திமுகவின் தேர்தல் அறிக்கையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.

514

கழகத் தலைவர் – மாண்புமிகு முதலமைச்சர் M. K. Stalin அவர்கள், நாடாளுமன்றத் தேர்தல் 2024-க்கான தி.மு.கழகத் தேர்தல் அறிக்கையை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் வெளியிட்ட நிகழ்வில் இன்று பங்கேற்றோம்.

மாநில சுயாட்சியை நிலைநாட்ட அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தம் – முதலமைச்சரை கலந்தாலோசித்த பின்னரே ஆளுநர் நியமனம் – மாநில முதலமைச்சர்களை கொண்ட மாநில வளர்ச்சிக்குழு – இந்தியா முழுவதும் பள்ளிகளில் காலைச்சிற்றுண்டித் திட்டம் – இந்திய மகளிருக்கு மாதம் ரூ.1000 – தமிழ்நாட்டில் உச்சநீதிமன்ற கிளை – ஒரே நாடு, ஒரே தேர்தல் ரத்து – #CAA அமல்படுத்தப்படாது – மாணவர்களுக்கு 4 லட்சம் வரை வட்டியில்லா கல்விக்கடன் – பொதுசிவில் சட்டம் அமலாகாது- ஒன்றிய அளவில் சாதிவாரி கணக்கெடுப்பு –
என #DravidianModel திட்டங்களையும் – லட்சியத்தையும் இந்திய ஒன்றியம் முழுவதும் பரவச் செய்கின்ற வழிகாட்டியாக கழகத் தேர்தல் அறிக்கை அமைந்துள்ளது.

இந்திய ஒன்றியத்தின் பன்முகத்தன்மையை காப்பாற்ற – மாநில உரிமைகளை மீட்டெடுக்க, கழகத்தின் தேர்தல் அறிக்கையை பட்டிதொட்டியெங்கும் கொண்டு சேர்ப்போம். பாசிஸ்ட்டுகளையும் – அடிமைகளையும் தேர்தல் களத்தில் வீழ்த்தி #INDIA-வை வெல்லச் செய்வோம்.