பாக்ஸ் ஆபீஸ் ஓப்பனிங் சாதனையை தொடர்ந்து படைக்கும் பிரபாஸுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்..!!

55

பிரபாஸின் பிறந்த நாளான இன்று இந்திய திரையுலகில் அவருடைய கலை பயணத்தையும், அவர் தொடர்ந்து முறியடித்து வரும் சாதனைகளையும் நினைத்துப் பார்ப்பது அவசியம். பிரபாஸ் முதல் முதலில் பான் இந்திய சூப்பர் ஸ்டார் என்பதை.. அதற்கான கருத்தாக்கத்தை மறு வரையறை செய்து, தனக்கான படங்களின் மூலம் புதிய எல்லைகளை அமைத்து வருகிறார் . மேலும் உலகெங்கிலும் உள்ள பார்வையாளர்களை அவர் தொடர்ந்து வசீகரிக்கிறார்.

பாக்ஸ் ஆபிஸில் அவர் புதிதாக படைத்த சாதனைகளின் பட்டியலை காண்போமா..!

பிரபாஸின் படங்கள் முதல் நாள் வசூல் சாதனையை முறியடிப்பதாகவே அறியப்படுகின்றன. ‘ பாகுபலி : தி பிகினிங்’ திரைப்படம் முதல் நாளில் 75 கோடி ரூபாயை வசூலித்து சாதனை படைத்தது. இதனைத் தொடர்ந்து வெளியான ‘பாகுபலி : தி கன்குளுஷன்’ எனும் திரைப்படம் தொடக்க நாளில் பாக்ஸ் ஆபீஸை பிரமிக்க வைக்கும் வகையில் 200 கோடி ரூபாயை வசூலித்து, அவரின் சினிமா சக்தியை பறைசாற்றியது. ‘சாஹோ’ திரைப்படம் தொடக்க நாளில் 130 கோடி ரூபாயையும், ‘சலார் ‘திரைப்படம் தொடக்க நாளில் 178 கோடி ரூபாயும், ‘கல்கி 2898 கிபி’ எனும் திரைப்படம் தொடக்க நாளில் 180 கோடி ரூபாயும் வசூலித்து சாதனை படைத்தது. இவை யாவும் பிரபாஸ் – ‘பாக்ஸ் ஆபிஸ் டைட்டன்’ என்பதை தொடர்ந்து உறுதிப்படுத்தி வருகிறது.

பிரபாஸின் திரையுலக வாழ்க்கையில் முன் எப்போதும் இல்லாத வகையில் அவர் படைத்த சாதனைகள் வியக்க வைக்கிறது. இந்திய சினிமாவில் ஆயிரம் கோடி ரூபாய் வசூலை தாண்டிய இரண்டு திரைப்படங்களில் நடித்த இரண்டு நடிகர்களில் இவரும் ஒருவர். ‘பாகுபலி 2’ அந்த சாதனையை நிகழ்த்திய முதல் படம். இந்த மைல்கல் அவரது திறமையை மட்டும் அல்ல தயாரிப்பாளர்கள் மற்றும் பார்வையாளர்கள் அவருடைய படங்கள் மீது வைத்திருக்கும் அசைக்க முடியாத நம்பிக்கையும் பிரதிபலித்தது.

பிரபாஸ் நடிப்பில் அண்மையில் வெளியான ‘கல்கி 2898 கிபி’ திரைப்படம் இந்திய சினிமாவில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படைப்புகளில் ஒன்றாகும். இந்த திரைப்படம் உலக அளவில் வியக்க வைக்கும் அளவிற்கு 1,100 கோடி ரூபாயை வசூலித்து.. பிரபாஸை உலகளாவிய சினிமா ஐகானாக உயர்த்தியது. மேலும் இந்த திரைப்படம் இந்திய திரை உலகில் ஒரு புதிய சாதனையையும் படைத்தது. இந்த திரைப்படம் இந்தியாவில் மட்டும் முதல் வாரத்தில் 500 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்தது.

இதனால் பிரபாஸின் செல்வாக்கு இந்தியாவையும் கடந்து உலக அளவில் விரிவடைந்தது. சர்வதேச சந்தையில் ஈர்க்கக்கூடிய வசூலையும் படைத்தது. ‘பாகுபலி 2 ‘வெளிநாடுகளில் 396.5 கோடி ரூபாயையும், ‘கல்கி 2898 கிபி ‘ திரைப்படம் உலக நாடுகளில் 275.4 கோடி ரூபாயையும் வசூலித்தது. ‘சலார் பார்ட் 1’ திரைப்படம் 137.8 கோடிகளையும் ‘சாஹோ’ திரைப்படம் 78.5 கோடி ரூபாயும் வசூலில் குவித்தது. இதன் மூலம் பிரபாஸின் ஆதிக்கம் இந்திய எல்லைகளுக்கு அப்பாற்பட்டது என்பதை மீண்டும் உறுதிப்படுத்துகிறது.

தயாரிப்பாளர்கள் அவர் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை பிரதிபலிக்கும் வகையில் அவர் நடிக்கும் படங்களில் முதலீடு செய்வது .. அவருடைய நட்சத்திர சக்தி தெளிவாக தெரிகிறது. இதன் காரணமாக ‘சலார் 2’ 360 கோடி ரூபாய் முதலீட்டிலும் , ‘கல்கி 2’ 700 கோடி ரூபாய் முதலீட்டிலும் தயாராகி வருகிறது. இருப்பினும் இந்த இரண்டு படங்களும் இந்திய சினிமாவில் மிகவும் எதிர்பார்க்கப்படும் படைப்புகளாக இருப்பதுடன் அதற்கு மையப் புள்ளியாக பிரபாஸ் திகழ்கிறார்.