தென் தமிழகம்

87

விவசாயம் மட்டுமே வாழ்வாதாரத்தை கொண்டிருக்கும் ஒரு கிராமம் மழையின்மை, வறட்சி சூழலில் சிக்கி தவிக்கிறது. இவ்வூரில் நன்கு படித்த இளைஞன் வேதனைப்பட்டு தன் தந்தை விவசாயத்திற்கு பெற்ற கடன், தங்கையின் திருமண செலவு இவைகளை சரி செய்ய வேண்டும் என்று கருதி நகர்புறம் நோக்கி வேலைக்கு செல்கிறான். தனியார் நிறுவனத்தில் நல்ல வேலையில் அமர்கிறான். அந்த கம்பெனி உரிமையாளருக்கு உழைப்பை காட்டி உண்மையாக இருக்கிறான். அங்கு ஒரு பெண் மேற்பார்வையாளராக வருகிறாள். அந்த பெண் கம்பெனி உரிமையாளரின் மகளாவாள். அந்த இளைஞனின் வேலையை நேர்மையாகவும் கடமையாகவும் செய்து வருவதை கண்டு அவன் மேல் அன்பு செலுத்துகிறாள், காதல் கொள்கிறாள். இந்த காதலை கம்பெனி உரிமையாளரான தந்தையும் ஏற்கிறார். மகிழ்ச்சியில் இருக்கும் அவ்விளைஞன் திடீரென மனவிரக்தி அடைகிறான். தன்னையும் தன் சமூகம் குறித்து அவர்களது உறவினர்கள் இழிசொல்பேசி வருகின்றார்கள். அன்று முதல் குழப்பத்தில் இருக்கும் உரிமையாளர் சாதியா மனிதனா என்று சிந்தித்து ஒரு முடிவு எடுக்கிறார்.

ஸ்ரீ ரெங்கா மூவீஸ் சார்பில் த.ரெங்கராஜன் தயாரித்திருக்கும் இப்படத்தில் கதாநாயகனாக ராஜவேல் சண்முகம், கதாநாயகியாக சுஷ்மிதா நடிக்க
தர்மர் பெரியசாமி,
பிரேமா ஆகியோர் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவு-
கனி மு.சிவசக்தி
இசை-ஸ்ரீஜித்
எடிட்டிங் – ராம்நாத்
மக்கள் தொடர்பு
-வெங்கட்

கதை திரைக்கதை வசனம் பாடல்கள் தயாரிப்பு-
த.ரெங்கராஜன்

இயக்கம்-
தர்மர் பெரியசாமி

படத்தின் அனைத்து வேலைகளும் முடிவடைந்து விட்டது. இம்மாதத்தில் வெளிவருகிறது.