‘சலார் 2 முதல் கல்கி 2’ வரை … 2,100 கோடி ரூபாய் முதலீட்டில் உருவாகும் சூப்பர் ஸ்டார் பிரபாஸின் பிளாக் பஸ்டர் ஹிட் திரைப்படங்கள்..!

72

பிரபாஸின் பிறந்த நாளில் ‘சலார் 2 முதல் கல்கி 2’ வரை அடுத்தடுத்த பிளாக்பஸ்டர் ஹிட் திரைப்படங்கள்.. 2,100 கோடி ரூபாய் வசூலிக்கும் என பந்தயம் கட்டப்பட்டிருக்கிறது.

முதல் பான் இந்திய சூப்பர்ஸ்டாரான பிரபாஸ், அவருடைய தொழில் சார் வாழ்க்கையில் புதிய உச்சத்தில் இருக்கிறார். இதனால் அவரது பிறந்த நாளை நடிகராக மட்டுமல்லாமல் இந்திய சினிமாவை மாற்றி அமைத்த நட்சத்திரமாகவும் கொண்டாடுகிறார்கள்.

முதல் பான் இந்திய சூப்பர் ஸ்டாரான பிரபாஸின் நடிப்பில் வெளியான ‘பாகுபலி’, ‘சலார்’, ‘கல்கி 2898 கிபி’ போன்ற படங்கள் பாக்ஸ் ஆபீஸ் வசூலில் புதிய சாதனை படைத்து இந்திய சினிமாவில் மறுக்க இயலாத சூப்பர் ஸ்டாராக ஜொலித்துக் கொண்டிருக்கிறார். பார்வையாளர்கள் மீது அவர் வைத்திருக்கும் தீராத விசுவாசம் பிளாக்பஸ்டர் ஹிட்டிற்கு பிறகும் தொடர்ந்து பிளாக்பஸ்டர் ஹிட் படங்களை வழங்குவதை உறுதி செய்கிறது. இதனால் தயாரிப்பாளர்கள் அவருடைய திரைப்படங்களில் பிரம்மாண்டமான முறையில் முதலீடு செய்வது எளிதாகிறது.

பெரிய திரையில் பிரபாஸ் ஏற்று நடிக்கும் ஒவ்வொரு கதாபாத்திரமும்.. அதற்கான தோற்றமும்.. அவருடைய நடிப்பும் …ஆவலுடன் காத்திருக்கும் ரசிகர்களின் அபரிமிதமான அன்பையும், பாராட்டையும் பெறுகிறது. இது அவரது கவர்ச்சிக்கும், நட்சத்திர சக்திக்கும் ஒப்பிட முடியாத அளவில் இருக்கிறது. அதே தருணத்தில் அவர் இந்தியாவின் மிகப்பெரிய சூப்பர் ஸ்டாராக உயர்ந்திருக்கிறார். திரை துறை வணிகர்களின் தரவுகளின் படி, தயாரிப்பாளர்கள் அவர் நடிக்கும் திரைப்படங்களுக்கு பெரிய அளவில் முதலீடுகளை செய்து ஆதரிக்கவும் தயாராக உள்ளனர்.

இந்த வரிசையில் அவர் நடிப்பில் தயாராகி வரும் படங்களின் பட்டியலை தொடர்ந்து காண்போம்.

‘சலார் 2’ : இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் உருவாகி வரும் ஹை- வோல்டேஜ் ஆக்சன் என்டர்டெய்னர் திரைப்படம் இது. இந்த திரைப்படத்தை ஹோம்பாலே ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில் பிரபல தயாரிப்பாளர் விஜய் கிரகந்தூர் தயாரித்து வருகிறார். இந்தப் படத்தில் பிரபாஸுடன் பிருத்விராஜ் சுகுமாறன், ஸ்ருதிஹாசன், ஜெகபதி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.

ஸ்பிரிட்: இந்தி சினிமாவில் மிகவும் எதிர்பார்ப்புக்குரிய படமாக ‘ஸ்பிரிட்’ இருக்கிறது. இந்தப் படத்தில் முதன்முறையாக பிரபாஸ் – பரபரப்பிற்கு பெயர் பெற்ற இயக்குநரான சந்தீப் ரெட்டி வங்காவுடன் இணைந்திருக்கிறார்.

இயக்குநர் ஹனு ராகவ புடி இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் பிரபாஸ் நடிக்கிறார். இன்னும் பெயரிடப்படாத இந்த திரைப்படம்- 1940 ஆம் ஆண்டுகளில் பின்னணியில் சரித்திர புனைவு கதையாக தயாராகிறது. இந்தத் திரைப்படத்திற்கு சுதீப் சட்டர்ஜி ஒளிப்பதிவு செய்ய, விஷால் சந்திரசேகர் இசையமைக்கிறார். படத்தொகுப்பு பணிகளை கோத்தகிரி வெங்கடேஸ்வர ராவ் மேற்கொள்கிறார்.

The Raja Saab: இந்த திரைப்படம் – இயக்குநர் மாருதி இயக்கத்தில் உருவாகி வரும் காதலும் காமெடியும் கலந்த திகில் படமாகும். இந்த திரைப்படத்தை பீப்பிள் மீடியா ஃபேக்டரி நிறுவனம் தயாரிக்கிறது. இதில் பிரபாஸுடன் நிதி அகர்வால் மற்றும் மாளவிகா மோகனன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.

கல்கி 2 : ‘கல்கி 2898 கிபி’ திரைப்படம் கடந்த ஜூன் மாதம் 27 ஆம் தேதியன்று திரையரங்குகளில் வெளியானது. பிரபாஸ் ,தீபிகா படுகோன், அமிதாப்பச்சன், கமல்ஹாசன் ஆகியோர் நடித்திருந்தனர். இப்படத்தின் தொடர்ச்சியான இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு பிப்ரவரியில் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த திரைப்படங்கள் அனைத்தும் பிரபாஸின் திறமை மற்றும் அவரது நட்சத்திர பலத்திற்காக தயாராகும் திரைப்படங்கள். இந்த திரைப்படங்களுக்கு தயாரிப்பாளர்கள் 2,100 கோடி ரூபாயை முதலீடு செய்து இருக்கிறார்கள். இது அவரது அற்புதமான ஈர்ப்பு- அவரின் நட்சத்திர சக்தி- சர்வதேச தரம்- பார்வையாளர்களை கவர்ந்திழுக்கும் திறன்- போன்ற அம்சங்களுக்காகவும், அவருடைய சூப்பர் ஸ்டார் நட்சத்திரத்திற்கான சான்றும் ஆகும். அவரது அயராத பணிக்கு ஆதரவு தெரிவிக்கும் சினிமா ஆர்வலர்களின் ஆசிர்வாதம் இது என்றும் குறிப்பிடலாம். பிரபாஸ் .. கவர்ச்சி- திறமை – மேஜிக் ஆகியவற்றின் சரியான கலவையை பிரதிநிதித்துவப்படுத்துகிறார்.‌ அவர் நடிக்கும் ஒவ்வொரு படமும் மிகப்பெரிய வெற்றியாக மாற்றம் பெறுவதையும் உறுதி செய்கிறார். இந்த பிறந்த நாளில் பிரபாஸ் மீது நம்பிக்கை வைத்து முதலீடு செய்த 2,100 கோடி ரூபாயும் அவரது ரசிகர்களுக்காக அவர் வழங்கும் அற்புதமான படைப்புகள் ஆகும். இதனையும் அவரது பிறந்தநாளில் கொண்டாடுவோம்