கண்ணப்பா நினைவு மருத்துவமனை திறப்பு விழா சிறப்பாக நடைபெற்றது.

109

சென்னை கீழ்ப்பாக்கம் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் புதிதாக கட்டப்பட்டுள்ள கண்ணப்பா நினைவு மருத்துவமனை திறப்பு விழா நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது.

பத்மஸ்ரீ டாக்டர் மேமன் சாண்டி மருத்துவமனையை திறந்து வைத்து சிறப்புரையாற்றினார்.

முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் எச் வி ஹண்டே சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு திறப்பு விழா நிகழ்ச்சியை சிறப்பித்தார்.

டாக்டர் எம் என் சதாசிவம் அனைவரையும் வரவேற்று பேசினார்.

மருத்துவமனையின் நிறுவனர்கள் டாக்டர் எஸ் பி கணேசன் மற்றும் செந்தில் கணேசன் ஆகியோர் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்தனர். திறப்பு விழா சிறப்பாக நடைபெற்றது