2024-ஆம் ஆண்டின் முதல் 50 நாள் வெற்றிப்படம் அரணம்.

78

ஜனவரி 05 அன்று அன்று தமிழ்நாடு, கேரளா மற்றும் கர்நாடக மாநிலங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியானது “அரணம்” திரைப்படம்.

இரண்டாம் வாரம் வெளியான நான்கு பெரிய நடிகர்களின் பொங்கல் சிறப்புத் திரைப்படங்களையும் தாண்டி.. அதன்பின் சில திரையரங்குகளே ஆனாலும் தொடர்ந்து ஏழுவாரங்களைக் கடந்து தற்போது எட்டாம் வாரத்தில் வெற்றிகரமாக அடியெடுத்து வைத்திருக்கிறது “அரணம்”.

இன்று 50-ஆம் நாள்.

பெரிய படங்களுக்கே கிட்டாத உயரம் அது.
சிறு படங்கள் நினைத்துக்கூட பார்க்கமுடியாத ஒன்று. இப்பெரும்பேறு.. வரலாறு.. பெரும் சாதனை.. அரணம் போன்ற எளிய படத்திற்கு கிடைத்திருப்பது மற்ற சிறுபடங்களுக்கான பெருநம்பிக்கை.

சென்னை ஆல்பர்ட் திரையரங்கில் இன்றிலிருந்து மதியம் 03.00 மணிக்காட்சியில் அரணம் திரைப்படம் காணலாம்.

இந்நேரத்தில் இதைச் சாத்தியப்படுத்திய “தமிழ்த்திரைக்கூடம்” தயாரிப்பு நிறுவனத்திற்கும், தயாரிப்பாளர்களுக்கும், உருவாக உழைத்த “அரணம்” திரைக்குழுவினருக்கும், சிறப்பான முறையில் உடன்நின்று வெளியிட்ட “உத்ரா புரொடக்சன்ஸ்” ஹரிஉத்ரா அவர்களுக்கும், ஏற்று அங்கீகாரம் தந்த பத்திரிக்கை மற்றும் ஊடக அன்பர்களுக்கும், ஏற்றுகொண்டு கொண்டாடி அடையாளம் தந்த மதிப்புமிகு மக்களுக்கும் மனம் நிறைந்த அகமார்ந்த நன்றிகள்.

மேலும் என்னை ஒரு கதை நாயகனாகவும், இயக்குநராகவும் ஏற்றுக்கொண்ட அத்துணை பேருக்கும் ஆழமான நன்றிகள்.

என்றும் அறம் வெல்லும்.
பிரியன்