நீலம் பண்பாட்டு மையம் ஒருங்கிணைத்த மார்கழியில் மக்களிசை 24.12.23 ஓசூரில் 24 டிசம்பர், மாலை லாவண்யா மஹால் பின்புறம், மத்திகிரி கூட்டு ரோடு மைதானத்தில் சிறப்பாக நடைபெற்றது.

44

முனுசாமி பெரிய மேளத்துடன் துவங்கிய நிகழ்ச்சியில் எழுத்தாளர் த. மு. எ. ச பொதுச்செயலாளர் ஆதவன் தீட்சண்யா சிறப்புறை வழங்கினார். இயக்குனர் பா. இரஞ்சித் சிறப்புறை வழங்கினார்.
இதனைத் தொடர்ந்து சித்தன் ஜெய மூர்த்தி குழுவின் நாட்டுப்புற இசை, ராப், இசை, கானா மற்றும் அறிவு &அம்பாசாவின் ஆகியோரின் அரங்கம் அதிரும் இசையோடு நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது

நிறைவாக நன்றி உரையில் இயக்குனர் பா. இரஞ்சித் பேசுகையில்,

இந்த இரண்டு நாள் நிகழ்வில் மக்கள் அளித்த ஆதரவு என்னை நெகிழ வைக்கிறது .
இது வெறும் கலை நிகழ்ச்சி மட்டுமல்ல இது வரலாற்றில் மனித மாண்பை மீட்டெடுக்கும் ஒரு மாபெரும் முயற்சி! என்றார்.

நடிகர் கலையரசன், இயக்குனர் லெனின்பாரதி, மற்றும் இயக்குனர் ஜெய்குமார், தினகர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.