‘ஆல்ஃபா’ திரைப்படத்தின் படப்பிடிப்பை தொடங்குவதற்கு முன்பு ‘ஷர்வரி’ தனது ரசிகர்களுக்கு முக்கியமான திங்கட்கிழமை உத்வேகத்திற்கான மேற்கோளை பதிவிட்டார்!

88

வளர்ந்து வரும் நட்சத்திரமான ஷர்வரி தனது அடுத்த படத்தை ஒய்.ஆர்.எஃப் ஸ்பை யுனிவர்ஸின் ‘ஆல்ஃபா’ திரைப்படத்தின் மூலம் தொடங்கி உள்ளார். இதில் அவர் பாலிவுட்டின் முன்னணி நடிகைகளில் ஒருவரான ‘சூப்பர் ஸ்டார்’ ஆலியா பட்டுடன் இணைந்து பணியாற்றுகிறார்! ஆல்ஃபா படப்பிடிப்பை தொடங்குவதற்கு சில நாட்களுக்கு முன்பு, ஷர்வரி தனது சமூக ஊடகங்களில் ஹாட்டான திங்கட்கிழமை உத்வேகத்திற்கான மேற்கோளை அளித்து, இணைய உலகத்தின் மூலம் முக்கிய உடற்பயிற்சி இலக்குகளைக் கொடுத்தார்!

ஷர்வரி ‘தற்போது எவ்வளவு கட்டுக்கோப்பான மற்றும் சிறந்த உடற்கட்டுடன் கூடிய வடிவத்தில் இருக்கிறார் என்பதைக் காட்டும் தொடர்ச்சியான படங்களை வெளியிடுவதன் மூலம் திங்கள்கிழமை பயிற்சியை ஒருபோதும் தவறவிட வேண்டாம்’ என்று இணையத்தில் உள்ள தனது ரசிகர்களையும் பொதுமக்களையும் கேட்டுக் கொண்டுள்ளார்!

மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ள நிகில் அத்வானியின் அடுத்த திரைப்படமான வேதாவிலும், ஒய். ஆர். எஃப்-இன்  ‘தி ரயில்வே மென்’ திரைப்படத்தின் மூலம் மிகுந்த பாராட்டைப் பெற்று புகழடைந்த இளம் இயக்குனர் ஷிவ் ராவைல் இயக்கத்தில் ஆதித்யா சோப்ராவின் தயாரிப்பில் ‘ஆல்ஃபா’விலும் ஷர்வரி நடிக்கிறார்!

ஷர்வரியின் பதிவை இங்கே காணலாம்: