மக்களை மகிழ்விக்கவே நடிகனானேன்

643

நடிகர் விஜய் கௌரிஷ் கதை நாயகனாக நடிக்கும் “வெள்ளி மேகம்” படத்தின் பூஜை சென்ற வாரம் நடந்தது. படப்பிடிப்பு அடுத்த மாதம் நடக்க உள்ளது. நடிகர் விஜய் கௌரிஷ் “பார்” ,”பியார்”, “ரத்த சங்கிலி” போன்ற பல குறும்படங்களிலும், நடிகை அமலாபாலின் “கடாவர்”, இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் பிரபுதேவாவின் “பகீரா” போன்ற படங்களில் சிறிய கதாபாத்திரத்திலும், நடிகர் வெற்றியின் “ஜோதி” திரைப்படத்தில் முக்கிய வில்லன் வேடத்திலும் நடித்து, மக்களை கவர்ந்து உள்ளார். இதைத் தொடர்ந்து அடுத்த வருடம் வெளியாக இருக்கும் “ஸ்டார்ட் கேமரா ஆக்சன்” என்னும் படத்தில், “டூலெட்” திரைப்படத்தின் ஹீரோ சந்தோஷ் தம்பிராஜனுடன் இணைந்து முக்கிய குணச்சித்திர வேடத்தில் நடித்துள்ளார். அதைத் தொடர்ந்து விஜய் கௌரிஷ் ஹீரோவாக நடித்துள்ள, இயக்குனர் ராஜீவ் மேனன் உதவியாளரான, அறிமுக இயக்குனர் எஸ்.எஸ்.முருகராசு இயக்கத்தில் பெயரிடப்படாத திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், அதன் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் வேகமாக நடந்து கொண்டுள்ளது. அடுத்த மாதம் “வெள்ளி மேகம்” திரைப்படத்தில் கதையின் நாயகனாக நடிக்க உள்ள நடிகர் விஜய் கௌரிஷ், அடுத்தடுத்து தனக்கு நல்ல கதாபாத்திரம் உள்ள நல்ல கதைகளில் நடித்து, மக்களின் வரவேற்பை பெற, வித்தியாசமான கதைகளில் நடித்து வருகிறார்…

மக்களை மகிழ்விப்பதே தனது நோக்கம் என்கிறார் நடிகர் விஜய் கௌரிஷ்!