சென்னை ஃபின்டெக் சிட்டி -இல் கிரேட்-A அலுவலக மேம்பாட்டுத் திட்டத்திற்காக ஆக்சிஸ் கமர்சியல் ரியல் எஸ்டேட் ஃபண்ட் மற்றும் டிஷ்மன் ஸ்பயெர் நிறுவனங்கள் அடிக்கல் நாட்டியுள்ளன

24

 

சென்னை | நவம்பர் 27, 2025: ஆக்சிஸ் கமர்சியல் ரியல் எஸ்டேட் ஃபண்ட் (Axis CRE Fund), உலகளாவிய ரியல் எஸ்டேட் நிறுவனமான டிஷ்மன் ஸ்பயெர் நிறுவனத்துடன் இணைந்து, சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள ஃபின்டெக் சிட்டி யில் அதன் வணிக வளாகமான “The Cube” இன் அடிக்கல் நாட்டு விழாவை அறிவித்துள்ளது. “ஃபின்டெக் சிட்டி” தமிழ்நாடு தொழில் மேம்பாட்டுக் கழகத்தால் (TIDCO) உருவாக்கப்பட்ட அதிநவீன உள்கட்டமைப்பு வசதிகள் கொண்ட ஒரு திட்டமாகும். ஏலத்தில் விற்கப்பட்ட முதல் இரண்டு நிலங்களில் ஒன்றை ஆக்சிஸ் CRE ஃபண்ட் பெற்றுள்ளது.
இந்த திட்ட தளத்தில் இன்று நடைபெற்ற அடிக்கல் நாட்டு விழாவில், தமிழ்நாடு அரசின் தொழில்துறை அமைச்சர் டாக்டர் டி.ஆர்.பி. ராஜா, தமிழ்நாடு அரசின் MSME துறை அமைச்சரும் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினருமான திரு. டி.எம். அன்பரசன், தொழில்துறை துறை செயலாளர் திரு. அருண் ராய் மற்றும் TIDCO நிர்வாக இயக்குநர் திரு. சந்தீப் நந்தூரி உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். ஆக்சிஸ் CRE ஃபண்ட் முதலீட்டு மேலாளரான ஆக்சிஸ் அஸெட் மேனேஜ்மென்ட் கம்பெனி லிமிடெட் (ஆக்சிஸ் AMC) இன் பிரதிநிதியாக நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை செயல் அலுவலர் திரு. B. கோப்குமார் மற்றும் டிஷ்மன் ஸ்பயெர் இந்தியா நிறுவனத்தின் பிரதிநிதியாக நாட்டுத் தலைவர் திரு. பர்வேஷ் சர்மா ஆகியோர் கலந்து கொண்டனர்.
வணிகங்கள் மற்றும் முதலீட்டாளர்களுக்கு அதிக வாய்ப்புகளை வழங்கும் வகையில், சென்னையின் வேகமாக வளர்ந்து வரும் வணிக மையத்திற்கான நிலையை மேலும் வலுப்படுத்துகின்ற ஆக்சிஸ் CRE ஃபண்ட் மற்றும் டிஷ்மன் ஸ்பயெர் நிறுவனங்களுக்கு இடையேயான இந்த மூலோபாய கூட்டணி, சுமார் 4,00,000 சதுர அடி ‘கிரேட் A’ அலுவலக இடத்தை உருவாக்க திட்டமிட்டுள்ளது. நவீன வசதிகள்

மற்றும் நிலையான வடிவமைப்பு அம்சங்களைக் கொண்டிருக்கும் இந்த வரவிருக்கும் ‘கிரேட் A’ அலுவலக கட்டிடம், சென்னையில் BFSI (வங்கி, நிதி சேவைகள் மற்றும் காப்பீடு) துறையில் இயங்கும் நிறுவனங்களுக்கான, பிரீமியம் வணிக இடத்தின் அதிகரித்த தேவையைப் பூர்த்தி செய்யும்.
இந்த நிகழ்வில் உரையாற்றிய ஆக்சிஸ் AMC நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி திரு. பி. கோப்குமார் கூறுகையில், “தமிழ்நாட்டின் துடிப்பான வளர்ச்சி வரலாற்றின் மீதான எங்கள் நம்பிக்கை மற்றும் உலகளாவிய வணிகங்களுக்கு ஒரு விருப்பமான சென்றடையும் இடமாக அதன் எழுச்சி ஆகியவற்றிற்கு ஒரு சான்றாக சென்னையின் ஃபின்டெக் சிட்டி யில் இந்த மைல்கல்லான வளர்ச்சித் திட்டத்தைத் தொடங்குவதில் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம். சென்னை நகரம் வலுவான அடிப்படைகளான வலுவான உள்கட்டமைப்பு, திறமையான திறமையாளர்கள் குழு மற்றும் முற்போக்கான தொழில்துறை சுற்றுச்சூழல் அமைப்பு ஆகியவற்றை தொடர்ந்து நிரூபித்து வருகின்றதன் மூலம் கிரேட்-A வணிக இடங்களுக்கு இதை ஒரு உகந்த இடமாக ஆக்குகிறது,” என்று கூறினார்.
தமிழ்நாடு அரசின் தொழில்துறை அமைச்சர் டாக்டர் டி.ஆர்.பி. ராஜா கூறுகையில்,” ஃபின்டெக் சிட்டி யில் உள்ள ‘தி கியூப்’, BFSI துறையின் சிறந்த திறமையாளர்கள், சிறந்த நிறுவனங்கள் மற்றும் மிகவும் முன்னோக்கிய யோசனைகள் ஆகியவற்றை ஈர்க்கிற உலகத் தரமான உள்கட்டமைப்புகளை கட்டியெழுப்புவதற்கான தமிழ்நாட்டின் திறன்களை பிரதிபலிக்கிறது. ஆக்சிஸ் மற்றும் டிஷ்மன் நிறுவனங்களுக்கு இடையேயான இந்த கூட்டாண்மை , உலகளாவிய திறன், வலுவான வடிவமைப்பு சிந்தனை மற்றும் தமிழ்நாட்டின் கோட்பாட்டு லட்சியம் ஆகியவை ஒன்றிணையும் போது என்ன சாத்தியமாகும் என்பதைக் காட்டுகிறது. மாண்புமிகு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களின் தலைமையின் கீழ், BFSI மற்றும் ஃபின்டெக் துறைகளில் சென்னைக்கான ஒரு புதிய கட்டத்தின் தொடக்கம் என்றே ஃபின்டெக் சிட்டி யை நாங்கள் கருதுகிறோம்.” என்று கூறினார்.
டிஷ்மன் ஸ்பையெர் இந்தியா நிறுவனத்தின் நாட்டுத் தலைவர் திரு. பர்வேஷ் சர்மா கூறுகையில், இந்த “தி கியூப் திட்டத்தின்

அடிக்கல் நாட்டும் விழா, இந்தியாவில் டிஷ்மன் ஸ்பையெர் இன் தொடர்ந்து வளர்ந்து வரும் வளர்ச்சியில் ஒரு முக்கிய மைல்கல்லைக் குறிக்கிறது. நாட்டின் மிக முக்கியமான மற்றும் துரிதமாக வளரும் சந்தைகளில் ஒன்றாக சென்னை உருவெடுத்து வருகிறது மேலும் ஃபின்டெக் சிட்டி நகரத்தின் வணிக வளர்ச்சியில் அடுத கட்டத்தைக் குறிக்கிறது. புதுமையை ஊக்குவித்து, பொருளாதார வளர்ச்சியை இயக்குகிற, உலகத் தரமான, நிலைத்தன்மைக்கான அலுவலக சூழல்களை உருவாக்குவதற்கான உங்கள் பகிரப்பட்ட உறுதிப்பாட்டையே தி கியூப் பிரதிபலிக்கிறது. முன்னணி வணிகங்களை ஈர்க்கும் மற்றும் சென்னையின் விரிவடைந்து வரும் நிதி மற்றும் தொழில்நுட்ப சூழலை ஆதரிக்கும் வகையில், ஆக்சிஸ் CRE ஃபண்ட் உடன் இணைந்து, எதிர்காலத்துக்கு தயாராக இருக்கும் பணிச்சூழலை வழங்க நாங்கள் நோக்கம் கொண்டுள்ளோம்.”என்று கூறினார்.
ஆக்சிஸ் கமர்சியல் ரியல் எஸ்டேட் ஃபண்ட், வகை II AIF-இன் முதல் முதலீடு இதுவாகும். ஒரு உலகளாவிய பிரிமியர் ரியல் எஸ்டேட் டெவலப்பர், உரிமையாளர் மற்றும் ஆபரேட்டரான டிஷ்மன் ஸ்பயெர் நிறுவனத்துடன் ஒரு மூலோபாய கூட்டணி மூலம், வணிக ரியல் எஸ்டேட் திட்டங்களின் அபிவிருத்தி கட்டத்தில் பங்குபெறும் ஒரு தனித்துவமான மூலோபாயத்தை இந்த ஃபண்ட் பயன்படுத்துகிறது. முன்னணி குடியிருப்பாளர்களை ஈர்ப்பதற்காக முதல் தர அடுக்கு அலுவலக இடங்களை உருவாக்குவதே இலக்காகக் கொண்டு, எட்டு முக்கிய சந்தைகளில் உள்ள வணிக ரியல் எஸ்டேட் திட்டங்களில் முக்கியமாக முதலீடு செய்வதே இந்த ஃபண்டின் கவனம் செலுத்தும் பகுதியாக இருக்கிறது.
ஆக்சிஸ் AMC பற்றி: பரஸ்பர நிதிகள், போர்ட்ஃபோலியோ மேலாண்மை சேவைகள் மற்றும் மாற்று முதலீடுகள் முழுவதும் சொத்து மேலாண்மை தயாரிப்புகளின் விரிவான தொகுப்பை வழங்குகின்ற ஆக்சிஸ் AMC இந்தியாவின் வேகமாக வளர்ந்து வரும் சொத்து மேலாளர்களில் ஒன்றாகும். கடந்த 7 ஆண்டுகளில் ஆக்சிஸ் AMC அதன் மாற்று திறன்களை கணிசமாக விரிவுபடுத்துவதில் முதலீடு செய்துள்ளது. இதுவரை, இந்த நிறுவனம் ரியல் எஸ்டேட், தனியார் ஈக்விட்டி, கட்டமைக்கப்பட்ட கடன், அளவையியல் மற்றும் பட்டியலிடப்பட்ட பங்குகள் உள்ளிட்ட திறன்களில் அதன் PMS மற்றும் AIF வணிகங்களில் ரூ. ~6000 கோடி திரட்ட முடிந்தது.

டிஷ்மன் ஸ்பயெர் பற்றி:
டிஷ்மன் ஸ்பயெர் என்பது அமெரிக்கா, ஐரோப்பா, ஆசியா மற்றும் லத்தீன் அமெரிக்கா ஆகிய பிராந்தியங்களில் உள்ள 36 முக்கிய சந்தைகளில் முதன்மைத் தரமான ரியல் எஸ்டேட்டின் ஒரு முன்னணி உரிமையாளர், உருவாக்குநர், இயக்குநர் மற்றும் முதலீட்டு மேலாளர் ஆகும். சந்தை விலை மற்றும் மலிவு விலை குடியிருப்பு சமூகங்கள், முதன்மை அலுவலக சொத்துக்கள் மற்றும் சில்லறை வணிக இடங்கள், தொழிற்துறை வசதிகள் மற்றும் கலப்புப் பயன்பாட்டு வளாகங்கள் ஆகியவை எங்கள் போர்ட்ஃபோலியாவில் பரவியுள்ளது. எங்கள் பிரேக்த்ரூ பிராபர்ட்டிஸ் கூட்டு முயற்சியின் மூலம் அதி நவீன வாழ்வியல் அறிவியல் மையங்களை நாங்கள் உருவாக்குகிறோம் மேலும் எங்கள் மூலோபாய சொத்து சார் தொழில்நுட்ப முதலீடுகளின் மூலம் புதுமைகளை ஊக்குவிக்கிறோம். 1978-ல் தொடங்கப்பட்டதிலிருந்து, டிஷ்மன் ஸ்பயெர் $128 பில்லியனுக்கும் (US) அதிகமான ஒரு ஒருங்கிணைந்த மதிப்புடன் மொத்தம் 226 மில்லியன் சதுர அடி பரப்பளவு கொண்ட 557 சொத்துக்களை கையகப்படுத்தி, உருவாக்கி, இயக்கி வருகிறது. நியூயார்க் நகரத்தின் ராக்ஃபெல்லர் சென்டர், ஷாங்காயின் தி ஸ்பிரிங்ஸ், ஃபிராங்க்பர்ட்டின் டௌனஸ் டுர்ம் மற்றும் சான் பிரான்சிஸ்கோவில் தற்போது உருவாக்கப்பட்டு வரும் மிஷன் ராக் பகுதி போன்ற பிரபலமான சொத்துக்களை எங்கள் தற்போதைய போர்ட்ஃபோலியோ உள்ளடக்குகிறது.
பொறுப்பு துறப்பு:
பத்திர முதலீடுகள் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டவை, மேலும் இந்த நிதியின் மூலோபாய நோக்கங்கள் அடையப்படும் என்பதற்கு எந்த வாக்குறுதியோ உத்தரவாதமோ இல்லை. எந்தவொரு பத்திர முதலீட்டையும் போலவே, மூலதனச் சந்தைகளைப் பாதிக்கும் காரணிகள் மற்றும் சக்திகளைப் பொறுத்து ஒரு போர்ட்ஃபோலியோவின் மதிப்பு கூடலாம் அல்லது குறையலாம். கடந்த கால செயல்திறன் எதிர்காலத்தில் செயல்திறனைக் குறிக்காது. இந்த ஆவணம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் அதை விற்பனை செய்வதற்கான வழங்கலாகவோ அல்லது அதில் குறிப்பிடப்பட்டுள்ள பத்திரங்கள் அல்லது பிற முதலீடுகளை வாங்குவதற்கான ஒரு வழங்கலுக்கான வேண்டுகோளாகவோ கருதக்கூடாது. இந்த சேவைகள் மூலம் முதலீட்டாளர்களுக்கு எந்த

உத்தரவாதமான அல்லது குறிக்கும் வருமானமும் வழங்கப்படுவதில்லை.
இந்த ஆவணத்தின் உள்ளடக்கங்களை முதலீடு, சட்டம் அல்லது வரிவிதிப்பு விஷயங்கள் தொடர்பான ஆலோசனையாகக் கருதக்கூடாது. இந்தத் தகவல் தொடர்பு தனிப்பட்ட சுற்றோட்டத்துக்காகவும், நோக்கம் கொண்ட பெறுபவரின்(களின்) பிரத்தியேக மற்றும் ரகசிய பயன்பாட்டிற்காகவும் மட்டுமே. இந்தத் தகவல்தொடர்பை முழுமையாகவோ அல்லது அதன் எந்தப் பகுதியிலோ வேறு எந்த விநியோகம், பயன்பாடு அல்லது மறுஉருவாக்கம் செய்வது அங்கீகரிக்கப்படாதது மேலும் கண்டிப்பாகத் தடைசெய்யப்பட்டுள்ளது.
அனைத்து முதலீட்டாளர்களும் நிதியின் உத்தி தொடர்பான அனைத்து விரிவான ஆவணங்களையும், ஆபத்து காரணிகள் உட்பட, படித்து, இந்த ஆவணத்தின் உள்ளடக்கங்களைப் புரிந்துகொள்ளவும்/அல்லது நிதிக்கு எந்தவொரு முதலீட்டு முடிவு/பங்களிப்பு செய்வதற்கு முன்பும் தங்கள் பங்குத் தரகர், வங்கியாளர், சட்ட ஆலோசகர் மற்றும் பிற தொழில்முறை ஆலோசகர்களை அணுக வேண்டும்.