கடந்த 7 நாட்களில் 2 வது முறையாக தமிழ்நாடு வரும் பிரதமர் மோடி – நாளை சென்னை, நந்தனத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பாஜக பொதுக்கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றுகிறார்

110

பிப்ரவரி மாதம் 27, 28 ஆகிய தேதிகளில் 2 நாள் பயணமாக தமிழ்நாடு வந்த பிரதமர் மோடி நெல்லை மற்றும் பல்லடத்தில் நடைப்பெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றினார்.

இதனைத் தொடர்ந்து கடந்த 7 நாட்களில் 2 வது முறையாக தமிழ்நாடு வரும் பிரதமர் மோடி, நாளை சென்னை, நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் தமிழ்நாடு பாஜக சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பொதுக் கூட்டத்தில் பங்கேற்று உரையாற்ற உள்ளார்.

இன்று பிரதமரின் பயணத் திட்டத்தை பொறுத்தவரைக்கும், பிற்பகல் மகாராஷ்டிராவில் இருந்து பிற்பகல் 1.15 மணியளவில் சென்னை விமான நிலையம் வரும் வந்தடைகிறார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் கல்பாக்கம் செல்லும் பிரதமர் மோடி அங்கு ஈணுலை திட்டத்தை தொடங்கி வைக்கிறார்.

இதனைத் தொடர்ந்து, கல்பாக்கத்திலிருந்து ஹெலிகாப்டரில் புறப்பட்டு சென்னை விமான நிலையம் வரும் பிரதமர் மோடி விமான நிலையத்திலிருந்து காரில் புறப்படும் பிரதமர் மோடி மாலை 4.30 மணியிலிருந்து 5 மணிக்குள் நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானம் சென்றடைகிறார்.
ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் பொதுக்கூட்டம் முடிந்ததும் பிரதமர் மோடி மாலை 6.20 மணியளவில் சென்னை விமான நிலையத்திலிருந்து தெலங்கானா செல்ல உள்ளார்.

இதனையொட்டி, சென்னையில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு சுமார் 15 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். மேலும், பிரதமர் வருகையையொட்டி நாளை டிரோன்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதோடு போக்குவரத்து மாற்றமும் செய்யப்பட்டுள்ளது.
Subashchandrabose Rajavelan
Editor -Value Media Middle East -UAE