்தி, மக்களுக்கு உங்க ஸ்டைல்ல உங்க வாய்ஸ்ல கொஞ்சம்” என்று Director Sakthivel Thangamani தொடங்க, “தோ வன்டேன் நைனா” என்கிற உற்சாகமான குரலில் “செல்லுமா செல்லும், பத்து ரூபா காசு செல்லும்” என்று பாட துவங்குகிறார் Janagaraj.

வயது முதிர்ச்சியின் காரணமாக நடிகர் ஜனகராஜ் உடல் மெலிந்திருந்தாலும், 80-களில் நாம் கேட்ட அதே புத்துணர்ச்சியுடன் பாடலை பாடி அசத்தியுள்ளார். மேலும் அவரது மகன் நவீன் ஜனகராஜ் RAP பாடி அசத்தியுள்ளார். இருவரும் சேர்ந்து பத்து ரூபாய் coins செல்லுமா செல்லும் பாடல் மூலம் ரசிகர்களை குத்தாட்டம் போட வைக்கின்றனர்.

இப்பாடல் மூலம் மக்களுக்கு 10 ரூபாய் Coins செல்லும் என்கின்ற விழிப்புணர்வு நிச்சயம் ஏற்படுத்தும்.