ஸ்ரீ துர்கா பரமேஸ்வரி புரடக்சன் தயாரிக்கும் பான் இந்திய படமான ‘அஜாக்ரதா’வில் ராதிகா குமாராசாமியின் கதாபாத்திர போஸ்டர் வெளியானது

142

பிரபல கன்னட நடிகையும் கர்நாடகா முன்னாள் முதலமைச்சர் குமாரசாமியின் மனைவியுமான குட்டி ராதிகா என அழைக்கப்படும் ராதிகா குமாரசாமி, கர்நாடாகவிலேயே சூப்பர் ஹிட் பட தயாரிப்பு நிறுவனம் என பெயரெடுத்த ஸ்ரீ துர்கா பரமேஸ்வரி புரடக்சன் தயாரிக்கும் ‘அஜாக்ரதா’ என்கிற படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். ரவிராஜ் தயாரிப்பில் உருவாகும் இந்தப்படத்தை இயக்கவுள்ள இயக்குநர் சசிதர் மிக பிரமாண்டமாக உருவாக்க முடிவு செய்துள்ளார். அதற்கேற்றபடி மிகப்பெரிய அளவில் செட் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

ராதிகா குமாரசாமியின் பிறந்தநாளில் அவரை வாழ்த்தும் விதமாக ராதிகாவின் கதாபாத்திர போஸ்டரை ஹிந்தி உள்ளிட்ட 7 மொழிகளில் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது. சிவப்பு நிற பட்டுப்புடவையில் மிகுந்த ஆபரணங்களுடன் அதிரடியாக காட்சியளிக்கிறார் ராதிகா. அவர் பின்னால் பல தீபங்கள் இருப்பதை பார்க்க முடிகிறது. அவருடைய பிறந்தநாளுக்கு மட்டுமல்லாமல் தீபாவளிக்கும் சேர்த்து இது ஒரு பொருத்தமான போஸ்டர் தான் .

‘தி ஷேடோஸ் பிஹைன்ட் தி கர்மா’ என்பதுதான் இந்தப்படத்தின் டேக்லைன். பிரபல பாலிவுட் நடிகர் ஒருவர் இந்தப்படத்தில் முதன்மை கதாபாத்திரங்களில் ஒருவராக நடிக்க உள்ளார். விரைவில் அவரது பெயர் அறிவிக்கப்படும்.

ஆக்சன் த்ரில்லராக உருவாக உள்ள இந்தப்படத்தில் ஸ்ரேயாஸ் தல்பேட் முக்கிய பங்காக இருக்கிறார். மேலும் சுனில், ராவ் ரமேஷ், ஆதித்யா மேனன், தேவராஜ், வினய் பிரசாத், ஷ்ரவன் மற்றும் பல தென்னிந்திய நட்சத்திரங்கள் இந்தப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளனர்.