முதலைமச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் 71 வது பிறந்தநாளை முன்னிட்டு 1000 நபர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா கிருஷ்ணகிரியில் நடைபெற்றது.

80

எல்லோருக்கும் எல்லாம் என்ற தலைப்பில் திராவிட மாடல் நாயகரும் தமிழ்நாடு முதலைமச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் 71 வது பிறந்தநாளை முன்னிட்டு 1000 நபர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா கிருஷ்ணகிரியில் நடைபெற்றது.
தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கை விளக்க பொதுக்கூட்டம் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளரும் பர்கூர் சட்டமன்ற உறுப்பினர்D.மதியழகன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
பிரம்மாண்ட கூட்டத்தில் ,கிருஷ்ணகிரி சட்டமன்றத் தொகுதி பார்வையாளர், மாநில கொள்கை பரப்பு துணைச் செயலாளர், முன்னாள் அமைச்சர் திரு.Dr.விஜய் , திமுக மாநில வர்த்தக அணிச் செயலாளர் கவிஞர் திரு. காசிமுத்துமாணிக்கம் அவர்கள் உள்ளிட்ட கழக மூத்த முன்னோடிகள் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினர்.
விழாவில் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளரும் பர்கூர் சட்டமன்ற உறுப்பினர்D.மதியழகன் அவர்கள் சிறப்புரையாற்றி ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.