சன்னி தியோல், கோபிசந்த் மலினேனி, இணையும் சன்னி தியோல், கோபிசந்த் மலினேனி, #SDGM  படத்தின் படப்பிடிப்பு ஜூன் 22 முதல் துவங்குகிறது !!

90

இந்தியாவையே தன் கதர் 2  படம்  மூலம் திரும்பிப் பார்க்க வைத்த பாலிவுட் நட்சத்திர நடிகர் சன்னி தியோல், தன் அடுத்த படத்தைத் துவக்கியுள்ளார். 40 வருடங்களைக் கடந்து, 100 படங்களை நோக்கி முன்னெறி வரும் சன்னி தியோல் ஆக்சன் அதிரடி படங்கள் மூலம் பெரும் ரசிகர் பட்டாளத்தைச் சேர்த்து வைத்துள்ளார். இவரது அடுத்த படம், மிகப்பெரும் பிரமாண்ட படைப்பாக உருவாகிறது. நவீன் யெர்னேனி, மைத்ரி மூவி மேக்கர்ஸ் Y ரவிசங்கர் மற்றும் பீப்பிள் மீடியா ஃபேக்டரியின் TG விஸ்வ பிரசாத் ஆகியோர் இணைந்து பிரமாண்டமாகத் தயாரிக்க, பிளாக்பஸ்டர் இயக்குநர் கோபிசந்த் மலினேனி  இப்படத்தை இயக்குகிறார்.

கிராக் மற்றும் வீர சிம்ஹா ரெட்டி ஆகிய இரண்டு தொடர்ச்சியான பிளாக்பஸ்டர்களை வழங்கிய இயக்குநர் கோபிசந்த் மலினேனி, #SDGM திரைப்படத்தை, முழுமையான கமர்ஷியல் அம்சங்களுடன் அதிரடி ஆக்‌ஷன் என்டர்டெய்னராக உருவாக்கவுள்ளார். இது அவரது முதல் இந்தி திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது. இதுவரை கண்டிராத ஆக்‌ஷன் அவதாரத்தில் ஹீரோ சன்னி தியோலை இப்படத்தில் காட்சிப்படுத்தவுள்ளார். தென்னிந்திய இயக்குநருடன் பாலிவுட் நட்சத்திரங்கள் நடிக்கும் படங்கள் மீது, வடநாட்டுப் பார்வையாளர்கள் சிறப்பு ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்த வகையில் இப்பொழுதே இப்படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.

மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் பீப்பிள் மீடியா ஃபேக்டரி ஆகிய இரண்டு நிறுவனங்கள் பெரிய  நட்சத்திரங்களை வைத்து அதிக பட்ஜெட்டில் பிரம்மாண்ட படங்களைத் தயாரிப்பதில்  பெயர் பெற்றவை. இந்த இரண்டு தயாரிப்பு நிறுவனங்களும் மிகச் சரியான இயக்குநர் இணையும் இந்த பாலிவுட் #SDGM படம் சிறந்த தொழில்நுட்ப தரத்துடன் அட்டகாசமான படைப்பாக உருவாகவுள்ளது.

திரைத்துறை பிரபலங்கள் மற்றும் படக்குழுவினர் கலந்துகொள்ள இப்படம்  இன்று ஹைதராபாத்தில் பிரம்மாண்டமாகத் துவக்கப்பட்டது.

இப்படத்தில் சயாமி கெர் மற்றும் ரெஜினா கசாண்ட்ரா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். மிகப் பிரபலமான தொழில்நுட்ப வல்லுநர்கள் இப்படத்தில் பணியாற்றவுள்ளனர். ரிஷி பஞ்சாபி ஒளிப்பதிவு செய்ய, தமன் S இசையமைக்கிறார். நவின் நூலி படத்தொகுப்பாளராகவும், அவினாஷ் கொல்லா தயாரிப்பு வடிவமைப்பாளராகவும் பணியாற்றுகின்றனர்.

மாஸ் ஆக்சன் எண்டர்டெயினராக உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு வரும் ஜூன் 22 முதல் துவங்குகிறது.

நடிகர்கள்: சன்னி தியோல், சயாமி கெர், ரெஜினா கசாண்ட்ரா மற்றும் பலர்

தொழில்நுட்பக் குழு:

எழுத்து , இயக்கம் : கோபிசந்த் மலினேனி தயாரிப்பாளர்கள்: நவீன் யெர்னேனி, Y ரவிசங்கர், TG விஸ்வ பிரசாத்
தயாரிப்பு நிறுவனம் : மைத்ரி மூவி மேக்கர்ஸ், பீப்பிள் மீடியா ஃபேக்டரி
இசை: தமன் S
ஒளிப்பதிவு : ரிஷி பஞ்சாபி
எடிட்டர்: நவின் நூலி
தயாரிப்பு வடிவமைப்பாளர்: அவினாஷ் கொல்லா CEO: செர்ரி
தயாரிப்பு மேற்பார்வை : பாபா சாய் குமார் மாமிடிபள்ளி, ஜெய பிரகாஷ் ராவ் (JP)
ஸ்டண்ட் இயக்குனர்: அன்ல் அரசு, ராம் லக்ஷ்மன், வெங்கட்
வசனங்கள்: சௌரப் குப்தா
எழுத்து : M விவேக் ஆனந்த், நிம்மகத்தா ஸ்ரீகாந்த், ஸ்ரீனிவாஸ் கவிரெட்டி, மயூக் ஆதித்ய கிருஷ்ணா
ஆடை வடிவமைப்பாளர்கள்: பாஸ்கி (ஹீரோ), ராஜேஷ் கமர்சு
விளம்பர வடிவமைப்பாளர்: கோபி பிரசன்னா VFX: டெக்கான் ட்ரீம்ஸ்
மக்கள் தொடர்பு : சதீஷ்குமார் (S2 மீடியா)
மார்கெட்டிங் : ஃபர்ஸ்ட் ஷோ