வளர்ச்சியை நோக்கி பர்கூர் -சட்டமன்ற உறுப்பினர் மதியழகன்
வளர்ச்சியை நோக்கி பர்கூர் என்கிற நோக்கில் பர்கூர் சட்டமன்ற உறுப்பினர் பல் வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை மேற்கொண்டு வருகிறார்.
பர்கூர் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.9.25 இலட்சம் மதிப்பீட்டில் பர்கூர் பேரூராட்சி திருப்பத்தூர் கூட்ரோடு பேருந்து நிழற்கூடம் அமைக்கும் பணிகள், அரசு பள்ளிகளில் உட்கட்டமைப்பு வசதி மேம்படுத்துதல் மற்றும் பராமரிப்பு திட்டம் ஆறாவது நிதி குழு மானியம் ரூ.20.50 இலட்சம் மதிப்பீட்டில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 15 இருக்கைகள் கொண்ட கழிப்பறை கட்டிடம் அமைக்கும் பணி,மற்றும் 15வது நிதி ஆணைய நிபந்தனை மானிய நிதி 2023-2024(Tied Grant) வார்டு எண்:13 செட்டியார் தெரு மற்றும் ஏரர்குட்டை மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அருகில் புதிய ஆழ்துளை கிணறு அமைத்து பைப் லைன் ஆகிய பணிகள் மதிப்பீடு ரூ.09.00 இலட்சம் மற்றும் பர்கூர் பேரூராட்சிக்கு டிராக்டர்-2, டிரெய்லர்-2, மற்றும் தண்ணிர் டேங்-1 சப்ளை செய்தல் மதிப்பீடு ரூ.21.70 இலட்சம்,15 வது ஆணைய நிபந்தனையற்ற மானிய நிதி (United Grant ) கோதியழகனூர் மற்றும் கணேஷ் நகர் ,பாரத கோயில் குறுக்குதெரு,துரைஸ்நகர் பேவர் பிளாக், மதிப்பீடு ரூ.22.00 இலட்சம் வடிகால் அமைக்கும் பணிகள் துவக்கி வைக்கபட்டுள்ளது.
கிருஷ்ணகிரி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கிருஷ்ணகிரி நகராட்சி தஞ்சாவூர் மாரியம்மன் கோயில் குப்பம் ரோடு பழையப்பேட்டை அருகில் 15 வது CFC 2024-2025 திட்டத்தின் கீழ் ரூ: 49 இலட்சம் மதிப்பீட்டில் வார்டு எண்: 3,4,5,6,7,8,19,29,30 ஆகிய தெருக்களில் தார்சாலை அமைக்கும் பணிகள்,அன்பழகன் மருத்துவமனை அருகில் 15 வது CFC 2024-2025 திட்டத்தின் கீழ் ரூ. 59 இலட்சம் மதிப்பீட்டில் வார்டு எண்: 16,18,21,25,32, தார்சாலை அமைக்கும்பணிகளை சட்டமன்ற உறுப்பினர் மதியழகன் துவக்கி வைத்தார்.