ரூட் நம்பர். 17 தமிழ் திரைப்பட விமர்சனம்

121

நேநி எண்டர்டெயின்மென்ட்ஸ் சார்பில் டாக்டர் அமர் ராமச்சந்திரன் தயாரித்திருக்கும்; ‘ரூட் நம்பர் 17’ படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் அபிலாஷ் ஜி தேவன்.இதில் ஜித்தன் ரமேஷ் , அகில் பிரபாகர் , அஞ்சு ஓடியா ,அஞ்சனா, மதன் குமார்,ஹரீஷ் பேரடி ஆகியோர் குறிப்பிட்ட கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

ஒரு காட்டுப்பகுதி இருக்கும் ரூட் நம்பர் 17 பாதையில் ஆறு மணிக்கு மேல் யாரும் பயணிப்பதில்லை. முப்பது வருடங்களாக மூடப்பட்ட பாதையில் பயணிப்பவர்கள் அனைவரும் இறந்து விடுவதாலும் ஆபத்து நிறைந்த பகுதிகாக கருதப்படுகிறது.இந்த பகுதிக்கு முன்னால் அமைச்சரின் மகன் கார்த்திக் மற்றும் அவரின் காதலி அஞ்சனா  உல்லாச ஜாலி டிரிப்பிற்காக அங்கே வருகின்றனர். அன்றிரவு அவர்களை பரட்டை தலை முடியும், தாடியும் கொண்ட ஃப்ரெடி  கொலைவெறியுடன் தாக்கி குகைக்குள் அடைத்து வைக்கிறார். கடத்திச்செல்லப்பட்டவர்கள் என்ன ஆனார்கள் ,அவர்களை கண்டுபிடித்தார்களா என்பதே மீதி கதை .

நாயகன் ஜித்தன் ரமேஷ், இதுவரை ஏற்றிராத கதாபாத்திரத்தில் நடித்து அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியிருக்கிறார். எந்த நடிகரும் நடிக்கத் தயங்கும் கதாபாத்திரத்தில் நடித்து அக்கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார்.

முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து படத்தில் வியக்க வைத்தவர் அஞ்சு பாண்டியா. பாறையில் வழுக்கி, சேறும் சகதியாக அக்கதாபாத்திரத்திற்கு எந்த அளவிற்கு மெனக்கெடல் கொடுக்க முடியுமோ அதை தாண்டியே கொடுத்து அப்ளாஷ் வாங்குகிறார் அஞ்சு பாண்டியா.

மற்ற நடிகர்கள் அனைவரும் தங்களுக்கு கொடுக்கப்பட்டதை அளவோடு செய்து முடித்திருக்கிறார்கள்.

த்ரில்லர் கதையாக நகர்ந்து படம் பார்ப்பவர்களை ரசிக்க வைத்திருக்கிறது.