சென்னையின் புதிய ஆன்மீக நுழைவாயில்! யோகதா சத்சங்க சொஸைடி-யின் புதிய ஆசிரமம், நகரவாசிகளின் சரணாலயமாகிறது.

76

யோகதா சத்சங்க சொஸைடி-யின் புதிய ஆசிரமம், நகரவாசிகளின் சரணாலயமாகிறது.

யோகதா சத்சங்க சொஸைடி ஆஃப் இந்தியா(YSS) தனது முதல் தென்னிந்திய ஆசிரமமான “யோகதா சத்சங்க சகா ஆசிரமம், சென்னை”-யின் செப்டம்பர் 15-ஆம் தேதி ஒரு பிரமாண்ட விழாவில் தொடங்க உள்ளதாக அறிவித்துள்ளது. இந்தியாவில் உள்ள YSS-ன் ராஞ்சி, தக்ஷிணேஷ்வர், துவாரகாட் மற்றும் நொய்டா ஆகிய  ஆசிரமங்களுடன் சேர்த்து இது ஐந்தாவது ஆசிரமமாகும்.

Screenshot

உன்னத ஆன்மீக புத்தகமான ‘ஒரு யோகியின் சுயசரிதம்’-ன் ஆசிரியருமான, உலகப் புகழ் பெற்ற குரு, பரமஹம்ஸ யோகானந்தரால் YSS, 1917-இல் நிறுவப்பட்டது. 1920- இல் லாஸ் ஏஞ்சலஸ் ஸெல்ப் ரியலைசேஷன் ஃபெல்லோஷிப் (SRF)-ஐ யோகானந்தர் நிறுவியதனால், மேலைநாடுகளில் அவர் “யோகத்தின் தந்தை” என்று கொண்டாடப்படுகிறார்.

நூறு ஆண்டுகளுக்கும் மேலாக YSS, உலகெங்கிலும் ஆன்மீகத்தை நாடும் எண்ணற்றவர்களுக்கு, பரமஹம்ஸ யோகானந்தரின் விஞ்ஞானபூர்வ கிரியா யோக தியான உத்திகளையும், “எப்படி வாழ்வது” என்ற போதனைகளையும் வழங்கி சேவையாற்றி வருகிறது. மகாவதார் பாபாஜிக்கு இட்டுச்செல்லும் மதிப்பிற்குரிய குருமார்களின் பரம்பரையில், வழிவழியாக அருளப்பட்ட இந்தப் போதனைகள், யோகானந்தரின் வீட்டுக் கல்வி கிரியா யோகப் பாடங்கள் மூலம் பல்வேறு பிராந்திய மொழிகளில் வழங்கப்படுகிறது. YSS ஆர்வமுள்ள சாதகர்களுக்கு, சமச்சீரான வாழ்க்கைமுறை பற்றிய யோகானந்தரின் ஒலிப்பதிவுகள் மற்றும் புத்தகங்களை பகிர்ந்து கொள்வதுடன் கூட யோகதா சன்னியாசிகள் வழிநடத்தும் பல்வேறு ஆன்மீக நிகழ்ச்சிகளையும் வழங்குகிறது.

YSS/SRF-ன் தலைவர் மற்றும் ஆன்மீகத் தலைவர், ஸ்ரீ ஸ்ரீ சுவாமி சிதானந்த கிரி அவர்கள் ஆசிரமத்தை திறந்துவைத்தார். அவர் நேரலையில் “கிரியா யோகா: அக மற்றும் புறக் குழப்பங்களுக்கான பதில்” என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். சுவாமி சிதானந்தா, இந்த உரையில், கிரியா யோகாவின் பண்டைய, விஞ்ஞானபூர்வ உத்தியானது, எவ்வாறு ஒருவரின் உணர்வுநிலையை அகமுகமாக்குவதற்கான ஓர் உயர்ந்த மற்றும் நிரந்தர முறை என்பதையும், அதன் விளைவான அமைதியின் அனுபவம், குழப்பங்களின் மூல காரணத்தை போக்க அவருக்கு எவ்வாறு உதவுகிறது என்பதையும் விவரித்தார். கிரியா யோகாவை இவ்வுலகில் பரப்புவதற்கு இறைவனால் தேர்ந்தெடுக்கப்பட்ட குருமார்களின் பரம்பரையில் சாதகர்களை இணைக்கும் அதே வேளையில், பரமஹம்ச யோகானந்தரின் வீட்டுக் கல்விப் பாடங்கள் இந்த விஞ்ஞானபூர்வமான உத்திக்கு தெளிவான அகநோக்கினை  எவ்வாறு அளிக்கின்றன என்பதையும் அவர் விளக்கினார்.

இந்நிகழ்ச்சியில், யோகதாவின் சன்னியாச மரபில் வந்த, மூத்த சன்னியாசிகளும், YSS இயக்குநர் குழுவின் உறுப்பினர்களுமான ஸ்வாமி ஈஷ்வரானந்த கிரி (YSS-ன் பொதுச் செயலாளர்), ஸ்வாமி பவித்ரானந்த கிரி ஆகிய இருவரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

அமைதியான மண்ணூர் ஏரி மற்றும் பசுமையான காப்புக்காடுகளுக்கு அருகில் அமைந்துள்ள புதிய சென்னை ஆசிரமம், தென்னிந்தியா முழுவதும் உள்ள பக்தர்களுக்கு அமைதியான சரணாலயத்தை வழங்குகிறது. தமிழிலும் தெலுங்கிலும் இந்த வீட்டுக் கல்விப் பாடங்கள் கிடைப்பதால், பரமஹம்ஸ யோகானந்தரின் போதனைகளின் மீதான வளர்ந்து வரும் ஆர்வத்திற்கு இந்த ஆசிரமம் தென்னிந்தியாவின் மையமாக செயலாற்றுகிறது. ஆசிரமத்தில் வசிக்கும் சன்னியாசிகள் தினமும் காலை, மாலை தியானங்கள், குருமார்களின் சிறப்பு நினைவுகூரும் தியானநிகழ்ச்சிகளை நடத்துகின்றனர். மேலும் பக்தர்களுக்கு ஆலோசனை வழங்குகின்றனர். ஆசிரமத்தின் திறப்பு விழாவின் மூலம் அருகிலுள்ள கிராமத்தில் வசிப்பவர்களுக்கு மருத்துவ முகாம்கள் மற்றும் கல்வி உதவி உள்ளிட்ட YSS-ன் தொண்டு நடவடிக்கைகள் கிடைக்கும் வாய்ப்பினை அதிகரிக்கிறது. அமைதியான, தியானம் செய்வதற்கேற்ற சூழ்நிலையில் ஆழ்ந்து அமைதியடைய பார்வையாளர்கள் வரவேற்கப்படுகிறார்கள். அனுமதி இலவசம்.

மேலும் தகவல்களுக்கு, கீழ்கண்ட இணையதளத்தை பார்வையிடுங்கள்.
https://yssofindia.org/location/chennai
தொலைபேசி: +91 7550012444 / +91 7305861965