எந்த ஒரு விளம்பரமும் தேடாத உத்தம மனிதர் கே ஆர் என் ராஜேஷ்குமார் அவர்களுக்கு இன்று பிறந்தநாள்…

113

“வலது கை கொடுப்பது… இடது கைக்கு தெரியக்கூடாது” என்பார்கள். இதனை அரசியலில் பின்பற்றுவோர் வெகு சிலரோ உண்டு. அந்த வகையில், சாதி, மதம் பார்க்காமல், எந்த கட்சியைச் சேர்ந்த குடும்பத்தினர் தன் வீட்டு கதவை தட்டினாலும், சொந்தப்பணத்தில் உதவி செய்து வருபவர் K.R.N.இராஜேஷ்குமார்…

இவர் நாமக்கல் மாநிலங்களவை உறுப்பினர், நாமக்கல் கிழக்கு மாவட்ட செயலாளர் மற்றும் நாமக்கல் கூட்டுறவு வங்கியின் தலைவர் என பல்வேறு பொறுப்புகளை வகித்து வந்தாலும், இல்லை என்று வந்தவர்களுக்கு அள்ளி அள்ளி கொடுக்கும் இவரது வள்ளல் குணம் ஒட்டுமொத்த நாமக்கல் மாவட்ட மக்களுக்கும் பரிட்சையமானது.

ஒவ்வொரு நாளும் தனது வீட்டுக் கதவை தட்டும் ஏழை மக்களின் மருத்துவ செலவிற்கும், குழந்தைகளின் கல்வி செலவிற்கும் சொந்த பணத்தை அள்ளி, அள்ளி கொடுத்து வருகிறார். குறிப்பாக படிப்பில் சிறந்து விளங்கும் ஏழை எளிய மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் தனது சொந்த செலவில் இன்ப சுற்றுலா அழைத்துச்செல்வது, புது துணிமணிகள் வாங்கிக்கொடுப்பது என பல்வேறு சமூக நலப்பணிகளை முகம் சுழிக்காமல் செய்து வருகிறார்.

இவ்வளவு ஏன்?… மாற்றுத்திறனாளிகள் விஷயத்திலும் சிறப்பு கவனம் செலுத்தி வருகிறார். ஆம், மாற்றுத்திறனாளிகளுக்கான இருசக்கர வாகனம் வழங்குதல், அவர்கள் சொந்தமாக தொழில் தொடங்கி முன்னேற சொந்த பணத்தை வழங்கி உதவுதல் ஆகியவற்றை தொடர்ந்து செய்து வருகிறார்.

உதவிக்கரம் நீட்டுவதில் மட்டுமல்ல, அரசியல் கட்சியில் எதிர்க்கட்சிகளை தனது அனல் தெறிக்கும் பேச்சால் தெறிக்க விடுவதிலும் வல்லவர்.

சமீபத்தில் நாமக்கல்லில் நடந்த திமுக கூட்டணி செயல்வீரர்கள் கூட்டத்தில் பாஜகவுக்கு சவால் விடும் வகையில் அண்ணன் ராஜேஷ் குமார் பேசியதைக் கூறலாம். “மகளிருக்கு இலவச பேருந்து அறிவிப்பு முதல் காலை உணவுத்திட்டம் வரை தேர்தல் அறிக்கையில் சொன்ன எல்லாத்தையுமே திமுக நிறைவேற்றியிருக்கு… கொங்கு மண்ணில் திமுகவை எந்த கொம்பனாலும் அசைக்க முடியாது” எனக்கூறி எதிர்க்கட்சிகளை மிரளவைத்தார்.

Video For Reference: https://www.youtube.com/watch?v=IcoLjT2yT4M

எத்தனை உதவிகள் செய்தாலும் இதுவரை தான் செய்த உதவிகள் குறித்து எந்த ஒரு விளம்பரமும் தேடாத உத்தம மனிதர் கே ஆர் என் ராஜேஷ்குமார் அவர்களுக்கு இன்று பிறந்தநாள்… மனிதருள் மாணிக்கமாக திகழும் அண்ணார் கே ஆர் என் ராஜேஷ்குமார் இன்று போல் என்றும் மக்களுக்கு சேவையாற்ற வாழ்த்துக்கள்…