லைகா புரொடக்ஷன்ஸின் ‘வேட்டையன்’ அக்டோபர் 10 2024-அன்று வெளியாகிறது!

84

மிகவும் எதிர்பார்க்கப்படும் ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்தின் ‘வேட்டையன்'(தலைவர் 170)
திரைப்படத்தின் பிரமாண்டமான வெளியீட்டிற்கு தயாராகி வருகிறது லைகா புரொடக்ஷன்ஸ்.இத்திரைப்படம் அக்டோபர் 10-ஆம் தேதி உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியாக உள்ளது. தனது படைப்புகளின் மூலம் சமூகம் சார்ந்த கதை சொல்லலுக்கு பெயர் போன புகழ்பெற்ற இயக்குனர் த.செ.ஞானவேல் இயக்கியுள்ள இந்தப் படம், அவருக்கு ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்துடன் முதல்முறையாக இணைந்து பணிபுரியும் பெருமைமிகு படைப்பாக அமைகிறது.

இந்த பான்-இந்திய படமானது லைகா புரொடக்ஷன்ஸ் மற்றும் ரஜினிகாந்திற்கு இடையிலான வெற்றிகரமான கூட்டணியில்  2.0,தர்பார்,சமீபத்தில் வெளியான  லால் சலாம் போன்ற பிளாக்பஸ்டர்களை படங்களைத் தொடர்ந்து நான்காவது முறையாக மீண்டும் இணையும் படமாகும். அதே போல இன்னொரு அதிரடியான கூட்டணியான ரஜினிகாந்த் மற்றும் இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்திர இருவரும்
பேட்ட, தர்பார், ஜெயிலர் ஆகிய திரைப்படங்களில் இணைந்து பணியாற்றிய பிறகு நான்காவது முறையாக மீண்டும் இணைந்துள்ளனர்.

தயாரிப்பாளர் சுபாஸ்கரன் பிரமிக்க வைக்கும் நட்சத்திர நடிகர்களை ஒன்றிணைத்திருப்பது, மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த படம் ‘பாலிவுட் மெகாஸ்டார்’ அமிதாப் பச்சன் உட்பட ஒரு தனித்துவமான நட்சத்திரப் பட்டாளத்தை கொண்டுள்ளது. அமிதாப் பச்சன் மற்றும் ரஜினிகாந்த் இருவரும் அந்தா கனூன், கெராஃப்தார் மற்றும் ஹம் ஆகிய படங்களைத் தொடர்ந்து நான்காவது முறையாக ரஜினிகாந்துடன்  திரையைப் பகிர்ந்து கொள்கிறார்கள். மஞ்சு வாரியர், ஃபஹத் ஃபாசில், ராணா டகுபதி, ரித்திகா சிங் மற்றும் துஷாரா விஜயன் ஆகியோரும் சூப்பர் ஸ்டாருடன் முதன்முறையாக இணைந்து நடித்துள்ளனர்.

லைகா புரொடக்ஷன்ஸ் தலைவர் ஜி.கே.எம். தமிழ் குமரனின் நிர்வாகத்தின் கீழ் தயாரிப்பிற்கு பிந்தைய பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வரும் நிலையில், ‘வேட்டையன்’ அதன் பிரம்மாண்டமான மற்றும் அழுத்தமான கதை சொல்லல் மூலம் ரசிகர்களை கவர்ந்திழுக்கும். இந்த படம் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியிடப்படும் பான்-இந்தியா சினிமா அனுபவத்திற்கான உத்திரவாதம் அளிக்கிறது.

நடிகர்கள் :-
‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த், அமிதாப் பச்சன், மஞ்சு வாரியர், ஃபஹத் ஃபாசில், ராணா டகுபதி,ரோகிணி,அபிராமி,ரித்திகா சிங், துஷாரா விஜயன்.

படக்கழு :-
தயாரிப்பு : லைகா புரொடக்ஷன்ஸ்

தயாரிப்பாளர் : சுபாஸ்கரன்

இயக்குனர் : த.செ. ஞானவேல்

இசையமைப்பாளர் : அனிருத் ரவிச்சந்தர்

ஒளிப்பதிவாளர் : எஸ். ஆர். கதிர்

எடிட்டர் : பிலோமின் ராஜ்

தயாரிப்பு வடிவமைப்பு : கே கதிர்

ஸ்டண்ட் இயக்குனர் : அன்பறிவ்

ஒப்பனை : பானு, பட்டினம் ரஷீத்

ஆடை வடிவமைப்பாளர் : அனு வர்தன்

லைகா புரொடக்ஷன்ஸ் தலைமை நிர்வாகி : ஜி. கே. எம். தமிழ் குமாரன்

மக்கள் தொடர்பு : ரியாஸ் K அஹ்மத்