வேளாங்கண்ணி பேராலயத்தில் நடைபெற்ற கல்லறை திருநாள் சிறப்பு திருப்பலியில், யுத்தம் மற்றும் சுனாமியால் உயிரிழந்தோர்க்கு மலர் வளையம் வைத்து மெழுகுவர்த்தி ஏந்தி, பாதிரியார்கள் மற்றும் உறவினர்கள் மனமுருகி பிரார்த்தனை.

36

கிறிஸ்தவ மதத்தில் இறந்தவர்களை நினைவுகூரும் வகையில் ஆண்டு தோறும் நவம்பர் 2-ம் தேதி கல்லறைத் திருநாள் அனுசரிக்கப்படுகிறது. உயிர் நீத்தவர்களின் ஆன்மாவிற்கு மரியாதை செலுத்தும் தினமான இன்று நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் கல்லறை திருநாள் நடைபெற்றது. அப்போது இஸ்ரேல்- பாலஸ்தீனம் மற்றும் ரஷ்யா-உக்ரைன் ஆகிய நாடுகளில் போர் முடிவு பெற்று அமைதி திரும்ப வேண்டியும், யுத்தத்தினால் மாண்டவர்கள் மற்றும் முன்னோர்களின் ஆன்மா சாந்தியடைய வேண்டி வேளாங்கண்ணி பேராலயத்தில் அதிபர் இருதயராஜ் தலைமையில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது அதனைத் தொடர்ந்து பேராலயம் முன்பு வேளாங்கண்ணியில் 2004ம் ஆண்டு சுனாமியால் இறந்தவர்களின் ஆன்மாவுக்காக பங்கு தந்தை அற்புதராஜ், பாதிரியார்கள் மற்றும் உறவினர்கள் மெழுகுவர்த்தி ஏற்றி, மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தி மனமுருக பிரார்த்தனை செய்தனர்.