GRT ஹோட்டல்ஸ் அண்ட் ரிசார்ட்ஸ் சார்பில் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட பெண்களுக்கான சமையல் போட்டியில் சென்னையை சேர்ந்த லோகேஸ்வரி முதல் பரிசை வென்றார்

121
GRT ஹோட்டல்ஸ் அண்ட் ரிசார்ட்ஸ் மார்ச் 5 ஆம் தேதி மற்றும் 7 ஆம் தேதிகளில்  வீட்டு சமையல் நிபுணர்களை கெளரவிக்கும் வகையில், இந்த போட்டியை நடத்தியது. ‘வீட்டில்  சமைப்பவர்கள் சமையல் குறிப்புகளை தாண்டி சமையல் ஒத்திகைகளை  உருவாக்குகிறார்கள்’   என்கிற யோசனையின் அடிப்படையில் உருவானதே இந்த பிரமாண்ட GReaT Shef சமையல் போட்டி.
இதில் 50 பெண்கள்  முதலில் ஒரு சிறப்பு குடும்ப சமையல் செய்முறையை செய்து நடுவர்களுக்கு வழங்கியதோடு மட்டுமின்றி ஏன் அந்த  குறிப்பிட்ட உணவைத் தேர்ந்தெடுத்தார்கள் என்கிற தகவலையும் வெளிப்படுத்தினர்.
 இதில் தேர்ந்தெடுக்கப்பட்ட
போட்டியாளர்கள்,  நேரடி சமையல் சவாலில் பங்கேற்றனர்.  அதைத் தொடர்ந்து இறுதிப் போட்டிக்கு 16 பேர்  தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
கிராண்ட் சென்னை, கிராண்ட் விஜயவாடா மற்றும் கிராண்ட் காக்கிநாடாவில் உள்ள கார்டன் கஃபே மற்றும் பஜார் உணவகங்களின் பிராண்ட் அம்பாசிடராக இருக்கும் கின்னஸ் சாதனை படைத்த செஃப் தாமு போட்டியாளர்களுக்கு ஆலோசனை வழங்கி வழிகாட்டினார்.
 போட்டியின் இறுதியில் சென்னையை சேர்ந்த லோகேஸ்வரி வெற்றி வாகை சூடினார். 2 ஆம் பரிசை ஓரிசாவை சேர்ந்த ரஷ்மிதா நாயரும், மூன்றாம் பரிசுகளை சென்னையை  சேர்ந்த பிஸிமோல், கோவையை சேர்ந்த சசி, கன்னியாகுமரியை சேர்ந்த பாத்திமா ஆகிய மூவரும் வென்றனர்.
GRT ஹோட்டல்கள் மற்றும் ரிசார்ட்ஸின் மூத்த பொது மேலாளர் மோனிதீப் ஜாஸ் இந்த நிகழ்வைப் பற்றிப் பேசுகையில், “இந்த ஆண்டு சர்வதேச மகளிர் தினத்திற்காக, வித்தியாசமான மற்றும் தனித்துவமான ஒன்றைச் செய்ய முடிவு செய்து இந்த போட்டியை நடத்தியதாக தெரிவித்தார். வீட்டு சமையல்காரர்களுக்கு அவர்களின் திறமைகளை வெளிக்காட்ட ஒரு தளத்தை ஏற்படுத்திக் கொடுக்க விரும்பியதாகவும் அவர் தெரிவித்தார்.