உலகளாவிய பிராண்டுகளின் தலைவர் போர்டுரூமைத் தாண்டிச் சொல்லும் வாழ்க்கைப் பதிவுகள் -” யூ‌‌ டர்ன்” நூல் சார்ஜா புத்தக கண்காட்சியில் நாளை வெளியீடு

மெடிமிக்ஸ் சோப் உரிமையாளர் டாக்டர் அனூப் அவர்களின் நூல் 

94,650

 

மெடிமிக்ஸ் சோப்பு மற்றும் மேளம் மசாலா தயாரிக்கும் நிறுவனங்களின் குழுமமான A.V.A குழும நிறுவனங்களின் உரிமையாளர்.. கொச்சியில் உள்ள சஞ்சீவனம் ஆயுர்வேத மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் உரிமையாளர். ஒரு தொழிலதிபராக, நாடகங்கள் மற்றும் திரைப்படங்களில் நடிகராக மற்றும் ஒரு சமூக சேவகராக தனது திறமையை நிரூபித்தவர் . அவரின் வாழ்க்கை பதிவுகள் என்கிற தமிழில் மொழி பெயர்க்க பட்டுள்ளது.

நாளை துவங்க உள்ள புகழ்பெற்ற ‌பெருமைகளை கொண்ட ‌அமீரக -சார்ஜா புத்தக கண்காட்சி வெயிட‌ படுகிறது

யார் இந்த டாக்டர்‌ அனூப்.

கொச்சியில் உள்ள சஞ்சீவனம் ஆயுர்வேத மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் உரிமையாளர் மட்டுமல்ல பல துறை சாதனையாளர் என்றே சொல்லாம் ‌.இவரது தீராத கலை தாகம் பல திரைப்படங்கள் மட்டுமில்லாது ஆவண படங்களை தயாரித்தவர்.

பல மாநில, தேசிய மற்றும் சர்வதேச விருதுகள் மற்றும் அங்கீகாரங்களைப் பெற்ற A.V.A புரொடக்ஷன்ஸ் பேனரின் கீழ் குறிப்பிடத்தக்க திரைப்படங்கள், ஆவணப்படங்கள் மற்றும் குறும்படங்களையும் இவர் தயாரித்துள்ளார். மலையாளத் திரைப்படமொன்றில் சிறப்பாக நடித்ததற்காக அவர் 2023ம் வருடத்தின் கேரள திரைப்பட விமர்சகர் விருதையும் பெற்றுள்ளார். சமீபத்தில் வேட்டையன் திரைப்படத்தில் நீதிபதியாக நடிகர் ரஜினிகாந்துடன் நடித்திருந்ததார்.

 

கொழும்பில் அமைந்துள்ள( மாற்று) இணை மருத்துவத்துக்கான சர்வதேச திறந்தவெளி பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் கல்வி நிறுவனங்களுள் ஒன்றான மெடிசினா ஆல்டர்னேட்டிவாவில் தத்துவியலுக்கான முனைவர் பட்டம் பெற்றவர்.

ஸ்ரீநாராயண குருதேவனின் போதனைகளைப் பரப்புவதில் இவர் ஆற்றிய சேவைகளுக்காக பல விருதுகளைப் பெற்றுள்ளார். குடும்ப மதிப்புகள் பற்றிய சிறந்த திரைப்படத்திற்கான தேசிய விருதையும், குறுகிய காலத்தில் தயாரிக்கப்பட்டு வெளியான திரைப்படத்திற்கான கின்னஸ் உலக சாதனையையும் படைத்துள்ளார்.

எண்ணற்ற‌ விருதுகளுக்கு சொந்தகாரர்- டாக்டர் அனூப்,

. மகாத்மா காந்தி அமைதி அறக்கட்டளை விருது,

ஏ.பி.ஜே.அப்துல் கலாம் விருது

மற்றும் செஞ்சிலுவை சங்க விருது ஆகிய விருதுகளை பெற்றுள்ளார்.

சென்னையில் கடந்த நாற்பதாண்டுகளாக வசித்துவரும்

பல்துறை வித்தராகான அனூப் இந்திய யூரேசியா வர்த்தக கவுன்சிலின் தலைவராக 2023ல்நியமிக்கப்பட்டார்.

ஆழ்ந்த தொழில் அனுபவம் நேர்த்தியான அனுகுமுறை யென அனைத்தும் யூ டர்ன் ஏ.வி அனூப் என்கிற புத்தகம் வழியாக – துன்பங்களின் எல்லைகளைக் கடந்து நம்பிக்கையுடன் முன்னேறி வெற்றியைப் பெற்ற ஒரு மேதையின் உத்வேகமான வாழ்க்கைத் தருணங்களையும் .. அற்புதமான அனுபவங்களையும் அடுக்கி வைத்திருக்கிறார்.Dr.அனூப் மெடிமிக்ஸ்

மெடிமிக்ஸ் தலைவர்களில் ஒருவரான ஏ.வி. அனுபின் வாழ்க்கைப் பதிவுகள் வாசகர்கள் முன்வைக்கப்படுகிறது… நாடக மற்றும் திரைப்பட நடிகர், கலாச்சார ஆர்வலர், கொடையாளர் மற்றும் திரைப்படத் தயாரிப்பாளர் என அவரது ஒவ்வொரு அனுபவத்தையும் வாசகர்களுக்கு வெளிப்படுத்தும் நூலாக அமைந்துள்ளது..

இந்த நூல் ஆசிரியர் பற்றி‌ நாடாளுமன்ற உறுப்பினர் சசிதரூர் குறிப்பிடுகையில்,

யூடர்னில், நம்முடன் ஒரு அன்பான மற்றும் உறுதியான ஹீரோ இருக்கிறார். அவர் ஒருபோதும், வாய்ப்பிருந்தாலும் கூட எளிதான வழியைத் தேர்ந்தெடுக்கவில்லை. தனது கடின உழைப்பு மற்றும் கத்தியைப் போன்ற கூர்மையான மனதினால் எப்போதும் உயர்ந்த உயரங்களை அடைய முயற்சி செய்கிறார். அனூப் ஒரு திரைப்படத் தயாரிப்பாளராக மட்டுமே இருந்திருந்தால் கூட இந்தச் சாதனைகள் பொறாமைப்படக் கூடியதாக இருந்திருக்கும்; ஆனால் அவரோ ஒரே நேரத்தில் ஒரு முன்னணி தொழில் முனைவோர், கல்வியாளர், பரோபகாரம் மற்றும் சமூக சேவகர் என்பது அவரை உண்மையிலேயே அசாதாரண மானவராக்குகிறது யென பதிவு செய்து உள்ளார்.