பூவிருந்தவள்ளியில் தனியார் கல்வி நிறுவனத்தை கண்டித்து 500க்கும் மேற்பட்ட மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு
கல்வி நிறுவனம் சார்பில் கட்டப்பட்டு வரும் கட்டுமான பணிகளில் உள்ளூர் மக்களுக்கு வேலை தராமல் வெளி ஆட்களை வைத்து கனிம வள கொல்லையில் ஈடுபடுவதாக புகார்.
சென்னை பூவிருந்தவல்லியில் சுமார் 15 ஏக்கர் நிலத்தில் சவிதா கல்வி குழுமம் சார்பில் கட்டுமான பணி நடைபெற்று வருகிறது.இதன் ஆரம்பகட்ட பணியாக அங்கு பொக்லின் இயந்திரம் மூலம் அங்குள்ள கட்டிடங்கள் இடிக்கப்பட்டு கீழே உள்ள மணல்கள் வெட்டி எடுக்கப்படுகின்றன. இந்த நிலையில் திடீரென அந்த நிறுவனத்தின் முன்பு பெண்கள் உள்ளிட்ட 500க்கும் மேற்பட்டோர் திரண்டு முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தனியார் கல்வி நிறுவனம் சார்பில் கட்டப்படும் கட்டுமான பணிகளில் உள்ளூர் மக்களுக்கு வேலை தரவில்லை என்றும் வெளி ஆட்களை வைத்து அங்கிருந்து மணல்களை இரவு நேரத்தில் திருடி வருவதாகவும் குற்றம்சாட்டினர்.இதனால் அப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் பாதிப்புள்ளாகும் என்றும் தெரிவித்தனர். எனவே உள்ளுர் மக்கள் பயன்படும் வகையில் பணிகளை தரவேண்டும் என்றும் சட்டவிரோதமாக மணல் அள்ளுவதை தடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர்.ஒரே நேரத்தில் 500 க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் அங்கிருந்த பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி கூட்டத்தை கலைத்தனர்