ஒரு நேரத்தில் சாமி படத்திலும் மற்றொரு நேரத்தில் பேய் படத்திலும் நாயகனாக நடித்தார் யூத் சூப்பர்ஸ்டார் ஆர்யன் ஷாம்

55

திருப்பதி லட்டில் மாமிசத்தின் கொழுப்புகள் கலந்திருக்கு என்ற செய்திகள் பார்த்ததும் மனசுக்குள் பேரிடிவிழுந்ததுபோலவேதனை யாகஇருந்தது.திருப்பதி வெங்கடாஜலபதி ஆசியுடன் அவர்களின் பக்தர்களுக்கு கொடுக்கப்படும் புனிதமான பிரசாதம் அதில் கலப்படம் நடந்தது என்பது தெய்வத்தையே நிந்தித்தது போல் இருக்கிறது என்கிறார் நடிகர் ஆர்யன் ஷாம். இவரை நடிக்க வைத்துபிரமாண்ட நாயகன் என்ற பெயரில் திருப்பதி வெங்கடாஜலபதி வாழ்க்கை வரலாற்றை படமாக எடுத்திருந்தார்கள். அதில்திருப்பதி வெங்கடாஜலபதியாக நடித்திருந்தார் ஆர்யன் ஷாம். இந்தப் படத்தை திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் நிர்வாகிகளுக்கு திரையிட்டு காட்டப்பட்டதுபடத்தைப் பார்த்த அவர்கள் திருப்பதி வெங்கடாஜலபதியாக நடித்திருந்த ஆர்யன் ஷாம்நடிப்பைப் பார்த்து பாராட்டிஆர்யன் ஷாமிற்கு யூத் சூப்பர்ஸ்டார் என்ற பட்டத்தை வழங்கி அதற்கான சான்றிதழும் கொடுத்து கௌரவித்தார்கள். இந்த பிரமாண்டநாயகன்படம் யூடியூப்களில் ஓடிக் கொண்டிருக்கிறது


இதையடுத்து பிரமாண்ட நாயகன் படத்தின் நேர் எதிர்மறையான நரபலி கதையம்சம் கொண்ட அந்த நாள் என்ற பேய்படத்தை கிரீன் மேஜிக் எண்டர் டெயின்மென்ட் என்ற நிறுவனத்தின் சார்பில் தயாரித் து,அதில் திகிலூட்டும் நாயகனாக கதாபாத்திரம் ஏற்று நடித்திருக்கிறார். ஓரே நேரத்தில் சாமி படத்திலும் அனைவரையும் பயமுறுத்தும் பேய் படத்திலும்இரண்டு விதமான மாறுபட்ட கதாபாத்திரங்களில் நடித்து தனது நடிப்பாற்றலை வெளிப்படுத்தியிருக்கிறார் ஆர்யன்ஷாம்.
வரும் நவம்பர் மாதம் வெளியாக விருக்கும் அந்த நாள் படம் பல உலகப் பட விழாக்களில் கலந்துக்கொண்டு பல விருதுகளைப் பெற்றிருக்கிறது

குறிப்பாக Cult Movies International Film Festival,Europe film festival Awards, Tagore International film festival , London film festival, Medusa Film Festival, world film Carnival Singapore Awards , New York movie Awards, American golden picture International Film Festival,
இப்படி உலகநாடுகளில் நடந்த film festival களில் கலந்துக்கொண்டு பல விருதுகளைப் பெற்றது யூத் சூப்பர்ஸ்டார் ஆர்யன் ஷாம்நடித்த அந்த நாள் படம்