சென்னை கேப்/டாக்சி சங்கங்கள் நம்ம யாத்ரியுடன் கைகோர்த்து ஜீரோ கமிஷன் சவாரிகள் வழங்குகின்றன

154

ஜீரோ-கமிஷனில் கேப் சேவை, குறைந்தபட்ச ஆதரவு விலையுடன் ஓட்டுநர்களுக்கு டைரக்ட் பேமெண்ட்
* அனைத்து முக்கிய கேப் தொழிற்சங்கங்களின் வலுவான ஒப்புதல் மற்றும் சிறந்த வாடிக்கையாளர் சேவை உறுதிமொழி
* விரைவான புக்கிங், குறைந்த ரத்துக்கள், மலிவு விலை மற்றும் நல்ல சேவையை வழங்க உறுதியளிக்கிறது.
15,000 கேப் ஓட்டுநர்கள் இணைந்துள்ளனர்; மூன்று மாதங்களில் மேலும் 50,000 இலக்கு.

சென்னை, மே 2, 2024: இந்தியாவின் மிகப்பெரிய ஓப்பன் மொபிலிட்டி செயலியான தெரிவித்தனர்.

நம்ம யாத்ரி சென்னையில் கேப் சேவைகளை அறிவிக்கிறது. தற்போதைய புக்கிங் செயலிகளில் உள்ள அதிக கமிஷன்கள் மற்றும் வெளிப்படைத்தன்மையில்லா நிலையை அகற்ற, வாழ்நாள் முழுவதும் ஜீரோ கமிஷன், டைரக்ட்-டு-டிரைவர் பேமெண்ட் மாதிரியை அறிமுகப்படுத்துகிறது. மக்களை முன்னிலை படுத்திய அணுகுமுறை கொண்ட இந்த செயலி, ஓட்டுநர் வருமானத்தை அதிகரிப்பது மட்டுமல்லாமல், பயணிகளுக்கான விலைகளை குறைக்கிறது, வாகன பராமரிப்பை மேம்படுத்துகிறது மற்றும் வாடிக்கையாளர் சேவையை மேம்படுத்துகிறது. ONDC இல் முன்னணி செயலியான நம்மயாத்ரி தனது ஒபப்ன் டேட்டா (open data) மற்றும் ஒபப்ன் சோர்ஸ் சாப்ட்வேர் (open source software) மூலம் 100% வெளிப்படைத்தன்மையை உறுதி செய்கிறது. மேலும், இந்தியாவில் ஓட்டுனர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை (MSP – Minimum Support Price) அமல்படுத்திய முதல் செயலியாக நம்மயாத்ரி திகழ்கிறது. இதனால் நியாயமான விலை நிர்ணயம் செய்து விலைவாசி உயர்வு ஏற்படும் போது ஓட்டுனர்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கபடுகிறது. மேலும் ஓட்டுநர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் இருவரும் சமமாக பயனடைகின்றனர்.

முதன்முறையாக, சென்னையில் உள்ள அனைத்து முக்கிய கேப் மற்றும் டாக்சி தொழிற்சங்கங்களும் ஒன்றுகூடி ஒரு புதிய செயலியின் வெளியீட்டுக்கு ஆதரவளித்துள்ளன. இந்நிகழ்வில் 50க்கும் மேற்பட்ட ஓட்டுநர்கள் கலந்து கொண்டு வாடிக்கையாளர்களுக்கு “சூப்பர் சர்வீஸ்” உறுதிமொழியளித்தது குறிப்பிடத்தக்கது. முக்கிய பிரமுகர்களான சாலை பொதுச் செயலாளர் வி.குப்புசாமி போக்குவரத்து கூட்டமைப்பு – சிஐடியு; ஏ.ஜாஹிர் உசேன், உரிமைக் குரல் ஓட்டுனர்கள் அமைப்பின் பொதுச் செயலாளர் ஒன்றியம்; வெற்றிவேல், உரிமையாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர்; முஸ்தபா, பொதுச் செயலாளர் அனைத்து ஓட்டுநர்கள் வாழ்வுரிமை ஒன்றியம்; டில்லி பாபு, பீக் டிரைவர்கள் சங்க தலைவர்; மற்றும் செல்வம், நியூ அக்னி விங்ஸ் டிரைவர் யூனியனின் தலைவர், ஆகிய அனைவரும் நம்மயாத்ரிக்கு தங்கள் ஆதரவை தெரிவித்தனர்.

நிகழ்ச்சியில் பேசிய தொழிற்சங்கத் தலைவர்கள், நம்மயாத்திரியின் நேர்மறையான தாக்கத்தை வலியுறுத்தி, ஓட்டுநர்களுக்கு 100% கட்டணம், முழுமையான சுதந்திரம் மற்றும் வெளிப்படைத்தன்மை அளிக்கும் அதன் கொள்கையை பாராட்டினர். ஓட்டுநர்களுக்கு கிடைக்கும் அதிக வருவாய் மூலம் சேவை தரத்தை மேம்படுத்த அவர்கள் உறுதி பூண்டுள்ளனர், இந்த கூட்டாண்மையை சென்னை போக்குவரத்து துறையின் முக்கிய வளர்ச்சியாக பார்க்கிறது. சிஐடியுவைச் சேர்ந்த திரு. வி குப்புசாமி, “சென்னையில் நம்மயாத்ரி கேப்களை அறிமுகப்படுத்தியதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். எங்கள் கேப் ஓட்டுநர்கள் மற்றும் மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதில் அவர்களுக்கு நாங்கள் ஆதரவாக நிற்கிறோம். எங்கள் ஓட்டுநர்கள் சென்னை மக்களுக்கு சிறந்த சேவையை வழங்குவதில் உறுதியாக உள்ளனர். சண்முகவேல் M S, நம்ம யாத்ரி / ஜுஸ்பே, “நம்ம யாத்ரி ஓட்டுநர் சமூகத்தை மேம்படுத்தவும், சிறந்த வாடிக்கையாளர் சேவையை வழங்கவும் பாடுபடுகிறது. ஜீரோ கமிஷன் மாதிரியை முன்னோடியாக கொண்டு, ஓட்டுநர் நலத்திட்டங்களை செயல்படுத்துவதன் மூலம், தற்போதைய நிலையை மாற்றியுள்ளோம். சென்னையின் குடிமக்களுக்கு சிறந்த சேவையை வழங்க நாங்கள் காத்திருக்கிறோம்!” கூடுதலாக “நம்ம யாத்ரி ONDC இன் ஒரு சான்றாகும். போக்குவரத்தை ஜனநாயகப்படுத்தும் நோக்கம். அவர்கள் எங்கள் open நெட்வொர்க் மூலம் நாட்டில் போக்குவரத்தை மாற்றியுள்ளனர். சென்னை ஓட்டுநர்களின் வாழ்க்கையில் சாதகமான தாக்கத்தை ஏற்படுத்த நாங்கள் முழு ஆதரவை வழங்குவோம்.” என ONDC ஐச் சேர்ந்த திரு. T Koshy, CEO ONDC கூறினார்.

பல்வேறு நகரங்களிலுள்ள நம்மயாத்ரி, 60 லட்சம் வாடிக்கையாளர்களையும் 3.3 லட்சம் ஓட்டுநர்களையும் கொண்டுள்ளது. 3.6 கோடி பயணங்களை முடித்து, கமிஷன் இல்லாமல் ஓட்டுநர்கள் 550 கோடி சம்பாதிக்க வழிவகுத்துள்ளது. சென்னையில் கடந்த பிப்ரவரியில் ஆட்டோ சேவையை துவக்கி, 273,000 பயணங்களை எட்டியுள்ளது, இதன் மூலம் ஓட்டுநர்களுக்கு ரூ.4 கோடி வருமானம் ஈட்டியுள்ளது. 15,000 க்கும் மேற்பட்ட கேப் ஓட்டுநர்கள் ஏற்கனவே இணைந்துள்ளனர், மேலும் 50,000 இலக்கை அடைவதுதான் அடுத்த மூன்று மாதங்களின் இலக்கு. புதுமையான அம்சங்கள் மற்றும் சமூகம் சார்ந்த அணுகுமுறையுடன், நம்ம யாத்ரி விரைவான பிக்-அப்கள், குறைந்த கேன்சல்கள், மலிவு விலைகள் மற்றும் நம்பகமான சேவையை உறுதி செய்கிறது. சென்னைக்கு நிலையான மற்றும் உள்ளடக்கிய போக்குவரத்தை நோக்கி தொடர்ந்து பணியாற்றி வருகிறது.