அரிய வகை நோயுடன் போராடும் குழந்தையின் சிகிச்சைக்கு உதவ பொதுமக்களிடம் பெற்றோர் வேண்டுகோள்

78

சென்னை, ஆகஸ்ட் 2024: தண்டுவட தசைநார் சிதைவு நோயுடன் போராடும் தங்கள் இளம் மகள் ஷ்ரீனிகாவை காப்பாற்ற  சென்னையை சேர்ந்த அஜித் குமாரும் அவரது குடும்பத்தினரும் பொதுமக்களின் உதவியை எதிர்நோக்கியுள்ளனர். ஒரு அரிய மரபணு நோயான இந்நோய் சுவாசிக்கவும், விழுங்கவும், இறுதியில் நகரவும் முடியாதபடி படிப்படியாக தசைகளை பலவீனப்படுத்த கூடியதாகும்.

இந்த நோயுடன் போராடி வரும் ஷ்ரீனிகாவின் சிகிச்சைக்கு சோல்கென்ஸ்மா என்னும் ஊசி தேவைப்படுகிறது. 19,512 அமெரிக்க டாலர் விலை மதிப்புடைய இந்த ஊசி இந்திய மதிப்பில் 16 கோடி ரூபாய் ஆகும். இந்த ஊசி உடனடியாக தேவைப்படுவதால்   இக்குழந்தையின் பெற்றோர் தங்களது பணத்தேவைக்காக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மகளின் உயிரைக் காப்பாற்ற வேண்டும் என்பதில் உறுதியாக உள்ள அஜித் மற்றும் அவரது குடும்பத்தினர் தெருக்களில் துண்டுப் பிரசுரங்களை விநியோகித்தும், ஆட்டோக்கள் மற்றும் பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்தும் மக்களிடம் சென்று உதவி கோரி வருகிறார்ககள்.

இதன்மூலம் பொதுமக்களின் ஆதரவுடன் ஷ்ரீனிகாவின் பெற்றோர் ரூபாய் 1.8 கோடி வரை சேகரித்துள்ளனர். குழந்தையின் சிகிச்சைக்காக மேலும் 14.2 கோடி ரூபாய் சேர்க்க வேண்டிய கட்டாயத்தில் இக்குழந்தையின் பெற்றோர் உள்ளனர். சிறியதோ பெரியதோ, ஒவ்வொரு பங்களிப்பும், ஷ்ரீனிகாவுக்குத் தேவையான உயிர்காக்கும் சிகிச்சைக்கு பேருதவியாக இருக்கும் என்று ஷ்ரீனிகாவின் பெற்றோர் பொதுமக்களிடம் வேண்டுகின்றனர். குழந்தையின் சிகிச்சைக்கு உதவ விரும்புவோர் கீழ்கண்ட இணைப்பின் மூலம் தங்கள் பங்களிப்பை வழங்கலாம். https://milaap.org/fundraisers/support-child-of-ajithkumar