Verus Productions வழங்கும் “ROOT – RUNNING OUT OF TIME” ஹீரோ கெளதம் ராம் கார்த்திக் டப்பிங் பணிகளை முடித்தார்
Verus Productions நிறுவனத்தின் எதிர்பார்க்கப்படும் சை-ஃபை திரில்லர் “ROOT – Running Out of Time” படத்தின் டப்பிங் பணிகளில் ஒரு முக்கிய கட்டமாக, படத்தின் நாயகன் கெளதம் ராம் கார்த்திக் தனது டப்பிங் பணிகளை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளார்.
சூரியப்பிரதாப். S எழுதி இயக்கும் இந்த படத்தில், பாலிவுட் நடிகர் அபார்ஷக்தி குரானா தனது முதல் தமிழ் படமாக அறிமுகமாகிறார். மேலும் பாவ்யா திரிகா, வை.ஜீ. மகேந்திரா, பாவனி ரெட்டி, லிங்கா, RJ ஆனந்தி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். விஞ்ஞானத்தையும் உணர்வுகளையும் இணைக்கும் புதுமையான கோணத்தில் இந்த படம் அமைந்துள்ளது.
சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் விரிவாக படமாக்கப்பட்ட “ROOT” தற்போது போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் இறுதி கட்டத்தை நோக்கி நகர்கிறது.
படத்தின் தொழில்நுட்பக் குழு:
Arjun Raja – ஒளிப்பதிவு
John Abraham – எடிட்டிங்
Vithushanan – இசை
Dr. D. Alice Angel – CEO
Miracle Michael – ஆக்ஷன் குரியோகிரபி
Santhakumar (Hocus Pocus Studios) – VFX
Deepthi RJ – ஆடை அலங்காரம்
Dhanalingam – தயாரிப்பு கட்டுப்பாடு
Rekha – Public Relations