’சான்றிதழ்’ விமர்சனம்

194

நடிகர்கள் : ஹரிகுமார், ரோஷன் பஷீர், ராதாரவி, அபு கான், ரவிமரியா, மனோபாலா, அருள்தாஸ், கெளசல்யா, அஷிகா அசோகன், தனிஷா குப்பண்ட, ஆதித்யா கதிர், காஜல் பசுபதி, உமா ஸ்ரீ
இசை : பைஜு ஜேக்கப்
ஒளிப்பதிவு : எஸ்.எஸ்.ரவிமாறன் சிவன்
இயக்கம : ஜெயச்சந்திரன்
தயாரிப்பு : வெற்றிவேல் சினிமாஸ் – எஸ்.ஜே.எஸ்.சுந்தரம் & ஜேவிஆர்

தறுதலை கிராமம் என்ற பெயர் மட்டும் இன்றி அந்த கிராம மக்களும் தறுதலைகளாக இருப்பதை மாற்ற வேண்டும் என்ற முயற்சியில் நாயகன் ஹரிகுமார் ஈடுபடுகிறார். ஆனால், அவரது முயற்சி ஒவ்வொன்றும் தோல்வியில் முடிகிறது. இருந்தாலும் மனம் தளராத ஹரிகுமார், தனது கிராமத்தையும், மக்களையும் மாற்ற தொடர்ந்து போராடுபவர், இறுதியாக ஒரு முடிவு எடுக்கிறார். அது என்ன? அதனால் அந்த கிராமம் மாறியதா? இல்லையா? என்பதே படத்தின் மீதிக்கதை.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஹீரோவாக களம் இறங்கியிருக்கும் ஹரிகுமார், அழுத்தமான கதாபாத்திரத்தில் அமைதியாக நடித்து கவர்கிறார்.

இளம் காதல் ஜோடிகளாக நடித்திருக்கும் ரோஷன் பஷீர் – ஆஷிகா அசோகன் ஜோடி, ராதாரவி, கெளசல்யா, மனோபாலா, ரவி மரியா ஆகியோர் கதாபாத்திரங்களை உணர்ந்து நடித்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் எஸ்.எஸ்.ரவிமாறன் சிவன் மற்றும் இசையமைப்பாளர் பிஜு ஜேக்கப் ஆகியோர் கதைக்கு ஏற்ப பயணித்திருக்கிறார்கள்.

எழுதி இயக்கியிருக்கும் ஜெயச்சந்திரன், மக்களுக்கு நல்ல விஷயங்களை சொல்லும் நோக்கில் இப்படத்தை இயக்கியிருக்கிறார்.

தங்களுக்குள்ளே கட்டுப்பாடுகளை வகுத்துக்கொண்டு ஒற்றுமையாகவும், ஒழுக்கமாகவும் வாழு கருவறை கிராமம் இயக்குநரின் கற்பனையாக இருந்தாலும், அப்படி ஒரு கிராமம் இருந்தால் நிச்சயம் இளைய தலைமுறை நல்வழியில் நடப்பது உறுதி.

கமர்ஷியல் விஷயங்கள் படத்தில் இருந்தாலும், படத்தின் மையக்கரு நல்ல விஷயங்களில் மட்டுமே மக்கள் கவனம் செலுத்த வேண்டும் என்பதை அழுத்தமாக சொல்வதால், படத்தில் இருக்கும் சிறிய குறைகளை தவிர்த்துவிட்டு இந்த படத்தை தாராளமாக பார்க்கலாம்.

ரேட்டிங் 2.5/5