ரிலீஸ் தேதி வரை கதையின் முக்கிய திருப்பத்தை பாதுகாக்கும் விதமாக ‘டைகர் 3’யின் 2வது பாடலான “உயிர் உலா உலா”வை நிறுத்தி வைக்கும் யஷ்ராஜ் பிலிம்ஸ்

137

ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் என்பதற்காகவே யஷ்ராஜ் பிலிம்ஸ் எப்போதுமே தங்களது ஸ்பை யுனிவர்ஸ் வரிசை படங்களின் ரகசியங்களை காப்பதில் உறுதியாக இருந்து வருகிறது. வரும் நவ-12 ஞாயிறன்று தீபாவளி பண்டிகையில் ‘டைகர் 3’ வெளியாகும் வரை அதன் கதையின் முக்கிய திருப்பம் வெளியாகாமல் தடுப்பதற்காக 2வது பாடலான ‘உயிர் உலா உலா’வை நிறுத்தி வைக்க தீர்மானித்திருக்கிறார் ஆதித்யா சோப்ரா.

இதுகுறித்து இயக்குநர் மனீஷ் சர்மா கூறும்போது, “இந்தப்படத்தில் டைகரும் சோயாவும் மிகமிக பெர்சலான மற்றும் தீவிரமான பயணத்தை மேற்கொள்கிறார்கள். அதைத்தான் ‘உயிர் உலா உலா’ பாடல் விவரிக்கிறது. இந்தப்படத்தில் அது படமாக்கப்பட்டுள்ள விதம், சினிமாவாக பார்க்கும் அந்த தருனத்தின்போது புதிய அனுபவமாக இருக்கவேண்டும் என்பதற்காக நாங்கள் உண்மையிலேயே முக்கியமான கதைக்கருக்களை பிடித்து வைத்திருக்க விரும்பினோம்” என்கிறார்

மேலும் மனீஷ் கூறும்போது, “சல்மான் கானை வைத்து படமாக்கப்பட்ட படத்தின் ஆன்மாவான பாடல் இது என்பது தெரிந்தாலும் இந்த பாடலை நிறுத்திவைக்கும் முடிவை எடுத்திருக்கிறோம்.. இது உண்மையிலே கடினமாகத்தான் இருக்கிறது” என்கிறார்

மேலும் அவர் கூறுகையில், “ஆனால் இறுதியில் ‘உயிர் உலா உலா’ பாடலை கதையின் சூழலுடன் நீங்கள் கேட்கும்போது நாங்கள் சரியான விஷயத்தை தான் செய்தோம் என்பது உங்களுக்கு தெரியவரும் என்பதையும் நாங்கள் அறிவோம். இது ஒரு மிக மிகப்பெரிய தருணம் என்பதுடன் அது ‘டைகர் 3’ படம் வெளியாகும் நாளில் இன்னும் உற்சாகத்தை கொடுக்கும் என்பதையும் நாங்கள் உணர்கிறோம்” என்கிறார்.

சல்மான் கான், கத்ரீனா கைப் இருவருமே தங்களது பெருமைமிகு கதாபாத்திரங்களான டைகர் மற்றும் சோயா என்கிற சூப்பர் உளவாளிகளாக இந்த ‘டைகர் 3’ என்கிற மூன்றாம் பாகத்திற்கு மீண்டும் திரும்பியுள்ளனர். யஷ்ராஜ் பிலிம்ஸின் ஸ்பை யுனிவர்ஸ் படங்களின் சினிமா காலவரிசையில் இது 5வது படமாகும். ஏக் தா டைகர், டைகர் ஜிந்தா ஹை, வார் மற்றும் பதான் என இதற்கு முந்தைய நான்கு படங்களும் பிளாக் பஸ்டர் வெற்றிப்படங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

‘உயிர் உலா உலா’ பாடலின் ஆடியோவை கேட்டு மகிழ இந்த லிங்க்கை கிளிக் செய்யுங்கள்