நக்கீரன் கோபால் தலைமையில் ., ‘ மக்கள் குரல்’ ராம்ஜி முன்னிலையில் … 70 ஆண்டுகள் பாரம்பரியம் மிக்க ‘சினிமா பத்திரிகையாளர் சங்கத்’ தின் முப்பெரும் விழா !!

130

70 ஆண்டுகள் பாரம்பரியம் மிக்க சினிமா பத்திரிகையாளர் சங்கத்தின் ‘தீபாவளி மலர் – 2024 ‘ வெளியீடு, உறுப்பினர்களுக்கான தீபாவளி பரிசு வழங்குதல் … மற்றும் சங்கத்தின் 70-ம் ஆண்டு நிறைவு விழா ஆகிய மூன்று விழாக்களையும் முப்பெரும் விழாவாக நேற்று , அக்டோபர் 28 ஆம் தேதி திங்கட்கிழமை சென்னை பிரசாத் லேப் வளாகத்தில் கோலாகலமாக கொண்டாடினர்

இந்த நிகழ்ச்சியில் திரு.நக்கீரன் கோபால், மூத்த பத்திரிகையாளர் திரு.’மக்கள் குரல்’ ராம்ஜி, நடிகர் திரு. ‘முருகா ‘ அசோக், நடிகை செல்வி.அனு கிருஷ்ணா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக் கொண்டு, சினிமா பத்திரிகையாளர் சங்கத்தின் தீபாவளி மலரை வெளியிட்டு, சினிமா பத்திரிகையாளர்களுக்கு தீபாவளி பரிசுகளை வழங்கினார்கள்.

சினிமா பத்திரிகையாளர் சங்கத்தின் செயலாளர் ஆர்.எஸ்.கார்த்திக் வரவேற்புரை நிகழ்த்தி பேசுகையில், “நான் இத்துறைக்கு வந்து 32 ஆண்டுகள் ஆகிறது. பல தின , வார , மாத பத்திரிகைகளில் நான் சினிமா பத்திரிகையாளராக பணியாற்றியிருக்கிறேன். தற்போதும் பணியாற்றி வருகிறேன். ஆனால் , இதுவரை அரசு வழங்கும் அடையாள அட்டையையோ , பத்திரிகையாளர்களுக்கான சலுகைகளையோ நான் பெற்றது இல்லை. இங்கு வந்திருக்கும் பல சினிமா பத்திரிகையாளர்களின் நிலையும் அதுதான். எங்களின் நிலையை உணர்ந்து அண்ணன் திரு. நக்கீரன் கோபால் அவர்கள் தற்போது இருக்கும் அரசாங்கத்திடம் நம் போன்ற சினிமா பத்திரிகையாளர்களுக்காகவும் பேச வேண்டும் என்பதற்காக தான் இந்த முப்பெரும் விழாவிற்கு தலைமை தாங்க அவரை அழைத்திருக்கிறோம்.
‘பத்திரிகையாளர்களின் போர்வாள்’ திரு. நக்கீரன் கோபால். அவர்கள் இந்த நிகழ்ச்சிக்கு தலைமையேற்க வந்திருப்பது எங்களுக்கு மகிழ்ச்சி.

அதே மாதிரி ., அரசு அங்கீகாரம் , அடையாள அட்டை … என்றதும் தான் ஒரு விஷயம் எனக்கு ஞாபகத்திற்கு வந்தது. அதற்காக தான் இங்கு மூத்த பத்திரிகையாளர் அண்ணன் திரு.ராம்ஜி அவர்களை சிறப்பு விருந்தினராக அழைத்திருக்கிறோம். அவரது முன்னிலையில் இந்த விழா நடப்பதற்கு காரணம் , அவரது அண்ணன் மறைந்த மூத்த பத்திரிகையாளர் திரு .’பராசக்தி’ மாலி அவர்கள் சுமார் 20 ஆண்டுகளுக்கு முன் ஒருமுறை நம் வாகனங்களில் நாமாக PRESS என ஸ்டிக்கர் ஒட்டிக் கொள்ளக்கூடாது அரசாங்கம் எந்த பிரஸ் ? ஏது பத்திரிகை ? அதில் நமக்கு என்ன பொறுப்பு ..? என சில அதிகாரிகள் கையெழுத்துடன் கூடிய PRESS ஸ்டிக்கர் தரும் அதைத்தான் நம் வாகனங்களில் , நம் போன்ற பத்திரிகையாளர்கள் ஓட்ட வேண்டும் என அரசு உத்தரவு போட்டது. அப்பொழுது நான் வைத்ததிருந்த TVS Champ மொபட்டில் PRESS என ஓட்டி வைத்திருந்த எனக்கு இதை கேட்டதும் திகில் ! கூடவே , பிய்த்தெடுக்க மனமில்லாத சின்ன ஈகோவும் இருந்தது ! உடனடியாக மூத்த பத்திரிகையாளர் திரு .’பராசக்தி’ மாலி அவர்களிடம் கூறினேன். அவர்., அதற்கு என்ன தம்பி , என் ‘ பராசத்தி ‘ பத்திரிகையில் நீயும் நிருபர் . இன்று முதல் , செய்திகளை கொடு .. நாளையே உனக்கு தமிழக அரசின் வாகன ஸ்டிக்கர் வாங்கி தருகிறேன் .. என இரண்டொரு நாளில் வாங்கியும் கொடுத்தார். அவரை மாதிரியே நல் உள்ளம் கொண்ட அவரது சகோதரர் மூத்த பத்திரிகையாளர் அண்ணன் திரு.ராம்ஜி அவர்களும் பல சந்தர்ப்பங்களில் நம் சங்கத்திற்கும் சங்க உறுப்பினர்களுக்கும் பல்வேறு உதவிகளையும் ., உதவிகளை காட்டிலும் ஒரு சீனியர் பத்திரிகையாளராக நம் எழுத்துக்களையும் நம் போன்று அந்தந்த காலகட்டத்தில் வரும் புதிய பத்திரிகையாளர்களின் எழுத்துகளையும் பாராட்டி ஊக்குவிப்பதில் தலை சிறந்தவர் . அது மாதிரி திரு.நெல்லை சுந்தர்ராஜன் நம் சங்கத்தின் கெளரவ தலைவர் பத்திரிகையாளர் , மக்கள் தொடர்பாளர் அவரது சென்னை சாமியார் மடம் அலுவலகம் ஒரு காலத்தில் சினிமா பத்திரிகையாளர்களின் வேடந்தாங்கல். அங்கு வரும் அனைவருக்கும் , டீ , காபி , டிபன் .. என அவரது உபசரிப்பு அலாதியானது. அதே மாதிரி அண்ணன் திரு. நாக் ஸ்டுடியோ கல்யாணம் அவர்களும் நமது கெளர ஆலோசகர் உறுப்பினர். இந்த பிரசாத் லேப் உள்ளிட்ட பத்திரிகையாளர் காட்சி நடைபெறும் பல பிரிவியூ தியேட்டர்களின் மேனேஜராக நட்புடன் நம் போன்ற பத்திரிகையாளர்களையே தன் கணீர் கம்பீர குரலில் அன்புடன் சாப்பிடுங்க .. படம் பாருங்க… பார்த்து எழுதுங்க … என அதட்டும் மிரட்டும் சினிமா பத்திரிகையாளர்களின் சிறந்த நலம் விரும்பி . அதே போன்று திரு.’முருகா’ அசோக் பத்திரிகையாளர்களிடம் டவுண் டூ எர்த் பழகும் ஒரு இளம் நடிகர் . அதே போன்று நம் மாதிரி பத்திரிகையாளர்களிடம் புன்முறுவலாலேயே பேசும் இளம் நடிகை செல்வி அனு கிருஷ்ணா … இப்படி நமக்கு மிகவும் நெருக்கமான நம் நலம் விரும்பும் சிறப்பு விருந்தினர்கள் அனைவரையும் ‘சினிமா பத்திரிகையாளர் சங்கத்’ தின் முப்பெறும் விழாவிற்கு அழைத்து , அவர்களை வரவேற்று அவர்களது கரங்களால் நம் சங்க உறுப்பினர்களுக்கு தீபாவளி பரிசுகளை வழங்க இருப்பதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன். இவர்கள் அனைவரையும் உங்கள் அனைவரின் சார்பாக மீண்டும் ஒரு முறை வரவேற்கிறேன்.

70 ஆண்டுகள் பாரம்பரியம் மிக்க நம் சங்கம் உறுப்பினர்களுக்கு அவ்வப்போது பல நல்ல விஷயங்களை செய்து வருகிறது. தீபாவளி மலர் மூலம் கிடக்கும் விளம்பர வருவாய் கொண்டு சங்க உறுப்பினர்களுக்கு தீபாவளி பரிசு வழங்கப்படுகிறது. இந்த நேரத்தில் ஒவ்வொரு ஆண்டும் நம் மலருக்கு பெருவாரியாக தங்களது தீபாவளி வாழ்த்து விளம்பரங்கள் & தங்கள் பட விளம்பரங்கள் … கொடுத்து ஆதரவளித்து வரும் ‘மக்கள் செல்வன்’ திரு.விஜய் சேதுபதி, திரு.சிவகார்த்திகேயன், திரு.சூர்யா, திரு.கார்த்தி சிவக்குமார் , திரு.ஹம்சவிர்தன் தயாரிப்பாளர் திரு. கலைப்புலி தாணு , திரு S.R. பிரபு மற்றும் இன்னும் பிற தயாரிப்பாளர்கள் , இயக்குநர்கள் , நட்சத்திரங்கள் , ஆகியோருக்கும் இந்த ஆண்டு முதல் நமக்கு வாழ்த்து விளம்பர ஒத்துழைப்பு தரத்தொடங்கியிருக்கும் நடிகர் திரு.ஜெயம் ரவி, ‘டர்மரிக் ‘ தயாரிப்பு நிறுவனத்தின் திரு.மகேந்திரன் மற்றும் திரு.டிஸ்னி & தேசியத் தலைவர் திரு.பஷீர் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

நம் சங்கத்தில் இருந்து பிரிந்து சென்றவர்களையும் நாம், சகோதர சகோதரிகளாகத்தான் பார்க்கிறோம் ஆனால் , அவர்கள் அப்படி நினைப்பதில்லை, நம்மை போட்டியாக கருதி சில இடங்களில் நமக்கு வாழ்த்து விளம்பரங்கள் கிடைக்காமல் செய்து வரும் விஷயங்களும் என் காதுகளுக்கு வருகிறது. ஆனால் நான் எனக்கு நெருக்கமான சினிமா பிரபலங்களிடம் இன்று வரை அவர்களும் சினிமா பத்திரிகையாளர்கள் தான் அவர்களுக்கும் ஒத்துழைப்பு தாருங்கள் … என்றே சொல்லி வருகிறேன். இந்த பெருந்தன்மையை சங்கம் தாண்டி எல்லோரிடமும் எதிர்பார்க்கிறேன். அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துகள், நன்றி.” என்றார்.

சங்கத்தின் தலைவர் டி.ஆர்.பாலேஸ்வர் ஏற்புரையாற்றி பேசுகையில், “சினிமா பத்திரிகையாளர்களுக்கும் அரசு அங்கீகாரம் கிடைக்க வேண்டும், அதை பெற்றுக் கொடுக்கும் முயற்சிக்கு நம் சங்கத்திற்கு அண்ணன் திரு. நக்கீரன் கோபால் போன்ற ஆளுமைகள் உதவிட வேண்டும்.” என்றவர், சினிமா பத்திரிகையாளர்கள் சங்கம் 70 ஆண்டுகள் பாரம்பரியம் கொண்டது எப்படி ?, என்பதற்கான விளக்கமும் இந்த சங்கத்தில் இருந்து மறைந்த சீனியர் பத்திரிகையாளர்கள் விவரமும் கொடுத்தார்.

சினிமா பத்திரிகையாளர் சங்கத்தின் தீபாவளி மலர் – 2024 ஐ வெளியிட்டு சங்க உறுப்பினர்களுக்கு தீபாவளி பரிசுகளை வழங்கி விட்டு தலைமை உரை நிகழ்த்திய திரு. நக்கீரன்கோபால் பேசுகையில், “இந்த நிகழ்ச்சி மிக அருமையாக இருக்கிறது. இங்கு இத்தனை உறுப்பினர்களுக்கும், தீபாவளி பரிசாக அத்தனை பொருட்களை இவர்கள் கொடுத்ததை பார்க்கும் போது, நானும் ஒரு பத்திரிகையாளர் அமைப்பில் இருக்கிறேன், அதிலும் இப்படி செய்திருக்கலாமே, என்று எனக்கு தோன்றுகிறது. இது மிகப்பெரிய விஷயம், இவர்களது பணி மேலும் சிறக்க வேண்டும், வாழ்த்துகள்.” என்றவர்., மேடையில் வைக்கப்பட்டிருந்த பேனரில் முப்பெரும் விழா என்பதற்கு பதில் முப்பெறும் விழா என மெல்லின ‘ ரு ‘ வுக்கு பதில் வல்லின ‘று’ தவறுதலாக இடம் பெற்று விட்டதை நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய பத்திரிகையாளர் ‘மைசிக்ஸர் ‘ திரு. விஜய் ஆனந்தும் , சங்க செயலாளர் திரு. ஆர்.எஸ்.கார்த்திக்கும் முப்பெறும் என்றால் மூன்று பெரும் என்று மட்டும் அர்த்தம் அல்ல… மூன்று விதமான பெறுதல் … அதாவது CPS தீபாவளி மலர் – 2024 பெறுதல் , உறுப்பினர்கள் தீபாவளி பரிசு பெறுதல் , சங்கத்தின் 70 ஆண்டுகள் நிறைவு விழா மகிழ்ச்சி பெறுதல் … என பேசி சமாளித்ததை கண்டு இவர்கள் தான் பத்திரிகையாளர்கள் … என வியந்ததாக கூறியதோடு இது மாதிரி , அவசர அவசரமாக தயாராகும் விழா மலர்கள் , தீபாவளி மலர் களேபரங்கள் … குறித்தும் சிரித்து சிலாகித்து பேசியதோடு இனி , இந்த 70 ஆண்டுகள் பாரம்பரியம் மிக்க ‘சினிமா பத்திரிகையாளர் சங்கத்’ திற்கு தன்னால் ஆன உதவிகளை செய்வதாகவும் எது வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் கேளுங்கள் …” எனவும் சங்க நிர்வாகிகளுக்கு உறுதியளித்தார்.

சிறப்பு விருந்தினரான மூத்த பத்திரிகையாளர் திரு. ‘ மக்கள் குரல் ‘ ராம்ஜி பேசுகையில், “நிகழ்ச்சியில் பேசிய சங்கத்தின் செயலாளர் ஆர். எஸ்.கார்த்திக், இங்கிருந்து பிரிந்து சென்றவர்கள், மற்றொரு சங்கம் தொடங்கியதாகவும், அவர்களுடன் இந்த சங்கத்தில் இருக்கும் எல்லோரும் இணக்கமாக இருப்பதையே விரும்புவதாகவும் பேசினார். அதை நான் வரவேற்கிறேன் எனக்கு இந்த நேரத்தில் தர்ம சங்கடமாக இருக்கிறது, அவர்கள் நிகழ்ச்சியிலும் நான் பங்கேற்க அழைக்கப்பட்டுள்ளேன். ஆனாலும் , முன்னதாக அழைத்த இச்சங்க செயலாளர் ஆர். எஸ்.கார்த்திக் ., மறைந்த என் அண்ணன் திரு. பராசக்தி மாலி அவர்களின் பெயரை சொல்லி ., அவர் ரூபத்தில் என்னை பார்ப்பதாக ஒரு அஸ்திரத்தை வீசி என்னை இங்கு அழைத்து வந்து அமர வைத்து இதோ இந்த மேடையில் பேசவும் வைத்து விட்டார். இரண்டு சங்கங்கள் இருந்தாலும், அனைவரும் சினிமா பத்திரிகையாளர்கள்… தான், அனைவரும் சகோதரர்கள் தான். அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பதே என்னைப்போன்ற மூத்தவர்களின் விருப்பம், அது விரைவில் நடக்கும் என்று நம்புகிறேன், நன்றி.” என்றார்.

நன்றியுரை நிகழ்த்திய சங்கத்தின் பொருளாளர் மரிய சேவியர், “நிகழ்ச்சிக்கு வந்திருந்த அனைவருக்கும் நன்றி, இனிய தீபாவளி வாழ்த்துகள்.” என்றார். முன்னதாக நடிகர் திரு. ‘முருகா’ அசோக் , நடிகை செல்வி. அனு கிருஷ்ணா , சினிமா பத்திரிகையாளர் சங்கத்தின் கெளரவ உறுப்பினரும் ஆலோசகருமான திரு.’நாக் ஸ்டுடியோ’ கல்யாணம், சங்கத்தின் கெளரவ தலைவர் திரு. ‘கலைமாமணி’ நெல்லை சுந்தர்ராஜன் துணைத்தலைவர்களில் ஒருவரான திரு. ‘கலைமாமணி’ மணவை பொன் மாணிக்கம் உள்ளிட்டோரும் 70 ஆண்டுகள் பாரம்பரியம் கொண்ட : சினிமா பத்திரிகையாளர் சங்கத்’ தை வாழ்த்தி அதனுடனான தங்கள் அனுபவத்தையும் பகிர்ந்து கொண்டனர். நிகழ்ச்சியை திறம்பட தொகுத்து வழங்கினர் பத்திரிகையாளர்கள் ‘மைசிக்ஸர் ‘ திரு. விஜய் ஆனந்த் மற்றும் யூடியூபர் திரு. சிவபாலன் இருவரும்.