இந்திய யூரேசியா வர்த்தக மாநாடு சென்னை கிண்டியில் உள்ள ஹில்டன் விடுதியில் நடைபெற்றது. இதில் இந்தியாவில் உள்ள கிர்கிஸ் குடியரசின் தூதர் அஸ்கர் சோல்ச்சுபெகோவிச் பெஷிமோவ், அவரது மனைவி மற்றும் வர்த்தக ஒருங்கிணைப்பாளர் திரு அசாமத் உடன் தலைமை விருந்தினராக கலந்து கொண்டார்.

146

சென்னையில் உள்ள ரஷ்ய தூதரக அதிகாரி திரு. ஒலெக் என். அவ்தீவ்; வெளிவிவகார அமைச்சின் சென்னைக் கிளைத் தலைவர் திரு.வெங்கடாசலம் முருகன்; இந்திய பொருளாதார வர்த்தக அமைப்பின் தலைவர், டாக்டர். ஆசிப் இக்பால் மற்றும் தொழில்துறை பின்னணியில் இருந்து முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்ட இந்த மாநாட்டில்
யூரேசிய பகுதிகளுடன் வணிக ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான வாய்ப்புகள் பற்றி விவாதிக்கப்பட்டது. மேலும் இந்நிகழ்ச்சியின் போது, இந்திய யூரேசியன் டிரேட் கவுன்சிலின் (ஐஇடிசி) தலைவராக
டாக்டர். ஏ.வி. அனூப், நியமிக்கப்பட்டார். அவர் இந்தியாவுக்கான கிர்கிஸ்தான் தூதரால் அதிகாரப்பூர்வ சான்றிதழுடன் கௌரவிக்கப்பட்டார்.
பின்பு கிர்கிஸ்தானின் தூதர் வணிக வாய்ப்புகளின் சாத்தியக்கூறுகள், மற்றும் இந்தியா யூரேசியா உறவுகளின் வலு குறித்து பேசினார்.