ஜெயராம் மகன் காளிதாஸ் நடித்துள்ள ‘ அவள் பெயர் ரஜினி’ விமர்சனம்

61

அவள் பெயர் ரஜினி படத்தை நவரசா பிலிம்ஸ் தயாரித்துள்ளது. இப்படத்தை வினில் ஸ்கரியா வர்கீஸ் எழுதி இயக்கியுள்ளார்.படத்தின் துவக்கத்தில் நடக்கும் ஒரு மர்மமான கொலை; அது மனிதரால் நிகழ்த்தப்பட்டக் கொலையா..? இல்லை அமானுஷ்ய சக்தியால் நடந்தக் கொலையா…? என்பதில் இருக்கும் குழப்பம்… இவைகளுக்கு விடை தேடிச் செல்லும் நாயகனின் பயணமே இந்த “அவள் பெயர் ரஜினி” திரைப்படத்தின் கதை.

இந்த படத்தை கொஞ்சம் திரில்லர் பானியில் இயக்குனர் கொடுத்திருக்கிறார்.காளிதாஸ் வழக்கம் போல் இல்லாமல் இந்த படத்தில் தன்னுடைய சிறப்பான நடிப்பை கொடுத்திருக்கிறார்.இப்படத்தை காளிதாஸ் ஜெயராம் சொந்தமாக தயாரித்துள்ளார். ஆர்.ஆர்.விஷ்ணு ஒளிப்பதிவு செய்துள்ள நிலையில், இசைக்குழு 4 மியூசிக்ஸ் இசையமைத்துள்ளது. இரண்டாம் பாதியில் வேற லெவல் கலக்கி இருக்கிறார். இவர்களுடன் படத்தில் வரும் பிற நடிகர்களும் தங்களுக்கு கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்கள். எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் இந்த படத்தை பார்க்க சென்றால் ரசிகர்களுக்கு கண்டிப்பாக பிடிக்கும். சாதாரண பழிவாங்கல் கதை என்றாலும் சுவாரசியத்தையும் சில விஷயங்களையும் இயக்குனர் காண்பிப்பது பாராட்டுக்குரிய ஒன்று. ஆனால், ஆரம்பத்தில் திருநங்கை குறித்து அவர் தவறாக சித்தரிக்கும் காட்சிகளை காண்பித்திருப்பது கொஞ்சம் வருத்தத்துக்குரிய விஷயமாக இருந்தாலும் இறுதியில் அவர்களுக்கான மரியாதையை கொடுத்திருக்கிறார். மொத்தத்தில் ஒரு முறை பார்க்கலாம்