’வெப்’ விமர்சனம்

133

நடிகர்கள் : நட்டி நட்ராஜ், ஷில்பா மஞ்சுநாத், மொட்டை ராஜேந்திரன், முரளி, அனன்யா மணி, சாஷ்வி பாலா, சுபபிரியா மலர்
இசை : கார்த்திக் ராஜா
ஒளிப்பதிவு : கிரிஸ்டோபர் ஜோசப்
இயக்கம் : ஹாரூன்
தயாரிபு : வேலன் புரொடக்‌ஷன்ஸ் – வி.எம்.முனிவேலன்

ஐடி நிறுவனத்தில் பணியாற்றும் ஷில்பா மஞ்சுநாத், சாஷ்வி பாலா, சுபபிரியா மலர் ஆகியோர் விடுமுறை நாட்களில் மது விருந்து, கொண்டாடம் என்று ஜாலியாக வாழ்கிறார்கள். ஆனால், அவர்களுடைய மது பழக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போகிறது. இதற்கிடையே ஒரு நாள் மது குடித்துவிட்டு போதையில் பயணிக்கும் மூவரையும் நட்டி நட்ராஜ் கடத்தி ஒரு பாழடைந்த வீட்டில் அடைத்து வைக்கிறார். அவர் யார்? எதற்காக மூன்று பெண்களை கடத்தினார்? என்பதே படத்தின் மீதிக்கதை.

நட்டி நட்ராஜ் வித்தியாசமான கதபாத்திரத்தில், வித்தியாசமாக நடித்து அசத்துகிறார். அதிகமாக வசனம் பேசவில்லை என்றாலும் தனது கண்களினாலேயே பெண்களை பயமுறுத்துபவர், ஒரு சைக்கோ வில்லனை போல் மிரட்டவும் செய்திருக்கிறார்.

ஷில்பா மஞ்சுநாத், சாஷ்வி பாலா, சுபபிரியா மலர் ஆகிய மூன்று பேரும் கதாபாத்திரத்திற்கு பொருத்தமான தேர்வாக இருக்கிறார்கள். குடித்துவிட்டு கும்மாளம் போடும் அவர்களது ஆட்டமும், அலப்பறையும் ரசிக்க வைக்கிறது.

அனன்யா மணி, முரளி, மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட படத்தில் நடித்திருக்கும் நடிகர்கள் அனைவரும் கொடுத்த வேலையை நேர்த்தியாக செய்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் கிரிஸ்டோபர் ஜோசப்பின் ஒளிப்திவு கதைக்கு ஏற்ப பயணித்துள்ளது. பழைய வீட்டையும், அதில் அடைத்து வைக்கப்பட்ட நாயகிகளின் நிலையையும் மிக நேர்த்தியாக படமாக்கியிருக்கிறார்.

கார்த்திக் ராஜாவின் இசை எதிர்பார்த்த அளவுக்கு இல்லை என்றாலும், ஏமாற்றம் அளிக்காத வகையில் இருக்கிறது.

இளை சமூகத்தினருக்கு நல்ல கருத்தை சொல்லும் விதமாக கதை எழுதி இயக்கியிருக்கும் இயக்குநர் ஹாரூன், சைக்கோ த்ரில்லர் ஜானரில் ஒரு விழிப்புணர்வு படத்தை கொடுத்திருக்கிறார்.

படம் தொடங்கி இடைவேளை விடும் வரை என்ன நடக்கப் போகிறது, என்பதை நாம் யூகிக்கும்படி இருந்தாலும், க்ளைமாக்ஸில் இயக்குநர் ஹாரூன் வைத்த ட்விஸ்ட் யாரும் எதிர்பார்க்காத ஒன்றாக இருக்கிறது.

சில குறைகள் இருந்தாலும் நல்ல விஷயத்தை ஒரு கமர்ஷியல் திரைப்படமாக ரசிக்கும்படியும் கொடுத்ததில் இயக்குநர் ஹாரூன் வெற்றி பெற்றிருக்கிறார்.

ரேட்டிங் 2.8/5