அகம் கல்வி மற்றும் அறக்கட்டளை சார்பில் கல்வி உதவி தொகை வழங்கும் விழா,மடிப்பாக்கத்தில் நடைப்பெற்றது. 10 மற்றும் 12 ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு ஊக்க தொகை மற்றும் பரிசுகள் வழங்கி வாழ்த்து தெரிவித்தனர்.

45

சென்னை மடிப்பாக்கம் தனியார் மண்டபத்தில் அகம் கல்வி மற்றும் அறக்கட்டளை சார்பில் கல்வி ஊக்க தொகை வழங்கும் விழா அகமுடையார் கல்வி வளர்ச்சி சங்கம் மற்றும் அறக்கட்டளைகள் தலைவர் இராவணன் ஞானசுந்தரம் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இவ்விழாவிற்கு சிறப்பு விருந்தினராக ஏ.ஆர்.ஜே. பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியின் நிறுவனத் தலைவர் ஜீவகன் அய்யநாதன், சமூக ஆர்வலரும், மெகா பவுண்டேஷன் நிறுவனருமான நிமல் ராகவன், நாடக தயாரிப்பாளரும், கலைஞருமான கலைமாமணி சோலைராஜேந்திரன், தயாரிப்பாளரும், நடிகருமான கலைமாமணி அழகன் தமிழ்மணி ஆகியோர் கலந்து கொண்டு தங்களது வாழ்க்கை வரலாற்று அனுபவங்களை மாணவர்களுடன் பகிர்ந்து கொண்டு நாம் படித்த கல்வியே நம்மை உயர்த்தும் என பல்வேறு கருத்துக்களை எடுத்துரைத்து சிறப்புரையாற்றினர்.

 

இதனை தொடர்ந்து 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு ஊக்க தொகை மற்றும் பதக்கங்களும், விருதுகளும் வழங்கி வாழ்த்து தெரிவித்தனர்.

இந்நிகழ்ச்சியில் அகமுடையார் கல்வி மற்றும் அறக்கட்டளையின் பொருளாளர்கள் ராஜூ, கணேசன் மற்றும் செல்வி சுப்பிரமணியம், மற்றும் அகமுடையார் கல்வி வளர்ச்சி சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் உட்பட ஏராளமான மாணவ, மாணவிகள், பெற்றோர்கள் ஏராளமனோர் கலந்து கொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அறக்கட்டளையின் தலைவர் இராவணன் ஞானசுந்தரம் பேசுகையில் அரசு பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்கள், ஆதரவற்ற மாணவர்கள் மற்றும் மாற்று திறனாளிகளுக்கு கல்வி ஊக்க தொகை வழங்கி ஒவ்வொரு ஆண்டும் வழங்கி வருகிறோம் எனவும் எங்கள் சங்கத்தின் முலமாக , மாவட்ட பிரதிநிதிகள் முலமாக தகுதி உடையவர்களுக்கு மட்டுமே வழங்கட்படும் எனவு மாணவர்கள் மேன்மேலும் வளர்ந்து மற்றவர்களை கைதூக்கி விடவேண்டும் என்பதே எங்களது குறிக்கோள் என தெரிவித்தர்ர்.