தென் இந்திய சினிமாவில் தனது தனித்துவமான இசையால் புகழ்பெற்ற இசையமைப்பாளர் ஹேஷம் அப்துல் வஹாப் (Hesham Abdul Wahab) பாலிவுட் திரையுலகில் கால்பதித்திருக்கிறார். சஞ்சய் லீலா பன்சாலி (Sanjay Leela Bhansali) தயாரிக்கும் “தோ திவானே ஷெகர் மெய்ன்” (Do Deewane Sheher Mein) திரைப்படத்தின் மூலம், ஹேஷாம் இந்தி திரையுலகில் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார்.இது தென் இந்திய திரைப்பட உலகுக்கே பெருமை சேர்க்கும் தருணமாக அமைந்துள்ளது. இசைக்காக அறியப்படும் ஒரு படைப்பாளி, பல மொழித் திரையுலகுகளை வெற்றிகரமாக கடந்து, இந்தியாவின் மிகப்பெரிய சினிமா தளமான பாலிவுட்டில் அறிமுகமாகுவது குறிப்பிடத்தக்கது.
தற்போது ஹேஷம் அப்துல் வஹாப் பல பிரம்மாண்ட படைப்புகளில் இசையமைப்பாளராக பணியாற்றி வருகிறார். தெலுங்கில் ஆதித்யா ஹாசன் (Adithya Haasan) இயக்கும் பிரம்மாண்ட படம், ஹாய் நானா இயக்குநர் சௌர்யுவ்(Shouryuv) உடன் ஒரு புதிய படம், மேலும் “ஹிட்” படத்தின் இயக்குநர் சைலேஷ் கோலனு (Sailesh Kolanu) உடன் ஒரு திரைப்படத்திலும் பணியாற்றி வருகிறார். மேலும் தமிழில் அர்ஜூன் தாஸ் நடித்துவரும் சூப்பர்ஹீரோ திரைப்படம் , அவரது அடுத்த தமிழ் வெளியீடாக உருவாகி வருகிறது. இதனுடன், பிரியங்கா மோகன் நடிப்பில் உருவாகும் மேட் இன் கொரியா (Made in Korea) — Netflix நிறுவனம் தயாரிக்கும் முதல் இந்தோ–கொரியன் முழுநீள திரைப்படம் இது.சர்வதேச அளவில் கவனம் பெறும் ஒரு முக்கியமான இந்தியா–தென் கொரியா கூட்டுத் தயாரிப்பாக இந்த படம் உருவாகி வருகிறது.இதற்கிடையில், ஹேஷம் கன்னட திரையுலகிலும் அறிமுகமாகியுள்ளார். கணேஷ் (Golden Star Ganesh) நடித்துவரும் படத்திற்கு இசையமைத்துள்ளார். மலையாளத்தில், விரைவில் வெளியீட்டுக்குத் தயாராக இருக்கும் மதுவிது திரைப்படத்திற்கும் ஹேஷம் இசையமைத்துள்ளார்.
