44 படங்களை ரிலீஸ் செய்த ATM மதுராஜின் 45 ஆவது படமாக அஜித்குமார் நடித்த “பில்லா” ரீ ரிலீஸ் ஆகிறது.

121

டிஸ்டிபியூட்டராக தமிழ்சினிமாவிற்கு அறிமுகமாகி, “சென்னை அன்புடன் வரவேற்கிறது” படம் மூலம் தயாரிப்பாளராக உயர்ந்து “தொட்ரா” படம் மூலம் இயக்குனராக உயர்ந்தவர் மதுராஜ். “தொட்ரா” படம் விமர்சன ரீதியாக மிகுந்த வரவேற்பை பெற்று ஒட்டுமொத்த பத்திரிகையாளர்களும் பாராட்டிய படம். “தொட்ரா” படத்திற்கு அப்போதைய அரசியல் கட்சி தலைவர்கள் ஜாதி ரீதியாக பல பிரச்சினைகளை உருவாக்கினார்கள். இவர் இயக்குனர் பாக்யராஜ் பட்டறையில் பாடம் பயின்றவர்.

“இமைக்கா நொடிகள்”, “கோமாளி”, ” காக்கிசட்டை”, “கொடி”, “கயல்”, “நான்கடவுள்”, ” கள்வன்”, “வேலையில்லா பட்டதாரி” உட்பட 44 படங்களை தமிழ்நாடு, கர்நாடகாவில் ATM புரொடக்‌ஷன் மூலம் விநியோகம் செய்திருக்கிறார்.

“விடுதலை” படத்தின் தெலுங்கு உரிமையும் இயக்குனர் மதுராஜ் அவர்களிடம் இருக்கிறது. கமலஹாசனின் மாஸ்டர் பீஸ் “நாயகன்” தமிழ்நாடு உரிமையும் ATM புரொடக்‌ஷனிடம் இருக்கிறது. “நாயகன்” படம் இந்தியன் 2 சமயத்தில் வெளியிட திட்டமிட்டிருக்கிறார்.

1980 ஆம் ஆண்டு ரஜினிகாந்த் நடிப்பில் மெகா ஹிட்டடித்த படம் “பில்லா”. இந்த திரைப்படத்தின் டைட்டிலை அஜித்குமாருக்கு ரஜினியே விரும்பி கொடுத்தார்.
2007 ஆம் ஆண்டு ரிலீஸான அஜித்குமாரின் “பில்லா” நாளை தமிழகமெங்கும் ATM புரொடக்‌ஷன் சார்பாக மதுராஜ் வெளியிடுகிறார். மிகுந்த எதிர்பார்ப்பில் இருக்கும் “பில்லா” 140 திரையரங்குகளுக்கு மேல் வெளியாகிறது.

நடிகர்கள்

அஜித்குமார், பிரபு, ரஹ்மான், நயன்தாரா, நமீதா

இசை
யுவன்சங்கர்ராஜா

எடிட்டிங்
ஸ்ரீகர்பிரசாத்

ஒளிப்பதிவு
நிரவ்ஷா

இயக்கம்
விஷ்ணுவர்த்தன்

@rajkumar_pro