எங்க வீட்ல பார்ட்டி முகநூலில் ஏற்படும் விபரீதங்களை விளக்கும் கதை

98

இன்றைய இளைஞர்களின் கலாச்சாரம் மற்றும் அவர்களது வாழ்க்கை பாதை எவ்வாறு மாறுகிறது என்பதை சொல்லும் கதை. ஐந்து இளைஞர்கள், இரண்டு பெண்கள் முகநூல் மூலமாக பழக்கமாகி ஓரிடத்தில் சந்தித்து பார்ட்டி கொண்டாடுகிறார்கள். அதில் ஒரு பெண் கொலை செய்யப்படுகிறாள். அவளை யார் ? கொலை செய்தது, கொலை செய்ய காரணம் என்ன? என்பதை கண்டுபிடிக்கும் கதையே “எங்க வீட்ல பார்ட்டி.

ஜி.பி.ஆர்.எஸ் புரொடக்ஷன்ஸ் சார்பில் சிவப்பிரகாஷுடன் சோமனூர் மஞ்சுளா ரவிக்குமார் இணைந்து தயாரித்துள்ளனர்.

அகிலா முதலாம் வகுப்பு, கணீனியும் கழனியும், ஆகிய படங்களை இயக்கிய
கே.சுரேஷ் கண்ணா இப்படத்தை இயக்கியுள்ளார்.

துப்பறியும் கதாபாத்திரத்தில் தயாரிப்பாளர் சிவப்பிரகாஷ் நடிக்க யாத்ரா, சாசனா, ஹன்சி வர்கீஸ், சக்தி, ஒமேரா மேத்வின், தயூப், சாய் சதீஷ், கார்த்திகேயன், சிபு சரவணன் ஆகியோர் கதையின் பாத்திரங்களாக நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவு -ஆர்.பாலா இசை-வி.கோபி ஸ்ரீ
பின்னணி இசை –
சுரேஷ் சர்மா
பாடல்கள்-
சுரேஷ் நாராயணன்
தளபதி ராம்குமார்

நடனம் –
ஆர்.கே சரவணன்
மக்கள் தொடர்பு – வெங்கட்

இணை தயாரிப்பு- சோமனூர் மஞ்சுளா ரவிக்குமார்

தயாரிப்பு-சிவபிரகாஷ்

கதை திரைக்கதை
வசனம் இயக்கம் –
கே.சுரேஷ் கண்ணா

இப்படத்தின் படப்பிடிப்பு நாகர்கோவில்,முட்டம் ஆகிய இடங்களில் 14 நாட்களில் ஒரே கட்ட படபிடிப்பாக நடைபெற்று முடிவடைந்தது.

ஒரு சண்டைக் காட்சியும், இரண்டு பாடல் காட்சிகளும் இடம்பெற்றுள்ளன.

இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்க அரங்கில் நடைபெற்றது. இவ்விழாவில் இயக்குனர்கள் ஆர்.வி உதயகுமார், பேரரசு மற்றும் ஜாகுவார் தங்கம் ஆகியோர் கலந்துகொண்டு வாழ்த்தினர்.

படத்தின் அனைத்து தொழில்நுட்ப வேலைகளும் முடிவடைந்த நிலையில் திரைக்கு வர தயாராக
இருக்கிறது.