திரைப்பட நட்சத்திரங்கள் மற்றும் தொலைக்காட்சி நட்சத்திரங்கள் பங்கேற்ற தைபா செலிபிரிட்டி வாலிபால் லீக் போட்டி சென்னை சாந்தோமில் உள்ள சாந்தோம் மேல்நிலைப்பள்ளி மான்போர்ட் அரங்கில் நடைபெற்றது.

111

இதில் சென்னை ஸ்டார்ம்ஸ், மதுரை ஹரிகேன்ஸ், கோவை தண்டர்ஸ் ஆகிய 3:அணிகள் லீக் முறையில் மோதின. இதன் இறுதிப் போட்டிக்கு சென்னை ஸ்டார்ம்ஸ் அணியும் மதுரை ஹரிகேன்ஸ் தகுதி பெற்றன. மிகவும் விறுவிறுப்பாகவும் பரபரப்பாகவும் நடைபெற்ற இந்த போட்டியில் மா கா பா தலைமையிலான சென்னை ஸ்டார்ம்ஸ் அணி 7க்கு15, 15 க்கு 9, 15க்கு 3 என்ற புள்ளிகள் கணக்கில் ஜூனியர் எம் ஜி ஆர் தலைமையிலான மதுரை ஹரிகேன்ஸ் அணியை தோற்கடித்து சாம்பியன் பட்டம் வென்றது.

போட்டிகளின் முடிவில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஆற்காடு இளவரசர் நவாப்ஜதா முஹம்மது ஆசிப் அலி மற்றும் சர்வதேச வாலிபால் வீராங்கனை ஷாலினி ஆகியோர் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பரிசுகளை வழங்கினர். முன்னதாக வாலிபால் நட்சத்திரங்கள் குரு பிரசாத், சந்தோஷ் மற்றும் ராஜு, சென்னை மாவட்ட வாலிபால் சங்க செயலாளர் ஸ்ரீ கேசவன் உள்ளிட்டோர் ஒவ்வொரு லீக் ஆட்டத்திற்கான சிறப்பு விருந்தினராக பங்கேற்று சிறப்பித்தனர். போட்டிக்கான ஏற்பாடுகளை திரைப்பட நடிகர் கிஷோர் அவரது மனைவி ப்ரீத்தி ஆகியோர் மிகச் சிறப்பான முறையில் செய்திருந்தனர்.