இண்டெல் மணி லிமிடெட் நிறுவனம் ரூ. 200 கோடி வரையிலான பாதுகாப்பான, திரும்பப் பெறக்கூடிய, மாற்ற இயலாத கடன் பத்திரங்களை (NCDs) வெளியிடுகிறது!

125

ஒரு என்.சி.டி.யின் முகமதிப்புதலா ரூ. 1,000.

  • இந்த வெளியீட்டில் ரூ. 100 கோடி வரையிலான அடிப்படை வெளியீட்டு அளவும், கூடுதலாக ரூ. 100 கோடி வரை முதலீட்டைத் தக்கவைத்துக் கொள்ளவும் சாத்தியம் உள்ளது.
  • இந்த வெளியீடு ஜனவரி 30, 2024 தொடங்கி, பிப்ரவரி 12, 2024 அன்று நிறைவுறும்.
  • 72 மாதங்களில் முதலீடு இரட்டிப்பாகும் வாய்ப்பு.
  • கூப்பன் மூலம் ஆண்டுக்கு அதிகபட்சம் 12.25% வரை வட்டியைப் பெறலாம்.
  • 366 நாட்கள் முதல் 72 மாதங்கள் வரையிலான பாதுகாப்பான என்.சி.டி.கள்.
  • என்.சி.டி.களின் அனைத்து வாய்ப்புகளிலும் குறைந்தபட்ச முதலீட்டு அளவு 10 என்.சி.டி.கள் (ரூ. 10,000)

 சென்னை, தங்கக் கடன் பிரிவில் வேகமாக வளர்ந்து வரும் என்.பி.எப்.சி. (NBFC) நிறுவனங்களில் ஒன்றாகிய இண்டெல் மணி லிமிடெட் (Indel Money Limited), தலா ரூ. 1,000 முக மதிப்புள்ள பாதுகாப்பான மாற்ற இயலாத கடன் பத்திரங்களின் (என்.சி.டி.) 4-ஆவது வெளியீட்டை அறிவித்துள்ளது. இந்த வெளியீடு ஜனவரி 30, 2024 செவ்வாய்க்கிழமை அன்று திறக்கப்பட்டு பிப்ரவரி 12, 2024 திங்கள்கிழமை நிறைவுறும் (முன்கூட்டியே அதிக முதலீடுகள் கிடைத்தால், முன்கூட்டியே நிறைவுறும் சாத்தியமும் உள்ளது).

இண்டெல் மணி லிமிடெட் நிறுவனத்தின் எக்சிகியூட்டிவ் ஹோல் டைம் இயக்குநர் திருஉமேஷ் மோகனன் (Mr. Umesh Mohanan) கூறுகையில், “எங்கள் வணிக உத்தியானது தங்கக் கடன் பிரிவில் எங்களின் நிலையை மேம்படுத்துவதற்கும், எங்கள் இருப்பை விரிவுபடுத்துவதற்கும் போட்டித் தன்மையை பயன்படுத்திக் கொள்ளும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

2024-ஆம் நிதியாண்டின் முதல் பாதியில் நிறுவனம் தனது லாபத்தை சாதனை அளவாக 568.86% அதிகரித்து, ஒரு வலுவான ஏ.யு.எம். (AUM) வளர்ச்சி, தங்கக் கடனுக்கான தேவை அதிகரிப்பு, புதிய பிராந்தியங்களுக்கு விரிவாக்கம் மற்றும் ஒரு சவாலான வணிகச் சூழலையும் மீறிய செயல்பாட்டுத் திறன் ஆகியவற்றால் நட்சத்திர செயல்திறனை வெளிப்படுத்தியது.

தென்னிந்திய மாநிலங்களில் எங்களின் முதன்மையான வியூக மையமாக தமிழ்நாடு எப்போதும் இருந்து வருகிறது. புதிய கிளைகளைத் திறப்பதன் மூலமும் எங்கள் கிளைகளின் வலையமைப்பை விரிவுபடுத்துவதன் மூலமும் எங்கள் கடன் போர்ட்ஃபோலியோவை தொடர்ந்து வளர்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளோம். அதிகரித்த வருவாய், லாபம், நன்கு தெரிந்த நிலை ஆகியவை கிளை நெட்வொர்க்கை இயக்கும் காரணிகளாகும். இந்த வெளியீட்டின் மூலம், எங்கள் நிதி ஆதாரங்களை விரிவுபடுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளோம்.

இந்த வெளியீட்டில் ரூ. 100 கோடி வரையிலான அடிப்படை வெளியீட்டு அளவும், ரூ. 100 கோடி வரையிலான கூடுதல் முதலீட்டைத் தக்கவைத்துக் கொள்ளும் வாய்ப்பும் சேர்த்து ரூ. 200 கோடி மதிப்பைத் தொடும். விவ்ரோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பிரைவேட் லிமிடெட் (Vivro Financial Services Private Limited) என்ற நிறுவனம் இந்த வெளியீட்டின் முதன்மை மேலாளராகச் செயல்படும்.

இந்த வெளியீட்டின் மூலம் திரட்டப்படும் நிதியானது, கடன் வழங்குதல், நிதியளித்தல், நிறுவனத்தின் அசல், வட்டியை திருப்பிச் செலுத்துதல் / முன்கூட்டிச் செலுத்துதல் ஆகியவற்றிற்காகப் பயன்படுத்தப்படும்.

மார்ச் 31, 2023இல் இருந்த ரூ. 64,768.53 லட்சத்துடன் ஒப்பிடும்போது, செப்டம்பர் 30, 2023இல் இண்டெல் மணி லிமிடெட் மொத்த ஏ.யு.எம். (ஆஃப்-பேலன்ஸ் ஷீட் (off-balance sheet) சொத்துக்களைத் தவிர்த்து) ரூ. 81,740.86 லட்சமாக உள்ளது. செப்டம்பர் 30, 2023 நிலவரப்படி 250 கிளைகளின் கிளை வலையமைப்பைக் கொண்ட கடன் போர்ட்ஃபோலியோவின்படி தங்கக் கடன்கள் ~82% ஆகும். இண்டெல் மணி லிமிடெட் 2025 நிதியாண்டுக்குள் 12 இந்திய மாநிலங்களில் உள்ள 425 கிளைகள் மூலம் தனது புவியியல் தடத்தை விரிவுபடுத்த விரும்புகிறது, இது இந்தியாவின் கிழக்கு மற்றும் வட மாநிலங்களுக்கும் விரிவடையும்.

இன்டெல் மணி லிமிடெட் ஏற்கெனவே 3 என்.சி.டி.களின் பொது வெளியீடுகளை வெற்றிகரமாக அறிமுகப்படுத்தி ரூ. 260 கோடிக்கும் அதிகமாக நிதி திரட்டியுள்ளது.