நடிகை ஸ்ருதிஹாசனின் இனிமேல் ஆல்பம் பாடல் 10 மில்லியன் பார்வைகளை கடந்து சாதனை படைத்துள்ளது !!

110

கமல்ஹாசனின் ராஜ் கமல் ஃபிலிம் இன்டர்நேஷனல்ஸ் தயாரிப்பில் உருவான இந்த பாடலில் பிரபல இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நடிகராக அறிமுகமாகமானர்.

நடிகையும் இசையமைப்பாளருமான ஸ்ருதி ஹாசனின் வடிவமைப்பில் உருவான இனிமேல் ஆல்பம் பாடல் தற்போது யூடியூப்பில் 10 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைக் கடந்து சாதனை படைத்து வருகிறது. கடந்த மார்ச் 25ஆம் தேதி வெளியான இந்தப் பாடல் அனைத்து தரப்பிலிருந்தும் பாராட்டுகளைப் பெற்று வருகிறது. ஸ்ருதி மற்றும் லோகேஷ் ஆகியோரின், ரசிகர்கள் மனதைக் கொள்ளை கொள்ளும் நடிப்பில், இந்தப் பாடல், இன்றைய இளைய தலைமுறையினரின் வாழ்க்கையை படம்பிடித்து காட்டுகிறது.

இந்த ஆல்பம் பாடல் அறிவிக்கப்பட்டதிலிருந்தே ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வந்தது. ‘இனிமேல்’ பாடல் மாடர்ன் உலக இளைஞர்களின் காதலின் அனைத்து நிலைகளையும் அதன் அனைத்து ஏற்ற இறக்கங்களுடனும் சித்தரிக்கிறது. இப்பாடல் ஒரு சமகால காதலின் வடிவத்தை கச்சிதமாகப் படம்பிடித்துள்ளது, இது பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்திழுக்கிறது.

நடிகை ஸ்ருதி ஹாசன் அடுத்ததாக அத்வி சேஷ் நடிக்கும் ‘டகாய்ட்’ படத்தில் நடிக்கிறார். அவரது சர்வதேச படமான ‘தி ஐ’ இந்த ஆண்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பாடல் –