நேரடி விற்பனைக்கான கண்காணிப்பு பொறிமுறையுடன் ஒழுங்குமுறை அம்சங்களை தமிழ்நாடு வலுப்படுத்துகிறது

68

சென்னை, பிப்.22: சுயவேலைவாய்ப்பு, திறன் மேம்பாடு மற்றும் அடிமட்ட அளவில் சமூக-பொருளாதார வளர்ச்சியை உருவாக்குவதில் நேரடி விற்பனைத் துறையின் முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டு, நேரடி விற்பனைக்கான கண்காணிப்பு ஆணையத்தை தமிழக அரசு அமைத்துள்ளது. இத்தகவலை சென்னையில் நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில் இந்திய நேரடி விற்பனை சங்கதின் தலைவர் விவேக் கடோச் பகிர்ந்துகொண்டார்.

இந்த ஆணையம், தொழில்துறையின் செயல்பாடுகளுக்கான தற்போதைய ஒழுங்குமுறை கட்டமைப்பை வலுப்படுத்துவது மற்றும் வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்துவது, நுகர்வோரின் புகார்களுக்கு தீர்வு காண்பதற்கும் அவர்களின் நலன்களைப் பாதுகாப்பதற்கும் ஒரு தளமாக இருக்கும்.

தனிநபர்கள், உள்ளூர் கைவினைஞர்கள் மற்றும் சிறு வணிகங்கள் நுகர்வோருடன், குறிப்பாக நாட்டின் கிராமப்புறங்களில் நேரடியாகத் தொடர்புகொள்வதற்கு இந்த துறை வழிவகுக்கிறது. 2021-22 ஆம் ஆண்டு தரவுகளின் படி, தென் பிராந்தியத்தில் கர்நாடகாவிற்கு அடுத்தபடியாக 514 கோடி ரூபாய்க்கு மேல் வர்த்தகம் செய்து தமிழ் நாடு இரண்டாவது பெரிய நேரடி விற்பனை சந்தையாக தொடர்கிறது. இத்தொழில் 1.9 லட்சத்திற்கும் அதிகமான சிறுதொழில்முனைவோருக்கு சுயவேலைவாய்ப்பை வழங்கியுள்ளது. இதில் 83 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பெண்கள் ஆவர். நடப்பு நிதியாண்டில் நேரடி விற்பனை துறை 11 சதவீதத்திற்கும் அதிகமான ஆண்டு வளர்ச்சி விகிதத்துடன் வணிகத்தில் ரூ.600 கோடியை கடக்க தயாராக உள்ளது.

இத்தொழில், மாநில கருவூலத்திற்கு வரிகள் மூலம் சுமார் 90 கோடி பங்களிக்கும் அதே வேளையில், ஒட்டுமொத்த தேசிய விற்பனையில் 2.7 சதவீதத்திற்கும் அதிகமான பங்கைக் கொண்டுள்ளது, இது 2021-22 ஆம் ஆண்டில் ரூ.19,000 கோடியாக இருந்ததாக இந்திய நேரடி விற்பனை சங்கம் தெரிவித்தது.

தமிழ்நாடு குடிமைப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை முதன்மைச் செயலர் திரு. ஹர் சஹய் மீனா சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பேசுகையில், மாநிலத்தில் தொழில்துறைக்கு ஏற்ற சூழல் உருவாக்கியுள்ளது. நுகர்வோருக்கான பொருட்களின் தரத்தை உறுதி செய்ய தனது துறை கடுமையாக உழைத்து வருவதாக அவர் வலியுறுத்தினார். பெண் தொழில்முனைவோருக்கு துறை தரப்பில் இருந்து அனைத்து விதமான உதவிகளையும் வழங்கும் அதே வேளையில், நுகர்வோரின் நலன்களைப் பாதுகாப்பதற்காக ஐடிஎஸ்ஏவுடன் இணைந்து பணியாற்றுவதற்கான ஆர்வத்தையும் அவர் வெளிப்படுத்தினார்.

இந்திய நேரடி விற்பனை சங்கத்தின் தலைவர் திரு.விவேக் கடோச், கண்காணிப்பு பொறிமுறையை அமைத்ததற்காக தமிழ் நாடு மாநில அரசுக்கு தனது நன்றியைத் தெரிவித்து பேசுகையில், தென் பிராந்தியத்தில் நேரடி விற்பனைத் தொழிலுக்கான முக்கிய மற்றும் முன்னுரிமை சந்தைகளில் தமிழ்நாடு தொடர்ந்து இருந்து வருகிறது. மாநிலத்தின் நேரடி விற்பனைத் தொழில் புதிய எல்லைகளுக்குத் தயாராக உள்ளது என்பதை வளர்ச்சி புள்ளிவிவரங்கள் தெளிவாகப் பிரதிபலிக்கின்றன, இது மாநிலத்தில் நேரடி விற்பனையாளர்களின் இடைவிடாத கடின உழைப்பை மீண்டும் உறுதிப்படுத்துகிறது. இத்தொழில் நிலையான சுயதொழில் மற்றும் குறு தொழில்முனைவு வாய்ப்புகளை வழங்கியுள்ளது. ஏறக்குறைய 84 லட்சம் இந்தியர்களுக்கு, கடந்த நான்கு ஆண்டுகளில் சுமார் 13 சதவீத கூட்டு வருடாந்திர வளர்ச்சி விகிதத்துடன் நிலையான மற்றும் நீடித்த வளர்ச்சியை வெளிப்படுத்தியுள்ளது. இந்திய நேரடி விற்பனை சங்கத்தின் 19 உறுப்பினர் நிறுவனங்கள், மாநிலத்தில் உள்ள 1.9 லட்சத்திற்கும் அதிகமான நேரடி விற்பனையாளர்களின் நுகர்வோர் நலன்களை வெற்றிகரமாகப் பாதுகாப்பதில் நம்பிக்கையுடன் உரிமை கோர முடியும் என்று அவர் கூறினார்.

நுகர்வோர் விவகார அமைச்சகம், நுகர்வோர் பாதுகாப்பு (நேரடி விற்பனை) விதிகள் 2021 மூலம், நேரடி விற்பனை நிறுவனங்களின் செயல்பாடுகள் மற்றும் நுகர்வோரைப் பாதுகாப்பதற்கான ஒழுங்குமுறை தெளிவைக் கொண்டு வந்துள்ளது. இதுவரை தமிழகம் உட்பட எட்டு மாநிலங்கள் அந்தந்த மாநிலங்களில் விதிகளின்படி கண்காணிப்புக் குழுக்களை அமைத்துள்ளன. இதை மற்ற மாநிலங்களும் பின்பற்றி வருகின்றன.

நிகழ்ச்சியின் போது நேரடி விற்பனைத் துறையில் சிறந்து விளங்கிய சுமார் 14 பெண் தொழில்முனைவோர்களும் கௌரவிக்கப்பட்டனர். திரு. ரஜத் பானர்ஜி, செயலாளர், இந்திய நேரடி விற்பனை சங்கம் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

இந்திய நேரடி விற்பனை சங்கம் பற்றி:

இந்திய நேரடி விற்பனை சங்கம் (IDSA) என்பது இந்தியாவில் நேரடி விற்பனைத் தொழிலுக்கான தன்னாட்சி, சுய ஒழுங்குமுறை அமைப்பாகும். தொழிற்சங்கம் மற்றும் அரசாங்கத்தின் கொள்கை உருவாக்கும் அமைப்புகளுக்கு இடையே ஒரு இடைமுகமாக இந்த சங்கம் செயல்படுகிறது, இது இந்தியாவில் நேரடி விற்பனைத் தொழிலின் காரணத்தை எளிதாக்குகிறது. இந்திய நேரடி விற்பனை சங்கம், ஆலோசனை மற்றும் நடவடிக்கைகள் மூலம் தொழில்துறை மற்றும் அரசாங்கத்துடன் கூட்டு சேர்ந்து, இந்தியாவில் நேரடி விற்பனைத் தொழிலின் வளர்ச்சிக்கு உகந்த சூழலை உருவாக்கவும் மேலும் மேம்படுத்தவும் பாடுபடுகிறது. இந்திய நேரடி விற்பனை சங்கம் கொள்கை சிக்கல்களில் அரசாங்கத்துடன் நெருக்கமாக பணியாற்றுவதன் மூலம் மாற்றத்தை ஊக்குவிக்கிறது, செயல்திறனை மேம்படுத்துகிறது மற்றும் விரும்பிய நம்பகத்தன்மை, தெளிவு மற்றும் நேரடி விற்பனையில் நம்பிக்கையை ஏற்படுத்துகிறது